விமானத்தில் செல்லும் பயணிகளுக்கு பாதுகாப்பு அறிவுரைகளை ராப் பாடலாக பாடிய பணிப்பெண்ணின் வீடியோ வைரலகி வருகிறது!! 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இந்த பரந்த உலகை சுற்றி எத்தையோ விசித்திறான நிகழ்வுகள் நடக்கின்றனர். அவைகளில் சில சம்வம் நம்மை அதிர்ச்சியில் ஆழ்த்தும், சிலை நகைச்சுவையிலும் ஆழ்த்தும். இந்நிலையில், விமானத்தில் செல்லும் பயணிகளுக்கு பாதுகாப்பு அறிவுரைகளை ராப் பாடலாக பணிப்பெண் பாடியது பயணிகளின் கவனத்தை ஈர்த்துள்ளது. விமானத்தில் பயணம் செய்தவர்களுக்கு விமானப்பணி பெண்கள் விமானம் புறப்படுவதற்கு சிறிது நேரத்திற்கு முன்பு பாதுகாப்பு குறித்த அறிவுரைகளை வழங்குவது வழக்கம். நம்மில் சிலர் அதை யாரும் காத்து கொடுத்துகூட கேட்பது கிடையாது. பெரும்பாலும் அவரவர்கள் அவர்களது வேலைகளை பார்த்து கொண்டிருப்போம். 


விமானப்பணிப்பெண்ணும் வேறு வழியின்றி இது தான் தன் வேலை என யாருமே கேட்காத பாதுகாப்பு அறிவிப்புகளை பேசுவார். இந்நிலையில் சமீபத்தில் அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸில் இருந்து உத்தா வரை சென்ற சவுத்வெஸ்ட் விமானத்தில் உள்ள பணிப்பெண் இந்த பாதுகாப்பு தகவல்களை பயணிகளை கேட்க வைக்க வித்தியாசமான முயற்சி ஒன்றை மேற்கொண்டார். விமானத்தில் அவர் பாதுகாப்பு அறிவிப்பை வெளியிடும் போது அதை ரேப் பாடலாக பாடினார். ரேப் பாடல் ஒலிக்க துவங்கியதும். தங்களது கவனத்தை விமானப்பணிப்பெண் பக்கம் திருப்பிய பயணிகள் அவரது பாடலுக்கு ஏற்பட கைகளை தட்ட துவங்கினர். 


பாடல் முடிந்ததும் பலர் அந்த பெண்ணை பாராட்டினர். இந்த சமபவம் முழுவதும் வீடியோவாக இன்ஸ்டாகிராமில் வெளியாகி வைரலாக பரவி வருகிறது. அந்த வீடியோ பதிவு கீழே இணைக்கப்பட்டுள்ளது.