Jio, Airtel, Vi வழங்கும் மிகச்சிறந்த ரீசார்ஜ் திட்டங்கள்: எக்கச்சக்க நன்மைகள்

நீங்கள் தினமும் 1.5 ஜிபி அல்லது 2 ஜிபி தரவைப் பயன்படுத்தினால், ஜியோ, ஏர்டெல் மற்றும் வோடபோன் போன்ற நிறுவனங்கள் உங்களுக்காக பல திட்டங்களைக் கொண்டு வந்துள்ளன.

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Apr 28, 2021, 01:57 PM IST
  • கொரோனா காலத்தில் அனைவரும் வீட்டிலிருந்து பணிபுரிந்து வருகிறார்கள்.
  • அனைவருக்கும் தரவுகள் அதிகமாகத் தேவைப்படுகின்றன.
  • பல முன்னணி தொலைத்தொடர்பு நிறுவனங்கள் பல மலிவான திட்டங்களைக் கொண்டு வந்துள்ளன.
Jio, Airtel, Vi வழங்கும் மிகச்சிறந்த ரீசார்ஜ் திட்டங்கள்: எக்கச்சக்க நன்மைகள் title=

இந்த கொரோனா காலத்தில் அனைவரும் வீட்டிலிருந்து பணிபுரிந்து வருகிறார்கள். அனைவருக்கும் தரவுகள் அதிகமாகத் தேவைப்படுவதோடு இலவச அழைப்புகள் இருப்பது கூடுதல் நன்மையாக இருக்கிறது. 

நீங்கள் தினமும் 1.5 ஜிபி அல்லது 2 ஜிபி தரவைப் பயன்படுத்தினால், ஜியோ, ஏர்டெல் மற்றும் வோடபோன் போன்ற நிறுவனங்கள் உங்களுக்காக பல திட்டங்களைக் கொண்டு வந்துள்ளன. தொலைபேசிகளின் பயன்பாடு அதிகரித்து வருவதைக் கருத்தில் கொண்டு, நிறுவனங்கள் 2 ஜிபி தினசரி தரவுத் திட்டங்களையும் வழங்குகின்றன. இதன் மூலம், உங்கள் அலுவலக வேலையை எளிதாக நீங்கள் செய்யலாம், மேலும் வீடியோக்களையும் எளிதாகக் காணலாம். உங்கள் வீட்டில் வைஃபை இல்லையென்றால், இந்த தரவுத் திட்டங்களை நீங்கள் பயன்படுத்தலாம். வோடபோன், ஏர்டெல் மற்றும் ஜியோ வழங்கும் சிறந்த திட்டங்களைப் பற்றி இங்கே காணலாம். 

ஜியோ 1.5 மற்றும் 2 ஜிபி திட்டங்கள் 

ரூ 199, ரூ. 399, ரூ 555 முதல் ரூ 2121 வரையிலான தொகைகளில் வெவ்வேறு செல்லுபடியுடன் ஜியோவின் இந்த திட்டங்கள் கிடைக்கின்றன. அனைத்து திட்டங்களிலும், நீங்கள் தினமும் 1.5 ஜிபி தரவைப் பெறுவீர்கள். 199 ரூபாய் திட்டத்திற்கு 28 நாட்கள் செல்லுபடி காலம், வரம்பற்ற அழைப்பு மற்றும் பிற நெட்வொர்க்குகளில் அழைப்புகளுக்கு 1000 நிமிடங்கள் ஆகிய நன்மைகள் கிடைக்கின்றன. அதே நேரத்தில், 2 ஜிபி தினசரி தரவுகளுக்கு ரூ .249 ப்ரீபெய்ட் திட்டத்தை நீங்கள் எடுத்துக்கொள்ளலாம். இதில் 28 நாட்கள் செல்லுபடி, வரம்பற்ற அழைப்பு வசதி மற்றும் தினசரி 100 எஸ்எம்எஸ் ஆகிய நன்மைகள் கிடைக்கும். இதில் ஜியோவின் (Jio) பிரீமியம் செயலிகளின் சந்தாவும் கிடைக்கும். 

ALSO READ: மலிவான ஜியோ தொலைபேசி ரீசார்ஜ் திட்டத்தின் குரல் அழைப்பு - தரவு நன்மை!

வோடபோனின் 1.5 மற்றும் 2 ஜிபி தரவுத் திட்டங்கள்:

வோடபோனில் (Vodafone) நீங்கள் ரூ .249, ரூ. 399, ரூ .599 மற்றும் ரூ .2399 திட்டங்களைப் பெறலாம். இதில் 249 ரூபாய் திட்டத்தின் செல்லுபடியாகும் கால அளவு 28 நாட்களாகும். தினசரி 1.5 ஜிபி தரவு, அனைத்து நெட்வொர்க்குகளிலும் வரம்பற்ற அழைப்பு ஆகியவை இந்த திட்டத்தில் கிடைக்கிறது. அதே நேரத்தில், நீங்கள் 2 ஜிபி தரவைப் பெற விரும்பினால், ரூ. 595 திட்டத்தை எடுக்கலாம். இந்த திட்டத்தில் தினசரி 2 ஜிபி தரவு, 56 நாட்கள் செல்லுபடி காலம், வரம்பற்ற அழைப்பு மற்றும் 100 எஸ்எம்எஸ் ஆகிய நன்மைகள் கிடைக்கின்றன. இந்த திட்டத்தில் உங்களுக்கு Zee5 பிரீமியம் மற்றும் Vi செயலியின் இலவச சந்தாவும் வழங்கப்படுகிறது.

ஏர்டெல்லின் 1.5 மற்றும் 2 ஜிபி தரவுத் திட்டங்கள்:

தினசரி 1.5 ஜிபி டேட்டா கொண்ட திட்டங்களில், ஏர்டெல் (Airtel) ரூ .249, ரூ .279, ரூ .297, ரூ .399, ரூ .497, ரூ. 598 மற்றும் ரூ 2398 ஆகிய திட்டங்கள் உள்ளன. 249 ரூபாய் திட்டத்தில், 28 நாட்கள் செல்லுபடி காலம், வரம்பற்ற அழைப்பு வசதி ஆகியவை வழங்கப்படுகின்றன. அதே நேரத்தில், உங்களுக்கு 2 ஜிபி தரவு தேவைப்பட்டால், ஏர்டெல்லின் 298 திட்டத்தை வாங்கலாம். இதில் 28 நாட்கள் செல்லுபடி காலம், தினமும் 2 ஜிபி தரவு ஆகிய நன்மைகள் கிடைக்கின்றன. மேலும் இந்த திட்டத்தில் வரம்பற்ற அழைப்பு மற்றும் தினசரி 100 எஸ்எம்எஸ் ஆகிய நன்மைகளும் கிடைக்கின்றன. விங்க் மியூசிக் மற்றும் ஏர்டெல் எக்ஸ்ட்ரீம் போன்ற செயலிகளின் இலவச சந்தாவும் இந்த திட்டத்தில் உங்களுக்கு வழங்கப்படுகிறது.

ALSO READ: Jio அதிரடி: 1 ரூபாயில் 56 GB 4G இணைய வசதி, 28 நாள் வேலிடிட்டி, முந்துங்கள்!!

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR

Trending News