Vastu Tips for Money Plant: வீட்டில் அழகு மற்றும் பசுமையை மேம்படுத்த சிறிய மரங்கள் மற்றும் செடிகளை வைப்பது வழக்கம். பலர் தங்கள் வீடுகளில் மணி பிளாண்ட்டை (Money Plant) வைக்கிறார்கள். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

வீட்டில் மணி பிளாண்ட் வைப்பதற்கான விதிகள் 


வீட்டில் ஒரு மணி பிளாண்ட்டை வைத்தால், எந்தவொரு நிதி நெருக்கடியும் இருக்காது என்றும் குடும்பம் மகிழ்ச்சியாகவும் வளமாகவும் இருக்கும் என்றும் நம்பப்படுகிறது. நீங்களும் வீட்டில் மணி பிளாண்டை வைக்க விரும்பினால், சில விஷயங்கள் கவனிக்கப்பட வேண்டும். 


சில முக்கிய விஷயங்களை கவனிக்காமல் விட்டால், அன்னை லக்ஷ்மி (Goddess Lakshmi) கோபமடைந்து, வீட்டில் மகிழ்ச்சியும் செழிப்பும் வருவதற்குப் பதிலாக, நிதி நெருக்கடி ஆரம்பமாகும் என சொல்லப்படுகின்றது. மணி பிளாண்ட் தொடர்பான சில முக்கிய விதிகள் என்ன என்பதை இந்த பதிவில் காணலாம். 


கிழக்கு-மேற்கு திசையில் வைக்க வேண்டாம்


வாஸ்து சாஸ்திரத்தின் (Vaastu Shastra) படி, மணி பிளாண்டை கிழக்கு-மேற்கு திசையில் வைக்கக்கூடாது. இப்படி செய்வதால், வீட்டில் சிக்கல் அதிகமாகிறது. அதற்கு பதிலாக, மணி பிளாண்டை தென்கிழக்கு திசையில் வைக்க வேண்டும். விநாயகப் பெருமான் தென்கிழக்கு திசையின் அதிபதியாகக் கருதப்படுகிறார். எனவே இந்த திசை மிகவும் உகந்த திசையாகக் கருதப்படுகிறது. இந்த திசையில் மணி பிளாண்டை வைத்தால், வீட்டில் நேர்மறை ஆற்றல் அதிகரிக்கும். 


உலர்ந்த இலைகள் மற்றும் கிளைகளை நீங்களே வெட்ட வேண்டாம்


மணி பிளாண்டின் இலைகள் அல்லது கிளைகள் காய்ந்தால், அவற்றை வெட்டி பிரிக்க வேண்டும். இலைகள் மற்றும் தண்டுகளை நீங்களே வெட்டுவதற்குப் பதிலாக, அவற்றை ஒரு நண்பரைக் கொண்டு வெட்ட சொல்லுங்கள். யார் வீட்டில் மணி பிளாண்ட் உள்ளதோ, அந்த வீட்டின் நபரே அதன் இலைகள் மற்றும் கிளைகளை வெட்டக்கூடாது.


ALSO READ: Vastu Tips: செல்வச்செழிப்புடன் சூப்பரா வாழ சுலபமான வாஸ்து குறிப்புகள்


மேலும் மணி பிளாண்டின் இலைகள் கீழ் நோக்கிச்செல்லாமல் பார்த்துக்கொள்ளுங்கள். அப்படி அவை கீழ் நோக்கிச்சென்றால், ஒரு மெல்லிய கயிறு அல்லது குச்சியின் உதவியுடன் அவற்றை மேல்நோக்கி செல்ல வைக்கவும்.


2-3 நாட்களுக்கு ஒரு முறை தண்ணீர் ஊற்றவும்


மணி பிளாண்டிற்கு எப்போதும் வடிகட்டிய நீரை ஊற்றவும். இந்த செடிக்கு 2-3 நாட்களுக்கு ஒரு முறை மட்டுமே தண்ணீர் தேவைப்படுகிறது. நீர் ஊற்றும்போது இலைகளில் சிறிது தண்ணீர் தெளிக்கவும். மணி பிளாடிற்கு அதிக தண்ணீர் சேர்த்தால், அதன் இலைகளால் உறிஞ்ச முடியாது. இதன் காரணமாக அதன் இலைகள் மஞ்சள் நிறமாகி கீழே விழ ஆரம்பிக்கும். குளிர்காலத்தில் மணி பிளாண்டிற்கு உரமிடக்கூடாது. 


மணி பிளாண்டை வைக்கும் தொட்டியை கொஞ்சம் பெரியதாக வைக்கவும்


வீட்டிற்குள் ஒரு மணி பிளாண்டை வைக்கும்போது, தொட்டியின் அளவு கொஞ்சம் பெரியதாக இருக்க வேண்டும் என்பதை நினைவில் கொள்ளுங்கள். இதற்குக் காரணம் மணி பிளாண்ட் செடி வேகமாக வளர்வதுதான். ஆகையால், அதன் வேர்கள் கீழே பரவவும் இடம் தேவை. தொட்டியின் அளவு சிறியதாக இருந்தால், ​​வேர்கள் விரிவடைய இடம் கிடைக்காது. இது செடியின் வளர்ச்சியை பாதிக்கிறது.


எப்போதும் மணி பிளாண்டை வீட்டுக்குள் வைக்க வேண்டும் 


மணி பிளாண்டை எப்போதும், வீட்டிற்கு வெளியே வைக்காமல் வீட்டிற்குள் வைக்க வேண்டும். இப்படிச் செய்வதால், வீட்டில் நேர்மறை ஆற்றல் வருகிறது. செடியை வீட்டிற்குள் யாரும் நேரடியாக பார்க்க முடியாத இடத்தில் வைக்கவும். மணி பிளாண்டை வீட்டிற்கு வெளியே வைத்தால், அதன் நேர்மறையான விளைவு முடிவடைந்து, நல்ல விளைவுகள் ஏற்படுவதற்கு பதிலாக சேதத்தை ஏற்படுத்தத் தொடங்கும்.


செடியை வாங்கும் போது, ​​இலைகளின் நிறத்தை கவனிக்கவும்


மணி பிளாண்டை (Money Plant) வைக்கும்போது, அதன் இலைகளின் நிறத்தில் சிறப்பு கவனம் செலுத்தப்பட வேண்டும். மணி பிளாண்டின் இலைகள் பச்சை நிறத்தில் இருந்தால், உங்கள் நிதி நிலை சிறப்பாக இருக்கும். அதன் இலைகள் இதய வடிவத்தில் இருந்தால், அது மகிழ்ச்சியையும் செழிப்பையும் ஈர்க்கும் என்று கருதப்படுகிறது.


(குறிப்பு: இந்த கட்டுரையில் கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான தகவல் மற்றும் அனுமானங்களை அடிப்படையாகக் கொண்டவை. ஜீ நியூஸ் இவற்றை உறுதிப்படுத்தவில்லை.)


ALSO READ: வீட்டின் படிக்கட்டுகள், வாழ்க்கையின் படிக்கட்டுகளாகவும் இருக்க சில Tips! 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR