Vi-ன் Rs.99 ரீசார்ஜ் பிளான் இனி அனைத்து வட்டங்களில் கிடைக்கும்: இதன் நன்மைகள் என்ன தெரியுமா
Vi தனது போஸ்ட்பெய்ட் வாடிக்கையாளர்களுக்கு அதிக இணைய பயன்பாட்டிற்காக மிகப்பெரிய சலுகைகளை கொண்டு வந்துள்ளது.
புதுடெல்லி: பண்டிகை காலங்களில் மொபைலின் ப்ரீபெய்ட் வாடிக்கையாளர்களுக்கு அபார அதிர்ஷ்டம் அடித்து வருகிறது. தினசரி தொலைத் தொடர்பு நிறுவனங்கள் சந்தையில் ஒன்றை ஒன்று மிஞ்சும் அளவுக்கு கவர்ச்சிகரமான திட்டங்களை அறிமுகப்படுத்துகின்றன.
இந்த வகையில், Vi (Vodafone-Idea) தனது மிகவும் பிரபலமான ரூ .99 ரீசார்ஜ் திட்டத்தை அனைத்து வட்டங்களிலும் செயல்படுத்துவதாக அறிவித்துள்ளது. Vi இன் அனைத்தையும் விட மலிவான ரீசார்ஜ் 19 ரூபாய்க்கானது. 99 ரூபாய் திட்டத்தில் என்ன நன்மைகள் கிடைகின்றன என்று தெரிந்து கொள்ளலாம்.
99 ரூபாய் திட்டத்தில் வரம்பற்ற அழைப்பு மற்றும் 1 GB தரவு கிடைக்கிறது
தொலைத் தொடர்பு நிறுவனமான Vi இன் ரூ .99 ரீசார்ஜ் வாடிக்கையாளர்களுக்கு பல நன்மைகளைத் தருகிறது. எடுத்துக்காட்டாக, இந்த திட்டத்தில் நீங்கள் வரம்பற்ற அழைப்பு வசதியைப் பெறுவீர்கள். இணைய பயனர்களுக்கு தினசரி 1 GB தரவு கிடைக்கிறது. மேலும், 100 SMS செய்யும் வசதியும் உள்ளது. இந்த திட்டத்தின் ஒரே பிரச்சனை என்னவென்றால், இந்த திட்டத்தின் செல்லுபடியாகும் தன்மை 18 நாட்கள் மட்டுமே.
ALSO READ: ICICI வங்கியின் இந்த offer மூலம் 30 mins-ல் magic, மளிகைக் கடை online store ஆகும்
இப்போது இத்திட்டம் அனைத்து வட்டங்களிலும் கிடைக்கும்
எமக்குக் கிடைத்த தகவல்களின்படி, இந்த பிரபலமான 99 ரூபாய் திட்டம் இப்போது இந்தியா முழுவதும் கிடைக்கும். இந்த திட்டம் முன்னர் மேற்கு வங்கம், மேற்கு உத்தர பிரதேசம் மற்றும் கிழக்கு உ.பி. போன்ற வட்டங்களுக்கு மட்டுப்படுத்தப்பட்டது. இப்போது அது அனைத்து வட்டங்களிலும் வெளியிடப்பட்டுள்ளது.
50 GB தரவு வெறும் 200 ரூபாய்க்கு கிடைக்கிறது
Vi தனது போஸ்ட்பெய்ட் வாடிக்கையாளர்களுக்கு அதிக இணைய பயன்பாட்டிற்காக மிகப்பெரிய சலுகைகளை கொண்டு வந்துள்ளது. நிறுவனம் 50 GB டேட்டாவை வெறும் ரூ .200 க்கு வழங்குகிறது. வாடிக்கையாளர் சேவையை (Customer Service)-ஐ அழைத்து பயனர்கள் இந்த தரவு தொகுப்பை ஆக்டிவேட் செய்யலாம். இதேபோல், வாடிக்கையாளர்கள் 20 GB கூடுதல் தரவை வெறும் ரூ .100 க்கு பெறலாம்.
ALSO READ: Reliance Jio, Airtel மற்றும் Vi இல் எவ்வாறு எண்களை ஆன்லைனில் மூலமாக போர்ட் செய்வது?
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR