வோடபோன் ஐடியா சமீபத்தில் ஒரு புதிய REDX குடும்ப போஸ்ட்பெய்ட் திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இதன் விலை 1,348 ரூபாய். சமீபத்திய போஸ்ட்பெய்ட் திட்டத்தை குடும்பத்தின் இரு உறுப்பினர்களிடையே பகிர்ந்து கொள்ளலாம். இருவரும் வரம்பற்ற அழைப்பு, எஸ்.டி.டி மற்றும் தேசிய ரோமிங் அழைப்புகள் மற்றும் ஒவ்வொரு மாதமும் 100 SMS ஆகியவற்றை பெற முடியும். இதனுடன் பயனர்கள் இந்த திட்டத்தில் பல கூடுதல் நன்மைகளையும் பெறுகின்றனர்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

1,348 REDX குடும்பத் திட்டம் தற்போதுள்ள Vi RED குடும்பத் திட்டங்களின் வரிசையில் வருகிறது. இதன் விலை ரூ .999, ரூ .799, ரூ. 649 என்றுள்ளது. சமீபத்திய Vi போஸ்ட்பெய்ட் திட்டம் உத்தரபிரதேச (Uttar Pradesh) கிழக்கு வட்டம் உட்பட இந்தியாவில் தேர்ந்தெடுக்கப்பட்ட வட்டங்களில் கிடைக்கிறது. டெல்கோ நிறுவனம் குடும்ப போஸ்ட்பெய்ட் திட்டத்தை இந்தியாவின் பிற பகுதிகளிலும் வரும் மாதங்களில் அறிமுகம் செய்யக்கூடும்.


Vi-ன் 1,348 RedX குடும்ப போஸ்ட்பெய்ட் திட்டத்தில், பயனர்கள் பிரபலமான OTT தளத்திற்கான இலவச சந்தாவைப் பெறுகின்றனர். ஓர் ஆண்டிற்கான Netflix-ன் இலவச சந்தா இதில் கிடைக்கிறது. இது ரூ .5,998 என்ற விலையில் வருகிறது.


Amazon Prime-ன் 999 ரூபாய் மதிப்புள்ள ஆண்டு சந்தா இலவசமாக வழங்கப்படுகிறது. மேலும், இந்த திட்டத்தில் Vi Movies & TV செயலியின் இலவச சந்தாவும் வழங்கப்படுகிறது.


Vi வலைத்தளத்தின் தகவல்களின்படி, முதன்மை உறுப்பினர்கள் (Primary Members) மட்டுமே வரம்பற்ற மொபைல் இணைய தரவை அனுபவிக்க முடியும். இரண்டாம் நிலை உறுப்பினர்களுக்கு (Secondary Users) 30GB அதிவேக தரவு வழங்கப்படும். இரண்டாம் நிலை பயனர்களுக்கான கூடுதல் தரவு ஒரு GB-க்கு ரூ .20 என வழங்கப்படும். இரண்டாம் நிலை இணைப்புகளுக்கு 50 GB வரை டேட்டா ரோல்ஓவரும் உள்ளது.


ALSO READ: குறைந்த விலையில் புதிய 3 திட்டங்களை அறிமுகம் செய்த BSNL!


1,348 REDX குடும்ப போஸ்ட்பெய்ட் திட்டத்தைத் தவிர, Vi-யின் ரூ. 649 திட்டத்திலும் இரண்டு உறுப்பினர்களிடையே தரவைப் பகிர அனுமதி உள்ளது. ரூ .649 உடன், இரு உறுப்பினர்களும் ஒவ்வொரு மாதமும் 100 SMS, வரம்பற்ற லோக்கல் மற்றும் எஸ்.டி.டி அழைப்புகளுக்கான வசதிகளையும் அனுபவிக்க முடியும். இருப்பினும், தரவைப் பொறுத்தவரை, முதன்மை உறுப்பினர்கள் 50GB மொபைல் தரவைப் பெறுகிறார்கள். இரண்டாம் நிலை உறுப்பினர்கள் 30GB தரவைப் பெறுகிறார்கள்.


ALSO READ: வோடபோன் - ஐடியா வாடிக்கையாளர்கள் பெரிய அதிர்ச்சி!


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR