மருத்துவமனையில் மலர்ந்த காதல் நோய்.... 70 வயது வாலிபரை ஈர்த்த 55 வயது மங்கை..!!!
காதலுக்கு கண்ணும் இல்லை, வயதும் இல்லை என கூறுவது உண்மைதான். இந்த காதல் கதை நெட்டிஸன்களின் மனதை உருக்கியுள்ளது.
இது ஒரு சுவையான காதல் கதை. 70 வயதான ஒரு நபர், மருத்துவமனையில் தான சந்தித்த 55 வயது மங்கை மீது காதல் கொண்டு, மனந்து கொண்டார்.
உம்ராவ் சிங் மற்றும் குத்புடி இருவரும் மத்திய பிரதேசத்தின் அசோக்நகர் மாவட்டத்தில் உள்ள ஒரு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தனர்.
காதலுக்கு கண்ணும் இல்லை, வயதும் இல்லை என கூறுவது உண்மைதான். இந்த காதல் கதை நெட்டிஸன்களின் மனதை உருக்கியுள்ளது. இந்த செய்தி வைரலாகியுள்ளது. இது மத்திய பிரதேசத்தைச் சேர்ந்த ஒரு ஜோடி.
மத்திய பிரதேசத்தின் அசோக்நகர் மாவட்டத்தில் ஒரு மருத்துவமனையில் தான் காதல் கதை உதயமாகியது. இதை அடுத்து 70 வயது நபர் 55 வயது மங்கையை திருமணம் செய்து கொண்டார்
உம்ராவ் சிங் மற்றும் குத்புடி இருவரும் மத்திய பிரதேசத்தின் அசோக்நகர் மாவட்டத்தில் உள்ள ஒரு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தனர்.
அபோது, இவர்கள் பரஸ்பரம் அதிக நேரம் செலவித்து , அவர்கள் அதிகம் பேச ஆரம்பித்தார்கள். மூன்று நாட்களில், அவர்கள் தங்களுக்குள் காதல் மலர்ந்ததை உணர்ந்தார்கள். மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்ட பிறகு, உம்ராவ் சிங் தனது குழந்தைகள் மற்றும் பேரப்பிள்ளைகளிடம் ஒப்புதல் கேட்க குத்புதியை பூராகேடியில் உள்ள தனது கிராமத்திற்கு அழைத்துச் சென்றார்.
உம்ராவ் சிங்குக்கு 4 மகன்கள் உள்ளனர், அவர்கள் அனைவரும் திருமணமானவர்கள், மற்றும் 12 பேரக்குழந்தைகள். அவர்கள் அனைவரும் இறுதியாக ஒப்புக்கொண்ட பிறகு, பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட இந்த திருமணம் இறுதியாக கிராமத்தினர் முன்னால் நடந்தது.
இந்த காதல் ஜோடியின் திருமணம் மிகவும் கோலாகலமாக நடந்தது. ஒரு பெரிய திருமண ஊர்வலம் நடந்தது. டிரம்ஸ் இசைக்கப்பட்டது. மக்கள் மகிழ்ச்சியுடன் பங்கேற்று, சந்தோஷமாக நடனமாடினர். புதிய தம்பதியினருக்கு பரிசுகளை வழங்கினர். இது ஒரு அழகான கதை!
மேலும் படிக்க | மீண்டும் தலைதூக்குமா தஞ்சை தலையாட்டி பொம்மைகள்? நம்பிக்கையுடன் காத்திருக்கும்