மணமகன் கேமராமேனை அடிக்கும் வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது.. மணமகளை வலசுவலசு ஃபோட்டோஷூட் செய்த போட்டோக்காரரை பளார் என அரைந்த மணமகன்.. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இந்த பறந்து விரிந்த உலகில் ஒவ்வொரு நிமிடமும் ஏதாவது ஒரு மூலையில் விசித்திரமான செயல் நடந்து கொண்டு தான் இருக்கிறது. அது, நகைச்சுவையாகவும் இருக்கலாம்; அல்லது அதிர்ச்சி தரக்கூடிய நிகழ்வுகளாவும் இருக்கலாம். அந்த நிகழ்வுகள் அனைத்து இணையதளம் (Social Media) மூலம் நம்மிடம் வந்து சேர்கிறது. அந்தவகையில், தனது திருமானத்தின் போது மணமகளை வலசுவலசு ஃபோட்டோஷூட் செய்த போட்டோக்காரரை பளார் என அரைந்த மணமகனின் வீடியோ இணையதளத்தில் வைரலாகி வருகிறகு. 


திருமணம் (Wedding) என்றாலே கொண்டாட்டம் தான். மணமக்களுக்கு தங்கள் வாழ்க்கை துணை கிடைத்த மகிழ்ச்சி; பெற்றவர்களுக்கு கடமையை நிறைவேற்றிய நிம்மதி; உறவினர்களுக்கு ஒரு ரீயூனியன் வந்த சந்தோஷம் என திருமண மண்டபமே மகிழ்ச்சியில் (happiness) நிறைந்திருக்கும். அங்கு மணமக்களை விட அதிக பிஷியாக இருப்பவர்கள் போட்டோகிராபர்களும், கேமராமேன்களும் (cameramen) தான்.. அப்படி ஒரு கேமராமேன், மணமகனை தவிர்த்து, மணமகளை மட்டும் வளைத்து வளைத்து போட்டோ எடுக்க, கடுப்பான மணமகன் செய்த காரியமும், அதற்கு மணமகள் காட்டிய ரியாக்ஷனும் செம வைரலாகி உள்ளது.



சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வரும் அந்த வீடியோவில் (Viral), மணமேடையில் இருக்கும் மணமக்களை, போட்டோகிராபர் ஒருவர் போட்டோ எடுக்கிறார். அதில் மணமகனை மட்டும் தள்ளி நிறுத்திவிட்டு, மணமகளை போட்டோ எடுக்க துவங்கினார். சிறிது நேரம் பொறுத்துப்பார்த்த மணமகன், கடுப்பாகி போட்டோகிராபரின் பின்தலையில் அடித்து விடுகிறார். பின் அங்கிருந்து நகர்கிறார்.


இதனை எதிர்பார்க்காத போட்டோகிராபர் சிரித்து சமாளிக்க, மணமகளுக்கோ அதிர்ச்சிக்குப்பதில் சிரிப்பு தான் வருகிறது. வயிறு வலிக்க சிரித்து தரையில் அமரும் மணமகள், தொடர்ந்து சிரித்து கொண்டே இருக்கிறார். இந்த வீடியோவுக்கு நெட்டிசன்கள், லைக்ஸ்களையும், கமெண்ட்களையும் குவித்து வருகின்றனர்.


உலக நிகழ்வுகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள ZEE இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்...


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR