தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களுள் ஒருவராக கலக்கி வருபவர் நடிகர் விஜய் சேதுபதி. தற்போது விஜய் சேதுபதி பாடகராக புதிய அவதாரம் எடுத்துள்ளார். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

யுவன் ஷங்கர் ராஜா உறவினர் ஹீரோவாக அறிமுகமாகும் 'பேய்பசி' என்ற படத்திற்காக ஒரு பாடலைப் பாடியுள்ளார் நடிகர் விஜய் சேதுபதி. இதுகுறித்து இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டு உள்ளார். அதில்,


"என் இசையில் உருவாகி வரும் 'பேய்பசி' படத்துக்காக விஜய் சேதுபதி பாடுகிறார். எனது கஸின் ஹரி கிருஷ்ணன் பாஸ்கர் கதாநாயகனாக நடிக்கும் இப்படத்தை ஸ்ரீனிவாஸ் கவிநயம் இயக்குகிறார்" என்று தெரிவித்துள்ளார். 


 



 


விஜய் சேதுபதி நடிப்பில் '96', 'சூப்பர் டீலக்ஸ்', 'செக்கச் சிவந்த வானம்', 'ஜூங்கா', 'சீதக்காதி' ஆகிய படங்கள் உருவாகி வருகின்றன. இந்நிலையில், விஜய் சேதுபதி தற்போது யுவன் ஷங்கர் ராஜா இசையில் உருவாகிவரும் 'பேய்பசி' படத்தின் மூலம் பாடகராக அறிமுகமாகிறார். 


'பேய்பசி' படத்தில் அம்ரிதா, டேனியல் பாலாஜி, கருணாகரன் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். டோனி சான் ஒளிப்பதிவு செய்யும் இப்படத்துக்கு மோகன் முருகதாஸ் படத்தொகுப்புப் பணிகளை மேற்கொள்கிறார்.