வேலன்டைன் நாள் உலகம் முழுவதிலுமுள்ள மிக நெருங்கிப் பழகும் மக்கள் பலராலும் பிப்ரவரி 14 அன்று கொண்டாடப்படும் ஒரு கொண்டாட்ட நாளாகும். இந்நாளில் காதலர்கள் தங்கள் காதலை தெரிவித்துக் கொள்வது மரபாக இருக்கிறது. வாழ்த்து அட்டைகள், இனிப்புகள், மலர்கள் ஆகியவற்றை இந்நாளில் காதலர்கள் பரிமாறிக் கொள்கிறார்கள். வேலன்டைன் என்ற பெயருடைய இரு கிறித்துவத் தியாகிகளின் பெயர்களை அடுத்து இந்நாள் வேலன்டைன் நாள் என்றும் காதலர்களே பெரும்பாலும் இந்நாளைக் கொண்டாடுவதால் காதலர் நாள் என்றும் காதலர் தினம் என்றும் அழைக்கப்படுகிறது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இந்நாளில் காதலர்கள் தங்கள் காதலை தெரிவித்துக் கொள்வது மரபாக இருக்கிறது. வாழ்த்து அட்டைகள், இனிப்புகள், மலர்கள் ஆகியவற்றை இந்நாளில் காதலர்கள் பரிமாறிக் கொள்கிறார்கள். ஆதலினால், காதலிப்பீர் ஜெகத்தீரே என மகாகவியால் பரிந்துரை செய்யப்பட்டது காதல். காதலினால் மானிடர்க்கு கலவியுண்டாம், கலைகள் உண்டாம் என்றும் பட்டியலிடுகிறார் மகாகவி. இளம் பருவத்து காதல், காணாமல் காதல், முதிர்ந்த வயதின் காதல்.... இப்படி ஏதோ ஒரு வயதில் காதல் வயப்படுகின்றனர். காதல்ஒருபுறம் மகிழ்ச்சியைத் தரும் புத்துணர்வாக இருப்பினும், இழந்த காதலும் பிரிந்த உள்ளங்களும் தாளாத துயருடன் தவிக்கத்தான் செய்கின்றன. யாரைக் கேட்டும் மலர்கள் மலர்வதில்லை என்பது போல் காதலும் தானாகவே மலர்ந்து விடுகிறது. ஆனால், காதல் உணர்வுகள் நிரந்தரமானவை அல்ல என்பதும், சமூகத்தின் யதார்த்தம் பல நேரங்களில் காதலை மிஞ்சி விடுகிறது என்பதும் அனுபவம் மிக்க பெற்றோரின் கருத்தாக உள்ளது.


மேலும் படிக்க | அதிக நேரம் ஸ்மார்ட்போன் யூஸ் பண்றீங்களா? இதை தெரிஞ்சுக்கோங்க!


காதல் என்றால் என்ன
ஒருவரின் செயல், தோற்றம், அவரின் நடை, உடை, பாவணை முதலியவற்றை கண்டவுடன் மாற்று பாலினத்தவருக்கு அவர் மீது ஒருவித ஈர்ப்பு வருவது இயற்கை . இதை காதல் என எண்ணி, பீச், பார்க், ஓட்டல்களில் ஐஸ்கிரீம், ஸ்நாக்ஸ், டேட்டிங் என தினசரி பொழுதை பேசிக் கழிக்கும் ஜோடிகளே அதிகம். ஆனால், இது போன்ற ஈர்ப்பால் இணைந்த ஜோடிகள், வெகு விரைவில், வெவ்வேறு திசை நோக்கி பயணிக்க துவங்கி விடுவர். 


ஆண் மீது பெண்ணுக்கும், பெண் மீது ஆணுக்கு ஏற்படும் மாற்றுப் பாலின ஈர்ப்பு, தற்காலி ஈர்ப்பா அல்லது தவிர்க்க முடியாத பிணைப்பா என்பதை பிரித்தறியும் பக்குவம் வந்த பின்னும், அந்த ஈர்ப்பு தொடர்ந்தால், அது தான் காதல். வெற்றி, தோல்வியை தீர்மானிக்க காதல் ஒன்றும் டி - 20 கிரிக்கெட் போட்டியல்ல. திருமணத்தில் முடியும் காதல் தான் வெற்றி பெறுவதாக சொன்னால், உலகில், 95 சதவீத காதலர்கள் தோல்வியை தழுவுவதாகத்தான் சொல்ல வேண்டும். 


காதல் ஒரு வித உணர்வு; அதை அனுபவிக்கையில் தெரியும் அதன் சுகமும், வலியும். ஒருவருக்காக ஒருவர் விட்டுக் கொடுத்து, நன்கு புரிந்து கொண்டு, இருவரின் விருப்பு, வெறுப்புகள் வெவ்வேறாக இருந்தாலும், இருவருக்குமான மையப்புள்ளியில் இருவரும் பயணிப்பதே காதலின் வலிமை. 


‛உனக்கு பிடிக்காததை நான் ஒதுக்குகிறேன் என, ஆண் மகன் நினைப்பதும், எனக்கு பிடிக்காவிட்டாலும், உனக்காக நான் இதை ஏற்கிறேன்’ என பெண் ஏற்பதுமே காதல். விட்டுக் கொடுத்தலும், புரிதலுமே இதில் முக்கியம். ‛நீ நீயாக இரு...  நான் நானாக இருக்கிறேன். இருவரும் காதல் படகில் இனிதே பயணிப்போம்’ என்பது சந்தர்ப்பவாத, சுயநலக் காதலாகவே இருக்க முடியும்.


காதலிக்க துவங்கிய ஆரம்ப காலத்தில் இது நன்றாகவே இருக்கும். ஆயினும், நாள் செல்லச் செல்ல, இருவரிடையே மன வேதனையை ஏற்படுத்தும். அவன் எப்படியோ, அவனை அப்படியே ஏற்பதும், அவள் எப்படியோ, அவளை அப்படியே ஏற்பதும் தான் காதல். இது மேல்கூறிய கருத்துக்கு முரண்பட்டு இருக்கிறதே என எண்ண வேண்டாம். 


ஆம், அவன் எப்படியோ அவனை அப்படியே ஏற்றுக் கொள்ளுங்கள்...அவன் மாற வேண்டும் என நினைப்பதை விட, அவனுக்காக நான் சிலவற்றை மாற்றிக் கொள்கிறேன் என முடிவெடுங்கள். ஆனால், உங்களுக்காக அவனும், தன்னை மாற்றிக் கொள்ள வேண்டும் என்ற எதிர்பார்ப்பு இல்லாத மாற்றமாக அது இருக்க வேண்டும். அதே போல், அவள் எப்படி இருக்கிறாளோ, அவளை அப்படியே ஏற்று, அவளுக்காக ஆண் மகன் சிலவற்றை மாற்றிக் கொள்வதுமே காதல். இதிலும், எதிர்ப்புறம் எவ்வித மாற்றம் இருக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பு கூடாது.


ஒருவன் ஒரு சாலையின் ஒரு பக்கமும், அவனின் காதலி, அந்த சாலையின் மறு பக்கமும் நிற்கிறாள் என்றால், அவன் அளவை நோக்கியும், அவள், அவனை நோக்கியும் பயணிக்க வேண்டும். நீங்கள் உங்கள் பாதையிலிருந்து அவளை நோக்கி நடந்தால், அவளும் உங்களை நோக்கி நடப்பாள். இருவரில் யாரேனும் ஒருவர் நின்றுவிட்டு, எதிர்ப்புறம் உள்ளவரின் வரவை மட்டும் எதிர்பார்த்தால், அதில் ஏமாற்றமே மிஞ்சும்.


இந்த காதலர் தினத்தை மறக்க முடியாத நாளாக மாற்ற சில வழிமுறைகள்: 


> உங்கள் காதலியை வெளியில் அழைத்து சென்று சில இன்ப அதிர்சிகளை கொடுக்கலாம்..


> அவளுக்காக நீங்களே எழுதிய கவிதை அல்லது பாடல்களை பாடலாம்.


> அவள்/அவனுக்கு மிகவும் பிடித்த இடத்திற்கு அழைத்து செல்லலாம். 


> இருவரும் ஒன்றாக இருக்கும் பொது கைகளை கோர்த்தபடி நீண்ட தூரம் ஒரு நடைபயணம் செல்லாலாம்.


மேலும் படிக்க | சாப்ட்வேர் இன்ஜினியர் மாப்பிள்ளைக்கு தான் பொண்ணு தருவோம்! வெளியான சுவாரஸ்ய தகவல்


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ