உங்கள் குழந்தைகள் அறிவாளியாக வளரனுமா? பெற்றோர்களே இதை செய்யுங்கள்
Parenting Tips : குழந்தைகள் அறிவோடு வளர்க்க பெற்றோர்களுக்கு முக்கிய அம்சம் ஒன்றை அமெரிக்க ஆய்வாளர்கள் பரிந்துரைத்துள்ளனர்
பச்சிளம் குழந்தைகள் அறிவாளிகளாக பெற்றோர்கள் வளர்க்க விரும்பினால், அவர்களோடு சேர்ந்து சின்ன சின்ன உரைகள் எல்லாம் சத்தமாக பெற்றோர்கள் படிக்க வேண்டும் என தெரிவித்துள்ளனர். அமெரிக்கன் அகாடமி ஆப் பீடியாட்ரிக்ஸ், குழந்தைகள் நல மருத்துவர்களுக்கு இந்த அறிவுறுத்தலை வழங்கியுள்ளது.
குழந்தைகளை எப்படி வளர்க்க வேண்டும்?
மருத்துவர்களுக்கு கொடுக்கப்பட்டிருக்கும் சிறிய புத்தகத்தில் குழந்தைகள் உடனான உறவை வலுப்படுத்துவதற்கும், அவர்களின் மூளை செயல்பாட்டை தூண்டுவதற்கும் ஆரம்பகால வாசிப்புகள் மிக அவசியம் என ஆய்வாளர்கள் கூறியுள்ளனர். பச்சிளம் குழந்தைகளுடன் பெற்றோர் அமர்ந்து மகிழ்ச்சியாக உரையாடுவது, நல்ல விஷயங்களை பேசுவது போன்றவை அவர்களின் வளர்ச்சியில் முக்கிய பங்கு வகிப்பதாக தெரிவித்துள்ளனர்.
மேலும் படிக்க | பெண் பிள்ளைகளுக்கு அப்பாவை அதிகமாக பிடிப்பது ஏன்? காரணம் இதுதான்!
பெற்றோர்கள் சத்தமாக வாசிக்கவும்
தினமும் குறிப்பிட்ட நேரம் பெற்றோர்கள் வாசிப்பு பயிற்சியை செய்வது சிறந்தது என அமெரிக்கன் அகாடமி ஆப் பீடியாட்ரிக்ஸ் பரிந்துரைத்துள்ளது. குழந்தைகள் சிரிக்கும் வகையில் சைகைகள் செய்து கொண்டு, சத்தமாக வாசிக்கும்போது, வார்த்தைகளையும், அதன் பொருளையும் சீக்கிரமே கிரகித்துக் கொள்ளத் தொடங்குகிறார்கள் என்றும் ஆய்வாளர்கள் அந்த வழிகாட்டுதல் குறிப்பில் தெரிவித்துள்ளனர். தொடர்ச்சியாக செய்யப்படும் இந்த விஷயங்களே குழந்தைகளிடம் வளர்ச்சியடையும் மூளையை கட்டமைக்கும் என்று கூறியுள்ளனர்.
வண்ணப்படங்கள் மூலம் கற்பித்தல்
வண்ணப் படங்கள், பெரிய எழுத்துக்களால் எழுதப்பட்ட உரைகள், வண்ணப் படங்கள் நிரம்பிய அச்சு புத்தகங்கள் குழந்தைகளை வெகுவாக ஈர்க்கும். அவற்றை அவர்கள் பார்க்கும்போது மெல்ல மெல்ல புரிந்து கொள்ள தொடங்குகிறார்கள் என ஆய்வாளர்கள் கூறுகின்றனர். மின்னணு சாதனங்கள் புத்தகங்கள் கொடுக்கும் மகிழ்ச்சியை கொடுப்பதில்லை. செல்போன், கம்ப்யூட்டர் போன்றவற்றை குழந்தைகள் பயன்படுத்துவது என்பது ஒருவருடன் பழகும் தன்மை, பழகும்போது ஏற்படும் உணர்ச்சிகள், நட்பை உருவாக்குதல், பரஸ்பரம் பதில் அளித்தல் போன்ற விஷயங்களை கொடுப்பதில்லை. மாறாக தனிமை, செயலற்ற தன்மை ஆகியவற்றுக்கு குழந்தைகளை இட்டுச் செல்வதாக குழந்தை வளர்ப்பு நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.
வாசிப்பை ஊக்குவித்தல்
குழந்தைகள் மத்தியில் நல்ல வாசிப்பை ஊக்குவிக்க வேண்டும் என பெற்றோர்களுக்கு குழந்தைகள் நல ஆய்வாளர்கள் கூறியுள்ளனர். அதற்கு ஏற்ற வார்த்தை விளையாட்டுகள் ஆகியவற்றை பெற்றோர் குழந்தைகளுடன் விளையாடும்போது, கற்பதை அனுபவித்து குழந்தைகள் செய்வதாகவும் அமெரிக்கன் அகாடமி ஆப் பீடியாட்ரிக்ஸ் தெரிவித்துள்ளது. எனவே குழந்தைகளை அறிவாளியாக வளர்க்க விரும்பும் பெற்றோர்கள் இவ்விஷயங்களில் கவனம் செலுத்துங்கள்.
பெற்றோர் புரிந்து கொள்ள வேண்டியவை
குழந்தைகள் கற்றுக் கொள்ள எப்போதுமே ஆர்வமாக இருப்பார்கள். அவர்களுக்கு பெற்றோராகிய நீங்கள் தான் நேரம் ஒதுக்கி கற்றுக் கொடுக்க வேண்டும். பள்ளிகளில் எல்லா விஷயங்களையுமே கற்றுக் கொடுக்கமாட்டார்கள். உங்கள் குழந்தை புத்திசாலியாக இருக்க வேண்டும் என விரும்பினால் நீங்கள் தான் எந்த விஷயங்களை கற்றுக் கொடுக்கலாம் என்பதை முன்னுரிமை கொடுத்து செய்ய வேண்டும். வாசிப்பு, விளையாட்டு என எதுவாக இருந்தாலும் அவர்களோடு சேர்ந்து நீங்களும் விளையாடுங்கள். படியுங்கள். உங்களோடு சேர்ந்து செய்யும்போது குழந்தைகளுக்கு இரட்டிப்பு மகிழ்ச்சி கிடைப்பதுடன் வேகமாகவும், ஈஸியாகவும் கற்றுக் கொள்வார்கள்.
மேலும் படிக்க | ஆப்பிள் சூப்பர்புட் தான்... ஆனால், அளவிற்கு மிஞ்சினால் ஆரோக்கியம் காலியாகிவிடும்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ