காதலர் தினத்தில் எந்த உடை அணியலாம்? ஒவ்வொரு ஆடைக்கும் ஒரு அர்த்தம் உண்டு..!
காதலர் தினத்தன்று நீங்கள் அணியும் சிவப்பு, மஞ்சள், ஆரஞ்சு, நீலம், இளஞ்சிவப்பு, கருப்பு, பச்சை, வெள்ளை, பிரவுன், ரோஸ் நிறங்களில் நீங்கள் அணியும் உடை ஒவ்வொன்றும் வெவ்வேறு வகையான அன்பைக் குறிக்கிறது.
Valentine's Day 2024, Dress Colour: உலகம் முழுவதும் காதலர் தினம் இன்று கொண்டாடப்பட்டு வருகிறது. அந்தவகையில் உங்கள் அன்புக்குரியவருடன் கொண்டாட காத்திருந்த நாள் இன்றே நாளாகும். ஒவ்வொருவருக்கும் தங்கள் அன்பை வெளிப்படுத்தும் விதம் வித்தியாசமானது. தனது காதலை வெளிப்படுத்தவும், அன்பை காட்டவும் சில வழிகளை தேர்ந்தெடுக்கின்றனர். அதில் ஒன்று காதலர் தினத்தன்று நீங்கள் அணியும் உடையின் நிறம். நீங்கள் அணியும் ஒவ்வொரு உடைக்கும் ஒரு அர்த்தம் உள்ளது.
காதலர் தினத்தன்று (Valentines Day Dress Code) நீங்கள் அணியும் சிவப்பு, மஞ்சள், ஆரஞ்சு, நீலம், இளஞ்சிவப்பு, கருப்பு, பச்சை, வெள்ளை, பிரவுன், ரோஸ் (Red, Yellow, Orange, Blue, Pink, Black, Green, White, Brown, Rose) நிறங்களில் நீங்கள் அணியும் உடை ஒவ்வொன்றும் வெவ்வேறு வகையான அன்பைக் குறிக்கிறது.
சிவப்பு நிற ஆடை
காதலர் தினத்தில் பொதுவாக இளஞ்சிவப்பு மற்றும் சிவப்பு உடைகளை அதிகமாக அணிவார்கள். சிவப்பு என்பது அன்பையும், இளஞ்சிவப்பு என்பது மென்மையையும் குறிக்கிறது. சிவப்பு நிறத்தில் ஆடை அணிந்துக்கொண்டாள் நீங்கள் உங்கள் காதலரோடு சந்தோசமாக இருக்கிறீர்கள் என்று அர்த்தம். அதாவது ஏற்கனவே எனக்கு காதலி இருக்கிறாள் என உணர்த்துவது.
மேலும் படிக்க | Valentine Day Special: காதலர் தினத்தை மறக்கமுடியாத நாளாக மாற்ற யோசனைகள்
கருப்பு நிற ஆடை
காதலர் தினத்தில் நீங்கள் கருப்பு நிற (Black Dress) ஆடை அணிந்து சென்றால், காதலில் உங்களுக்கு ஆர்வமின்மையைக் குறிக்கும். மேலும் என்னிடம் யாரும் காதலை தெரிவிக்க முயற்சி செய்ய வேண்டாம் என்பதை மற்றவர்களுக்கு உணர்த்துகிறீர்கள் என்று அர்த்தம்.
பச்சை நிற ஆடை
காதலர் தினத்தன்று நீங்கள் பச்சை நிறத்தில் ஆடை அணிந்து கொண்டால் காதலிக்க தயாராக இருக்குறீர்கள் என்றும், உங்கள் காதலை வெளிப்படுத்த காத்துக் கொண்டு இருக்குறீர்கள் என்றும் அர்த்தம். உங்கள காதலை வெளிப்படுத்த பச்சை நிறத்தில் ஆடை அணிந்து கொண்டு செல்லுங்கள்.
நீல நிற ஆடை
காதலர் தினத்தன்று நீங்கள் நீல நிற ஆடை அணிந்து சென்றால், டேட்டிங்காக ரெடி என என்பதைக் குறிக்கும். எனக்கு காதலர் இல்லை. என்னிடம் காதலை வெளிப்படுத்தலாம் அல்லது காதலை வெளிப்படுத்த தயாராக இருக்கிறீர்கள் என்பதையும் காட்டுகிறது
மஞ்சள் நிற ஆடை
நீங்கள் சமீபத்தில் ஒருவரைப் பிரிந்திருப்பதைக் குறிக்கிறது. உடைந்த இதயத்துடன் இருப்பதாகக் காட்டும். உங்களுக்காக யாரேனும் ஒருவர் காத்துக் கொண்டிருந்தால், மஞ்சள் ஆடைக் குறியீடு மூலம் உங்கள் மனதில் என்ன இருக்கிறது என்பதை அவர்கள் அறிந்து கொள்வார்கள்.
ஆரஞ்சு நிற ஆடை
காதலர் தினத்தில் மிகவும் பிரபலமான மற்றொரு நிறம் ஆரஞ்சு. இது மகிழ்ச்சியை குறிக்கும் நிறம் நீங்கள் யாரோ ஒருவருக்கு காதலை சொல்ல போகிறீர்கள் என்பதைக் குறிக்கிறது.
சாம்பல் (கிரே) நிற ஆடை
காதல் குறித்து எந்த ஐடியாவும் இல்லை, விருப்பமும் இல்லை என்பதை வெளிப்படுத்த சாம்பல் நிறத்தில் ஆடை அணிந்து கொள்ளுங்கள்.
காதலர் தினத்தில் உங்கள் எண்ணங்களுக்கு ஏற்ப ஆடைகளை அணிந்துக்கொண்டு ஒருவருக்கொருவர் அன்பை வெளிப்படுத்துங்கள். ஒவ்வொருவரும் காதலர் தினத்தை கொண்டாடுங்கள்.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ