Chocolate Day 2023: காதலுக்கு மட்டுமல்ல அன்பான உறவுகளுக்கும் சாக்லெட் தின வாழ்த்துகள்
Valentine Chocolate Day 2023: நித்தம் நித்தம் காதல் செய்தாலும், அதை கொண்டாடும் வாரம் காதலர் வாரம். பிப்ரவரி-14 காதலர் தினத்திற்கு முன்னதாக, மலர் கொடுத்து, அன்பை வெளிப்படுத்தி இனிப்பைக் கூட்டும் நாளான சாக்லெட் தினம் இன்று பிப்ரவரி 9
Valentine Week 2023 Chocolate Day: அன்பானவர்களுக்கென பிரத்யேகமான வாரம் இது. நித்தம் நித்தம் காதல் செய்தாலும், அதை கொண்டாடும் வாரம் காதலர் வாரம். பிப்ரவரி-14 காதலர் தினத்திற்கு முன்னதாக, மலர் கொடுத்து, அன்பை வெளிப்படுத்தி இனிப்பைக் கூட்டும் நாளான சாக்லெட் தினம் இன்று பிப்ரவரி 9 .2023ம் ஆண்டின் காதலர் தினம் நெருங்கிவிட்டது, ஒவ்வொருவரும் தங்களது காதலருக்கு வித்தியாசமான பரிசு பொருட்களை கொடுத்து மகிழ்விக்க வேண்டும் என்று நினைப்பார்கள்.இன்று, பிப்ரவரி 9, உலக சாக்லேட் தினம். காதலர் வாரத்தின் மூன்றாவது நாள்.
பிப்ரவரி-14ம் தேதி காதலர் தினம் என்றால், பிப்ரவரி-7ம் தேதி முதல் கொண்டாடப்படும் காதலர் வாரத்தின் 7 நாட்கள் இவை...
பிப்ரவரி 7 - ரோஜா தினம்.
பிப்ரவரி 8 - முன்மொழியும் நாள்.
பிப்ரவரி 9 - சாக்லேட் தினம்.
பிப்ரவரி 10 - டெடி டே.
பிப்ரவரி 11 - வாக்குறுதி நாள்.
பிப்ரவரி 12 - கட்டிப்பிடி நாள்.
பிப்ரவரி 13 - முத்த நாள்.
பிப்ரவரி 14 - காதலர் தினம்.
மேலும் படிக்க | Grammy Awards 2023: இந்திய இசையமைப்பாளர் ரிக்கி கேஜ் 3வது கிராமி விருதை வென்றார்!
பிப்ரவரி 9 - சாக்லெட் தினம்
தம்பதிகள் சாக்லேட்டுகளை பரிமாறிக்கொண்டு ஒருவருக்கொருவர் தங்கள் அன்பை வெளிப்படுத்தும் சாக்லேட் தினமான இன்று, இனிப்பை மட்டுமல்ல, தங்கள் எண்ணங்களை ஆக்கப்பூர்வமாக பகிர்ந்து கொள்ளும்போது அது மிகவும் சிறப்பு வாய்ந்ததாகிறது. சாக்லேட் தினத்தில் பகிரக்கூடிய சில செய்திகள் இப்படியும் இருக்கலாம்.
இனிய சாக்லேட் தினம் 2023: வாழ்த்துகள், WhatsApp செய்திகள்
இனிக்கும் சாக்லேட்டுகள் போல, உங்கள் அன்பான மனதை விரும்புகிறேன். சாக்லெட்டின் சாக்லேட்டை போன்று இனிக்கும் உங்கள் அன்பை ஆராதிக்கிறேன். இனிய சாக்லேட் தின வாழ்த்துக்கள்.
சாக்லேட் சாப்பிடுவது மகிழ்ச்சியளிப்பது போல, உங்கள் இருப்பு என் வாழ்க்கையின் ஒவ்வொரு நொடியையும் உயிர்ப்புடன் வைக்கிறது. தயவு செய்து எப்போதும் என் பக்கத்தில் இருங்கள். இனிய சாக்லேட் தின வாழ்த்துக்கள்.
உருகும் கேரமல் முதல் மிருதுவான க்ரஞ்ச் வரை, நம் வாழ்வு எப்பொழுதும் ஜாலியாக இருக்கட்டும். இனிய சாக்லேட் தின வாழ்த்துக்கள்.
உனக்கான என் காதல் டார்க் சாக்லேட் போன்றது - தீவிரமானது மற்றும் ஆழமானது. நீங்கள் என்றென்றும் என் மனம் கவர்ந்தவராக இருப்பீர்களா? இனிய சாக்லேட் தின வாழ்த்துக்கள்.
சாக்லேட்டில் இனிப்பு இல்லை என்றால் எப்படி? என் வாழ்க்கையில் நீங்கள் இல்லை என்றால் அப்படித்தான் இருக்கும்... இனிய சாக்லேட் தின வாழ்த்துக்கள்.
மேலும் படிக்க | ஆராரோ என தாலட்டுப் பாடிய கொஞ்சும் குரலின் முதலாமாண்டு நினைவுக் கதம்பம்
என் அன்பே உனக்காக சிறந்த சாக்லேட்டுகளை வாங்க நான் புறப்பட்டேன். இருப்பினும், உன்னையும் உன் புன்னகையையும் விட இனிமையான சாக்லேட்டை நான் காணவில்லை. உங்களுக்கு மிகவும் இனிய சாக்லேட் தின வாழ்த்துக்கள்.
இந்த சாக்லேட் தினத்தில் சாக்லேட்டுகளை உங்களுக்கு பரிசாக கொடுக்கிறேன். ஆனால், நாவில் சுவைக்குக்ம் சாக்லேட்டை விட, இனிமையான சாக்லேட் நீ தான்... நான் உன்னை நேசிக்கிறேன் மற்றும் என்றென்றும் உன்னுடைய இனிய சாக்லேட்
இந்த சாக்லேட்டின் இனிப்பு சில நிமிடங்களில் முடிந்துவிடும். ஆனால் உங்கள் மீதான என் காதல் ஒருபோதும் முடிவடையாது. நான் உன்னை இப்போதும் என்றென்றும் நேசிக்கிறேன். இனிய சாக்லேட் தின வாழ்த்துக்கள்!
உங்கள் புன்னகை என் இதயத்தை உருக்குகிறது. எப்போதும் சிரித்துக் கொண்டே இருங்கள் அன்பே. இனிய சாக்லேட் தின வாழ்த்துக்கள்.
என் வாழ்க்கையில் சாக்லேட்டைப் போல இனிமையாக இருக்கும் ஒருவருக்கு இனிய சாக்லேட் தின வாழ்த்துகள்...
மேலும் படிக்க | Valentine's Day 2023: காதலர் தினத்தன்று கொடுக்க வேண்டிய 5 சாக்லேட்டுகள்!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ