வரலட்சுமி நோன்பு என்பது பதினாறு வகைச் செல்வத்துக்கும் அதிபதியான லட்சுமியின் அருள் வேண்டி இந்துக்களின் நோன்பாகும். ஆடி மாதம் வளர்பிறையில் முழுநிலவு வருவதற்கு முந்தைய வெள்ளிக்கிழமையில் கணவன் நலத்தோடும், ஆரோக்கியத்தோடும், செல்வத்தோடும் இருக்கவும், தாலி பாக்கியம் நிலைக்கவும், இல்லத்தில் செல்வம் கொழிக்கவும் இந்த நோன்பை சுமங்கலி பெண்கள் கடைபிடிக்கின்றனர்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

வரலட்சுமி விரத பூஜைக்கு தேவையான பொருட்கள்
சின்ன வாழைக்கன்று இரண்டு
தோரணம் (கிடைத்தால்)
மாவிலை தோரணத்திற்கு.
முகம் பார்க்கும் கண்ணாடி (அம்மனின் பின் அலங்காரத்தை ரசிக்க)
பூச்சரம் அம்மன் அலங்காரத்திற்கு
அம்மனை வைக்க சொம்பு.


 


ALSO  READ | அம்மனுக்கு உகந்த ஆடி மாதத்தின் அருள் வழங்கும் ஆடிப்பூரம்!
காதோலை இரண்டு பக்கமும் வைக்க
கருக வளையல் இரண்டு பக்கமும் வைக்க
மாவிலைக்கொத்து, தேங்காய் மற்றும் அம்மன் வைக்க
தாழம்பூ
சிறிய வாழை இலை. அதில் அரிசியை பரப்பி, அம்மனை வைக்க
புதிய ரவிக்கை துண்டு (அம்மனுக்கு சாத்த)


பூஜைக்கு தேவையான பொருட்கள்
திருவிளக்கு, எண்ணை, நெய், திரி மற்றும் ஏற்ற வத்தி பெட்டி.
பூமாலை மற்றும் உதிரிப்பூக்கள் (அர்ச்சனைக்கு)
பூஜை சாமான்கள் வைக்க தேவையான தட்டுக்கள்
மஞ்சள் தூள், சந்தனம், குங்குமம், அட்சதை வெற்றிலை, பாக்கு மற்றும் அவைகளை வைக்க கின்னங்கள்
ஊதுபத்தி, கற்பூரம், சாம்பிராணி
மணி மற்றும் கற்பூரம் ஏற்ற தட்டு.
பஞ்ச பாத்திரம், உத்தரினி.
இழை(மா)க்கோலம் போட தேவையான பொருட்கள்
மஞ்சள் சரடு அதற்கு கட்ட பூ.
அர்க்கியம் விட கொஞ்சம் பால்


நைவேத்தியங்கள்
இட்லி
அப்பம்


 


ALSO READ | நெற்றியில் குங்குமம் இடுவது ஏன்? படிக்கவும்!
வடை (உளுந்து வடை)
கொழுக்கட்டை
வெல்ல பாயசம்
கொத்துக்கடலை சுண்டல் (சாயந்திரம் நைவேத்தியத்திற்கு)
இதற்கு தேவையான தேங்காய், வெல்லம் மற்றும் தேவையான மளிகை சாமான்கள்