விஜய ஏகாதசி 2022: மாசி மாதம் கிருஷ்ண பக்ஷத்தின் ஏகாதசி விஜய ஏகாதசி என்று அழைக்கப்படுகிறது. இந்த முறை விஜய ஏகாதசி பிப்ரவரி 27, ஞாயிற்றுக்கிழமை அன்று வருகிறது.  விஜய ஏகாதசி நாளில் விஷ்ணுவை முறையாக வழிபட்டு விரதம் இருந்தால் வெற்றி உங்களை தேடி வரும். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

விஜய ஏகாதசி நாளில் விஷ்ணுவுக்கு பஞ்சாமிர்தத்தை அர்ப்பணித்து வணங்குதல் சிறப்பு என சாஸ்திரங்கள் கூறுகின்றன. பஞ்சாமிர்தம் இல்லாமல் விஷ்ணு வழிபாடு முழுமையடையாது என்பது ஆன்மீக நம்பிக்கை.


விஜய ஏகாதசி விரத நாளில் குளித்த பின் மஞ்சள் நிற ஆடைகளை அணிவது மங்களகரமானதாக கருதப்படுகிறது. ஏனென்றால் விஷ்ணுவுக்கு மஞ்சள் நிறம் மிகவும் பிடிக்கும். வழிபாட்டின் போது, ​​விஷ்ணு பகவானுக்கு மஞ்சள் பூக்களை அர்ப்பணிக்க வேண்டும்.


மேலும் படிக்க | துளசி செடியின் மகிமை; வீட்டின் வறுமை நீங்கி செல்வம் செழிக்கும்!


விஜய ஏகாதசி நாளில், துளசியை வணங்குதல் சிறப்பு, விஷ்ணு துளசிக்கு வழிபட்டால் வெற்றி வந்த சேரும் என்ற வரத்தை பகவான் அளித்தார். இந்த நாளில் துளசியை வழிபடுதல், துளசியினால் விஷ்ணுவை பூஜித்தல் நன்மை பயக்கும்.


விஜய ஏகாதசி அன்று விஷ்ணுவை வழிபட்ட பின் விரதம் இருக்க வேண்டும். இந்நாளில் விரதக் கதையை பாராயணம் செய்து வழிபட்டால் பூரண பலன் கிடைக்கும்.


பூஜைக்கு விஷ்ணுவை ஆரத்தி எடுக்கவும். வழிபாட்டின் முழுமை ஆரத்தியில் தான் உள்ளது. வழிபாட்டில் என்ன குறை இருந்தாலும் ஆரத்தி மூலம் அதனை நிவர்த்திக்கலாம்.


விஜய ஏகாதசி நாளில், விஷ்ணுவின் மந்திரங்களை உச்சரிக்க வேண்டும். இதனுடன், நீங்கள் உண்மையான பக்தியுடன் விஷ்ணு சாலிசாவையும் பாராயணம் செய்யலாம்.


(பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல் பொதுவான அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளது. ZEE NEWS அதை உறுதிப்படுத்தவில்லை.)


மேலும் படிக்க | சனியின் சஞ்சாரத்தால் இந்த ராசிக்காரர்கள் காட்டில் பண மழை, செல்வம் செழிக்கும் 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR