விராத்-அனுஷ்கா திருமண வரவேற்பு நிகழ்ச்சி நேற்று (21-ம் தேதி) டெல்லியில் நடைபெற்றது. அடுத்து வரவேற்பு நிகழ்ச்சி வரும் 26-ம் தேதி மும்பையிலும் நடைபெறுகிறது


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இந்திய கிரிக்கெட் அணி கேப்டன் விராத் கோலி மற்றும் பாலிவுட் நடிகை அனுஷ்கா ஷர்மா இருவரும் கடந்த 11-ம் தேதி இத்தாலியில் திருமணம் செய்து கொண்டார். 


இதையடுத்து, இத்தம்பதியருக்கு இரண்டு இடங்களில் திருமண வரவேற்பு நிகழ்ச்சியை நடத்த திட்டமிட்டனர். அதன்படி நேற்று (21-ம் தேதி) டெல்லியில் வரவேற்பு நிகழ்ச்சி நடைபெற்றது. அடுத்து வரவேற்பு நிகழ்ச்சி வரும் 26-ம் தேதி மும்பையிலும் நடைபெறுகிறது. 


அதன்படி நேற்று டெல்லியில் உள்ள தாஜ் பேலஸ் ஹோட்டலில் டார்பார் ஹாலில் வரவேற்பு நிகழ்ச்சி நடைபெற்றது. முக்கிய விருந்தினர்களுக்கு மட்டும் அழைப்பு விடுக்கப்பட்டது. இந்நிலையில், பிரதமர் நரேந்திர மோடி, நிதி அமைச்சர் அருண் ஜெட்லி, விராத் தம்பதியரின் நண்பர்கள் மற்றும் இந்திய கிரிக்கெட் வீரர் சுரேஷ் ரெய்னா, ஷிகர் தவான் மேலும் பல முக்கிய பிரமுகர்கள் பங்கேற்று விராத் தம்பதிகளை வாழ்த்தினர்.


இந்த திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் இந்திய கிரிக்கெட் வீரர் ஷிகர் தவான், அனுஷ்கா மற்றும் விராத் கோலியும் பஞ்சாபி பாட்டுக்கு அசத்தல் டான்ஸ் ஆடினார். 


வீடியோ: