Vastu Tips: உணவில் மட்டுமல்ல... வாழ்க்கையிலும் சுவையை கூட்டும் உப்பு..!!

உப்பில்லாத பண்டம் குப்பையிலே என்பார்கள். உணவுக்கு சுவையை கூட்டும் உப்பு வாழ்கையிலும் சுவையை கூட்டும் என வாஸ்து சாஸ்திரம் கூறுகிறது. சாதாரண உப்பை வைத்தே  வீட்டில் இருக்கும் எதிர்மறை சக்திகள் நீக்க முடியும் என்று கூறினால் உங்களால் நம்ப முடிகிறதா. ஆனால், அது தான் உண்மை.

தீராத பிரச்சனைக்கு, அது நிதி நெருக்கடியானலும் சரி அல்லது குடும்ப பிரச்சனை அல்லது அலுவலக பிரச்சனையானாலும் சரி, வீட்டிற்குள்ளேயே எளிய தீர்வு இருக்கிறது.இதற்கு புதிதாக எதுவும் செலவு செய்து வாங்கவோ அல்லது பரிகாரம் செய்யவோ தேவையில்லை. இதற்கு சமையல் கட்டிலேயே தீர்வு இருக்கிறது.

1 /5

கல் உப்பை நீரில் கலக்கி அந்த தண்ணீரை கொண்டு வீட்டை சுத்தம் செய்தால். இது வீட்டில் இருக்கும் எதிர்மறை சக்திகள் மற்றும் எண்ணங்கள் அனைத்தையும் நீக்கி விடும். ஆனால், ஞாயிற்றுக் கிழமையை மட்டும் தவிர்க்க வேண்டும் என கூறப்படுகிறது

2 /5

ஒரு சிட்டிகையளவு உப்பை ஒரு டம்ளர் நீரில்  கலந்து அதை வீட்டின் தென்மேற்கு மூலையில் வைத்தால், வீட்டில் உள்ள ஏழ்மை விலகி விடும் என வாஸ்து நிபுணர்கள் கூறுகின்றனர். அவ்வாறு வைக்கப்படும் நீரின் வண்ணம் மாறும் போது, அந்த நீரை மாற்றி விட வேண்டும்.

3 /5

ஒரு சிவப்பு துணியில் உப்பை கட்டி வீட்டின் நுழைவாயிலில் தொங்கவிட்டால் வீட்டிற்குள் உள்ள கெட்ட சக்தி  நீங்குவதோடு, வீட்டிற்கு நுழைய விரும்பு கெட்ட சக்தியையும் வர விடாமல் தடுக்கும்.

4 /5

கைபிடி அளவு உப்பு எடுத்து அதை ஒரு சின்ன கிண்ணத்தில் போட்டு அதை குளியலறையின் ஒரு மூலையில் வைத்தாலும் வீட்டில் உள்ள எதிர் மறை சக்தி நீங்கும். ஆனால், இதையும் அடிக்கடி மாற்ற தவறக் கூடாது.  அது மட்டுமல்லாது, பக்கெட் நீரில், சிறிது உப்பை கலந்து, அதில் குளித்தால், உடலி உள்ள எதிர்மறை சக்திகள், எதிர்மறை எண்ணங்கள் நீங்கி புத்துணர்ச்சியை உணர்வீர்கள்.

5 /5

சாப்பிடும் டேபிளில், உப்பு வைப்பது செல்வசெழிப்பு அதிகரிக்க உதவும் எனவும் வாஸ்து நிபுணர்கள் கூறுகின்றனர். இதனால், வீட்டில் செல்வம் குறையாமல் எப்போதும் நிறைந்திருக்கும் என்கின்றனர்.