வேலன்டைன் நாள் உலகம் முழுவதிலுமுள்ள மிக நெருங்கிப் பழகும் மக்கள் பலராலும் பிப்ரவரி 14 அன்று கொண்டாடப்பட்டு வருகிறது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

காதலர் தினத்தன்று காதலர்கள் தங்களுக்கிடையில் ரோஜா பூக்களை வழங்கி காதலர் தின வாழத்துக்களை தெரிவித்து காதலர் தினத்தை சிறப்பிப்பார்கள்.இந்நாளில் காதலர்கள் தங்கள் காதலை தெரிவித்துக் கொள்வது மரபாக இருக்கிறது. 


வாழ்த்து அட்டைகள், இனிப்புகள், மலர்கள் ஆகியவற்றை இந்நாளில் காதலர்கள் பரிமாறிக் கொள்கிறார்கள். 


ஆண்டுதோறும் பிப்ரவரி 14 அன்று காதலர் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. அந்த வகையில் இன்று முதல் தொடங்கி வரும் பிப்ரவரி 14 வரை வேலன்டைன் வீக் (Valentine Week) கொண்டாடம் துவங்கி உள்ளது. 


இந்நிலையில் வேலன்டைன் வீக்-கின் நான்காம் நாளான இன்று அன்பளிப்பு தினம் (Gift Day) கொண்டாடப்படுகிறது. அந்த வகையில் உங்கள் காதலிக்கு கிஃப்ட் தினத்தை நினைவூட்டும் தினமாக மாற்ற சில யோசனைகள் இதோ:-


கவிதை (Poem): உங்கள் காதலியிடம் நீங்கள் சொல்ல நினைக்கும் வார்த்தைகளை கவிதையாகவோ அல்லது கடிதமாகவோ கொடுக்கலாம். 


கையால் தயாரித்த வாழ்த்து அட்டை (Handmade card): நீங்களே ஒரு வாழ்த்து அட்டையை தயாரித்து வழங்கினால் அது மறக்க முடியாத அன்பளிப்பாக இருக்கும். 


உங்களுக்கு பிடித்த புகை படங்களுடன் கூடிய வீடியோ (Video of your best times together): நீங்கள் இருவரும் சேர்ந்து எடுத்துக்கொண்ட மகிழ்சியாக இருந்த தருணங்களின் புகைப்படங்கள் அல்லது வீடியோக்கள்.  


மிக்ஸ் பென் டிரைவ் (Mix Pen Drive): உபயோகபடுத்தும் வகையில் வழங்க படும் அன்பளிப்புகள். 


மோதிரம் (Ring): உங்கள் காதலியின் அழகான கைகளில் ஜொலிக்கும் வகையில் மோதிரம் அன்பளிப்பாக வழங்கலாம்.