உலகெங்கும் உள்ள காதலர்கள் இந்த காதலர் தின வாரத்தை வெகு விமர்சையாக கொண்டாடி வருகின்றனர்.  பிப்ரவரி 14 ஆம் தேதி காதலர் தினத்தை முன்னிட்டு அதற்கு முன் பிப்ரவரி 7 ஆம் தேதியிலிருந்து 14ஆம் தேதி வரை காதலர் தின வாரம் கொண்டாடப்படுகிறது.  இதில் ஒவ்வொரு நாளும் ரோஸ் டே, சாக்லேட் டே, டெடி டே, ஹக் டே, கிஸ் டே என பல தினங்கள் கொண்டாடப்பட்டு வருகிறது. இதில் ஒவ்வொரு நாளும் காதலர்கள் தங்கள் காதலை அவர்களது இணையருக்கு வெளிப்படுத்தி வருகின்றனர்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING


மேலும் படிக்க | Hug Day 2022: மந்திரம் செய்யும் கட்டிப்பிடி தந்திரம்! ஒரு நாளைக்கு எத்தனை முறை கட்டிப்பிடிக்கலாம்?


இந்த தினத்தில் காதலர்கள் மகிழ்ச்சியுடன் இந்த தினங்களை கொண்டாடினாலும், காதலில் தோல்வியுற்றவர்கள் இந்த தினங்களை வெறுப்புடன் கடந்து செல்கின்றனர்.  காதலர்களில் ஒருவர் மனம் மாறி பிரிந்து சென்றாலும் சரி, இருவருமே ஒருமனதாக முடிவு எடுத்து உறவை முறித்துக் கொண்டாலும் சரக எப்படியாகிலும் காதல் தோல்வியுற்றது தோல்வியுற்றது தான்.  எப்படி இருந்தாலும் காதல் தோல்வியின் வலி பிரிந்தவர்களின் மனதில் இருக்கத்தான் செய்யும். காதலில் தோல்வியடைந்தவர்கள் சிலர் அவர்களது துணையின் மீது வெறுப்புணர்வை காட்டி பழிவாங்க முயற்சி செய்வார்கள்.  அப்படிப் பழிவாங்க முயற்சி செய்தது சில பாதகமான விளைவுகளை ஏற்படுத்தி விடும்.  அவ்வாறு தீங்கிழைக்கும் விளைவுகளை ஏற்படுத்தாமல்  பழிவாங்கவும், அதேசமயம் நாம் மகிழ்ச்சியாகவும் இருக்க இங்கிலாந்தில் ஒரு வித்தியாசமான ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது.



தெற்கு இங்கிலாந்தில் உள்ள உயிரியல் பூங்கா ஒன்றில் அதிக அளவிலான மடகாஸ்கர் இனத்தை சேர்ந்த கரப்பான் பூச்சிகள் உள்ளன.  இந்த பூங்காவிற்கு வரும் பார்வையாளர்கள் 150 ரூபாய் செலுத்தி அங்குள்ள மடகாஸ்கர் இன கரப்பான் பூச்சிக்கு அவர்களது முன்னாள் காதலர்கள் பெயர்களை வைத்துக்கொள்ளலாம்.  பொதுவாகவே கரப்பான் பூச்சி அனைவராலும் வெறுக்கப்படும் ஒரு உயிரினம்.  இதை பார்க்கும் பொழுது பலருக்கும் அருவருப்பான உணர்வு தோன்றும். அத்தகைய கரப்பான் பூச்சிக்கு கண்ணீரை பரிசாக அளித்து மன வேதனையில் விட்டுச் சென்ற முன்னாள் காதலர்களின் பெயர்களை வைத்து அவர்களை பழி வாங்குவதுடன் நாம் மகிழ்ச்சியும் அடையலாம்.  இந்த உயிரியல் பூங்காவிற்கு பலரும் வருகை தந்து பணம் செலுத்தி கரப்பான் பூச்சிக்கு அவர்களது முன்னாள் காதலர் பெயரை வைத்து மகிழ்ச்சி அடைகின்றனர்.  இதன் மூலம் கிடைக்கும் பணத்தில் உயிரியல் பூங்காவை மேம்படுத்த பயன்படுத்துவதாக நிர்வாகத்தினர் கூறுகின்றனர்.


மேலும் படிக்க | Valentine Zodiac: காதலில் பட்டையைக் கிளப்பும் ஆண்களின் ராசிகள்


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR