புதுடெல்லி: உங்கள் கைக்கடிகாரம் உங்கள் அதிர்ஷ்டத்தையும் மாற்றும் என்றால் நம்ப முடியவில்லையா. ஆம்.  நீங்கள் கைக்கடிகாரம் அணியும் முறை கூட உங்கள் அதிர்ஷ்டத்தை பாதிக்கிறது என வாஸ்து சாஸ்திரம் கூறுகிறது.  அதனால், சில விஷயங்களை கவனித்தில் கொள்ள வேண்டியது அவசியம். வாஸ்து சாஸ்திரத்தின் படி, நீங்கள் பின்பற்ற வேண்டிய சில விதிகள் உள்ளன. கைக்கடிகாரம் அணியும் போது இந்த விஷயங்களை நீங்கள்  கவனத்தில் கொள்ளாவிட்டால், பிரச்சனைகள் ஏற்படலாம். மேலும், உங்கள் வேலையில் தடைகள் ஏற்படலாம்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

கடிகாரத்தின் வண்ணம்


வாஸ்துவின் படி, தங்க மற்றும் வெள்ளி நிற கடிகாரங்கள் சிறப்பானதாக கருதப்படுகிறது. நீங்கள் வேலைக்கான நேர்காணல் அல்லது தேர்வுக்கு செல்லும்போது தங்க நிற்ர அல்லது வெள்ளி நிற கடிகாரத்தை அணியுங்கள்.


கைக்கடிகாரத்தை தலையணைக்கு அடியில் வைக்காதீர்கள்


இரவில் கைக்கடிகாரங்களை கழற்றி தலையணைக்கு அடியில் வைக்கும் பழக்கம்  பெரும்பாலும் காணப்படுகிறது. கைக்கடிகாரத்தை தலையணையின் கீழ் வைக்காதீர்கள். இது உங்கள் மனதில் எதிர்மறை ஆற்றலைக் கொண்டுவரும் என்பதோடு, தூக்கம் தொடர்பான பிரச்சனைகளையும் ஏற்படுத்தும்.


ALSO READ | Vastu Tips: உணவில் மட்டுமல்ல... வாழ்க்கையிலும் சுவையை கூட்டும் உப்பு..!!


சரியான அளவுள்ள கடிகாரத்தை அணியுங்கள்


ஒருபோதும் தளர்வான கைக்கடிகாரம் அணிய வேண்டாம். இந்த வகை கடிகாரத்தை அணிவது உங்கள் கவனத்தை திசை திருப்பும். வாஸ்துப்படி சரியான அளவிலான கடிகாரத்தை அணிந்தால், எந்தத் துறையிலும் வெற்றி பெறுவதில் சிரமம் ஏற்படும். 


கடிகார டயல்


கைக்கடிகாரம் அணியும் போது, ​​கடிகாரத்தின் டயல் மிகப் பெரிதாக இருக்கக்கூடாது என்பதை நினைவில் கொள்ளுங்கள். பெரிய டயல் கொண்ட கடிகாரத்தை அணிவது உங்களுக்கு தனிப்பட்ட மற்றும் தொழில் வாழ்க்கையில் சிரமங்களை கொடுக்கலாம். அதே நேரத்தில், மிகச் சிறிய டயல் கொண்ட கடிகாரத்தையும் அணிய வேண்டாம். கடிகாரத்தின் டயலின் வடிவத்தைப் பற்றி பேசுகையில், வட்டம் அல்லது சதுர வடிவ டயல் மிகவும் நல்லதாக கருதப்படுகிறது.


ALSO READ | Vastu Tips: பர்ஸ் எப்போது நிறைந்திருக்க அதில் சிலவற்றை மறந்தும் வைக்கக் கூடாது


எந்த கையில் அணிய வேண்டும்


வாஸ்துவின் படி, இந்த கையில் தான் கடிகாரம் அணிய வேண்டும் என்ற விதி இல்லை. உங்கள் வசதிக்கேற்ப வாட்சை வலது அல்லது இடது கையில் அணியலாம்.


(குறிப்பு: இந்த கட்டுரையில் கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான தகவல்களாகும். இவை அனுமானங்களை அடிப்படையாகக் கொண்டவை. ஜீ நியூஸ் அதை உறுதிப்படுத்தவில்லை.)


ALSO READ: Vastu Tips: Money Plant வைக்கும்போது இந்த தவறுகளை மட்டும் கண்டிப்பாக செய்யாதீர்கள் 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR