மக்கள் நலனுக்காக பிலிம்பேர் விருதை ஏலம் விடும் இளம் நடிகர்!
பிரபல தெலுங்கு ஹிட் நடிகரான விஜய் தேவரகொண்டா திரையுலக பிரமுகர்களின் வாழ்நாள் லட்சியமான பிலிம்பேர் விருதை முதலமைச்சர் நிதிக்காக ஏலம் விடப் போவதாக அறிவித்துள்ளார்.
பிரபல தெலுங்கு ஹிட் நடிகரான விஜய் தேவரகொண்டா திரையுலக பிரமுகர்களின் வாழ்நாள் லட்சியமான பிலிம்பேர் விருதை முதலமைச்சர் நிதிக்காக ஏலம் விடப் போவதாக அறிவித்துள்ளார்.
திரையுலகினருக்கு கொடுக்கப்படும் பிலிம்பேர் விருது ரசிகர்களின் வாக்கை வைத்து வழங்கப்படும். சமீபத்தில் தென் இந்திய மொழிகளுக்கு விருது வழங்கும் விழா ஐதராபாத்தில் நடைபெற்றது.
இதில், கடந்த வருடம் தெலுங்கு திரை உலகில் பெரும் புகழ்பெற்ற திரைப்படமான அர்ஜுன் ரெட்டி திரைப்படத்தின் கதாநாயகனாக நடித்த நடிகர் விஜய் தேவரகொண்டாவுக்கு ரசிகர்களின் பேராதரவை பெற்று படத்தில் நடித்தமைக்கு பிலிம்பேர் விருதுகிடைத்தது.
தற்போது ஐதராபாத்தை சேர்ந்த நடிகர் விஜய் தேவரகொண்டா தனது சொந்த ஊரை முன்னேற்ற விரும்புவதால் தனது பிலிம்பேர் விருதை ஏலம் விட உத்தேசித்துள்ளார். அந்த ஏலத்தின் மூலம் கிடைக்கும் பணத்தை முதல்வர் நிவாரண நிதிக்கு அளிக்கப் போவதாக தனது டிவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.