புதுடெல்லி: நீங்கள் வோடபோன் ஐடியாவின் வாடிக்கையாளராக இருந்தால், உங்களுக்கு ஒரு அட்டகாசமான செய்தி காத்திருக்கிறது. வோடபோன் ஐடியாவின் ஒரு திட்டத்தில், சாதாரண அழைப்பு மற்றும் மெசேஜ்களைத் தவிர இன்னும் பல சிறப்பம்சங்கள் உள்ளன. இந்த திட்டத்தைப் பற்றி இங்கே காணலாம். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

558 ரூபாய் திட்டம்
Vi இன் இந்த அபாரமான பேக்கின் விலை வெறும் 558 ரூபாய் ஆகும். மற்ற நிறுவனங்கள் இந்த விலையில் 1.5 ஜிபி மற்றும் 2 ஜிபி தரவை வழங்குகின்றன. ஆனால் Vi இன்  இந்த  ரீசார்ஜில் நீங்கள் தினமும் 3 ஜிபி தரவைப் பெறுவீர்கள். இந்த ரீசார்ஜ் பேக் 56 நாட்களுக்கு செல்லுபடியாகும். இந்த வழியில், இந்த திட்டத்தில் மொத்தம் 168 ஜிபி தரவைப் பெறுவீர்கள். இது தவிர, இந்த பேக் அனைத்து நெட்வொர்க்குகளிலும் வரம்பற்ற அழைப்பையும் உள்ளடக்கியுள்ளது. மேலும், இந்த திட்டத்தின் கீழ் தினமும் 100 இலவச எஸ்எம்எஸ்-சும் அனுப்பலாம்.


இந்த வசதிகளும் கிடைக்கும்
வோடபோன் ஐடியாவின் (Vodafone Idea) பிரத்தியேக நன்மைகளைப் பற்றி பேசினால், அதில் 'பிங் ஆல் நைட்' (Binge All Night) மற்றும் 'வீக்கெண்ட் டேட்டா ரோல்ஓவர்'  (Weekend Data Rollover) போன்ற அம்சங்களும் கிடைக்கின்றன. 


ALSO READ: மிகச்சிறந்த ப்ரீபெய்ட் திட்டங்கள்: தினமும் 1.5GB-ஐ விட அதிக தரவு, இன்னும் பல நன்மைகள்


Binge All Night
இந்த திட்டத்தில் உங்களுக்கு வரம்பற்ற தரவு வழங்கப்பட்டுள்ளது. இதில் நீங்கள் இரவு 12 மணி முதல் காலை 6 மணி வரை வரம்பற்ற தரவைப் பயன்படுத்தலாம். மேலும் இந்தத் தரவு உங்கள் திட்டத்திலிருந்து குறைக்கப்படாது.


Weekend Data Rollover
இந்த வசதியின் கீழ், மீதமுள்ள தரவைப் பயன்படுத்த தொலைத் தொடர்பு நிறுவனமான Vi உங்களை அனுமதிக்கிறது. அதாவது திங்கள் முதல் வெள்ளி வரை, எந்தெந்த நாட்களில் நீங்கள் முழு 3 ஜிபி தரவைப் பயன்படுத்தவில்லையோ, அந்த நாட்களில் மிச்சமிருக்கும் தரவை நீங்கள் வார இறுதியில் பயன்படுத்திக் கொள்ளலாம்.


வோடபோன் ஐடியாவின் இந்த ரீசார்ஜ் திட்டம் (Recharge Plan) பல வகைகளில் வாடிக்கையாளர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.


ALSO READ: அசத்தலான சலுகைகளுடன் அறிமுகம் செய்யப்பட்ட வோடபோன் ஐடியா ரூ.299 திட்டம்!
 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR