Fashion சில நேரங்களில் வினோதமானது; அதற்கு சான்று தான் இந்த latex pants...!
ஃபேஷன் சில நேரங்களில் வினோதமாக இருக்கும், இதனை மறுப்பதற்கில்லை. அந்த வகையில் தற்போது லேடெக்ஸ் பேன்ட்கள் எனும் புதிய வகை வினோதமான பேன்ட்டுகள் தற்போது ட்ரண்டாகி வருகிறது.
ஃபேஷன் சில நேரங்களில் வினோதமாக இருக்கும், இதனை மறுப்பதற்கில்லை. அந்த வகையில் தற்போது லேடெக்ஸ் பேன்ட்கள் எனும் புதிய வகை வினோதமான பேன்ட்டுகள் தற்போது ட்ரண்டாகி வருகிறது.
தற்போது இணையத்தில் பெரிதும் பேசப்பட்டு வரும் புதிய வகை லேடெக்ஸ் பேன்ட்கள் ஆனது, கேலி சித்திர கதாப்பாத்திரமான அலாவுதினை நினைவுபடுத்தும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
ஆண்கள் ஆடை வடிவமைப்பாளர் ஹரிகிருஷ்ணன் அவர்களால் லண்டன் காலேஜ் ஆப் ஃபேஷனில் பட்டதாரி சேகரிப்புக்காக வழங்கப்பட்ட இந்த தொகுப்பில் மிகைப்படுத்தப்பட்ட 3-D சில்ஹவுட்டுகளுடன் அசாதாரண பேன்ட் இடம்பிடித்துள்ளது. இந்த பேன்ட் ஆனது உயர்த்தப்பட்ட பலூன்களைப் போல தோற்றமளிப்பதோடு, சேகரிப்பு விளக்கக்காட்சிக்காக வடிவமைக்கப்பட்ட பிளேஸர்கள் மற்றும் ஜாக்கெட்டுகளுடன் இணைக்கப்பட்டுள்ளது.
இந்த சேகரிப்பின் பின்னால் உத்வேகம் அளித்தது வடிவமைப்பாளரின் செல்ல நாய் என அவர் தெரிவித்துள்ளார். "நான் என் நாயுடன் விளையாடும்போது எனக்கு ஒரு யோசனை வந்தது, மிகைப்படுத்தப்பட்ட பொருள்கள் இவ்வளவு குறைந்த கோணத்தில் இருந்தால் எப்படி இருக்கும் என யோசிக்க ஆரம்பித்தேன்," அப்போது உதயமானது தான் லேடெக்ஸ் பேன்ட்கள் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
சரி, இந்த தொகுப்பு பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?