பெண் வேடத்தில் நடனம் ஆடிய விஜய் சேதுபதியின் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

‘ஆரண்யக் காண்டம்’ திரைப்பட இயக்குநர் தியாகராஜன் குமாரராஜா இயக்கத்தில் நடிகர் விஜய் சேதுபதி திருநங்கையாக நடிக்கும் திரைப்படம் சூப்பர் டீலக்ஸ். மக்கள் செல்வன் விஜய் சேதுபதி முதல்முறையாக திருநங்கை கதாப்பாத்திரத்தில் நடிக்கும் இந்த திரைப்படத்தில் படத்தில் மலையாள படத்தின் முன்னணி ஹீரோ பகத் பாசில், நடிகைகள் சமந்தா, ரம்யா கிருஷ்ணன், காயத்ரி, இயக்குனர் மிஷ்கின் உட்பட பலர் நடித்துள்ளனர். இப்படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்து வருகின்றார்.


படத்தின் திரைகதை குறித்த தகவல்கள் ரகசியமாக காப்பாற்றப்பட்டு வருகின்றது. எனினும் விஜய் சேதுபதி ஷில்பா என்னும் கதாப்பாத்திரத்தில் நடிக்கின்றார் என்பது மட்டும் அனைவரும் அறிந்த விஷயம்.


சமீபத்தில், இந்த படத்தின் First Look போஸ்டர் வெளியாகி பெரும் வரவேற்ப்பு பெற்றது. இந்நிலையில் தற்போது இந்த படத்தின் படப்பிடிப்பில் விஜய் சேதுபதி பெண் வேடத்தில் செய்த ஒரு கியூட் நடன வீடியோவை அவர் இன்ஸ்டகிராமில் வெளியிட்டுள்ளார். அந்த  வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.