Valentine Day: காதலன் இல்லாமல் கல்லூரியில் no entry, Viral ஆகும் கல்லூரியின் கடிதம்

சமூக ஊடகங்களில் வைரலாகியுள்ள ஒரு வினோதமான கடிதத்தில், ஆக்ராவின் செயின்ட் ஜான்ஸ் கல்லூரியின் இணை பேராசிரியர் ஆஷிஷ் சர்மா அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளார்.

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Jan 28, 2021, 06:14 PM IST
  • ஆக்ராவில் உள்ள செயின்ட் ஜான்ஸ் கல்லூரியின் வினோதமான கடிதம் ஒன்று சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது.
  • கடிதத்தில், பேராசிரியர் ஆஷிஷ் சர்மா அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளார்.
  • புனித ஜான்ஸ் கல்லூரியின் முதல்வர் டாக்டர் எஸ்.பி.சிங் இது குறித்து ஒரு அறிவிப்பை வெளியிட்டார்.
Valentine Day: காதலன் இல்லாமல் கல்லூரியில் no entry, Viral ஆகும் கல்லூரியின் கடிதம் title=

புது தில்லி: ஒவ்வொரு ஆண்டும் பிப்ரவரி 14 அன்று காதலர் தினம் கொண்டாடப்படுகிறது. இது அன்பின், நேசத்தின் நாளாக கருதப்படுகிறது. இந்த நாளில், மக்கள் தங்கள் அன்பை வெளிப்படுத்துகிறார்கள்.

தங்களுக்கு அன்பானவர்களுடன், காதலர், காதலியுடன் இந்த நாளில் சிலர் வெளியே செல்வதும் வழக்கமாகி வருகிறது. காதலர் தினம் உலகம் முழுவதும் மிகுந்த ஆரவாரத்துடன் கொண்டாடப்படுகிறது.

காதலர் தினம் (Valentine Day) குறித்த ஒரு விசித்திரமான கடிதம் சமூக ஊடகங்களில் வைரலாகியுள்ளது.

ஆக்ராவில் (Agra) உள்ள செயின்ட் ஜான்ஸ் கல்லூரியின் வினோதமான கடிதம் ஒன்று சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது. இந்த கடிதத்தைப் படித்த சிலருக்கு சிரிப்பு வருகிறது, சிலருக்கு கோவம் வருகிறது. கல்லூரியின் இந்த கடிதத்தில் என்ன எழுதப்பட்டுள்ளது என்பதை அறிந்து கொள்ளுங்கள்.

காதலர் தினத்தன்று காதலன் இருப்பது கட்டாயம்

செயின்ட் ஜான்ஸ் கல்லூரியின் லெட்டர் ஹெட்டில் எழுதப்பட்ட கடிதத்தில், “பிப்ரவரி 14 அதாவது காதலர் தினத்திற்குள் குறைந்தது ஒரு பாய் ஃபிரண்டாவது உங்களுக்கு இருப்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள். பாதுகாப்பு காரணங்களுக்காக நீங்கள் இதை செய்ய வேண்டும். கல்லூரியில் தனியாக வரும் பெண்ணிற்கு அனுமதி கிடையாது. காதலனுடன் புகைப்படம் காட்டிய பின்னரே கல்லூரியில் நுழைவு வழங்கப்படும். அன்பைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.” என்று எழுதப்பட்டுள்ளது.

ALSO READ: காதலுக்கு கண்ணு மட்டுமா இல்ல, வயசும் இல்லை; 36 வயது வித்தியாசத்தில் மலர்ந்த காதல்!

வைரல் கடிதத்தில் பேராசிரியர் ஆஷிஷ் சர்மாவின் அறிவுறுத்தல்கள்

சமூக ஊடகங்களில் (Social Media) வைரலாகிய இந்த கடிதத்தில், ஆக்ராவின் செயின்ட் ஜான்ஸ் கல்லூரியின் இணை டீன் பேராசிரியர் ஆஷிஷ் சர்மா அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளார். அவரது அறிவுறுத்தல்களின்படி, கல்லூரியின் இரண்டாம் மற்றும் இறுதி ஆண்டு மாணவிகள் பிப்ரவரி 14 ஆம் தேதிக்குள் ஒரு காதலரைப் பெறுவது கட்டாயமாகும்.

வைரல் ஆன கடிதம் குறித்து கல்லூரியின் விளக்கம்

புனித ஜான்ஸ் கல்லூரியின் முதல்வர் டாக்டர் எஸ்.பி.சிங் இது குறித்து ஒரு அறிவிப்பை வெளியிட்டார். ஆஷிஷ் சர்மா என்ற பெயரில் எந்த பேராசிரியரும் இல்லை என அவர் கூறியுள்ளார். இந்த கடிதம் போலியானது என்றும் இந்த வேலையை யார் செய்திருதாலும் அவர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் கூறியுள்ளார். இது மிகவும் சங்கடமான மற்றும் வருந்தத்தக்க செயல் என்று அவர் மேலும் கூறினார்.

ALSO READ: ICU வார்டுக்கு செல்லும் முன் காதலனை கரம்பிடித்த காதலி; கொரோனா வார்டில் நிகழ்ந்த விசித்திரம்!

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News