மாரடைப்பு ஏற்படுவதற்கு முன் இந்த மாதிரியான அறிகுறிகள் தோன்றுமாம்
Heart Attack Warning Signs: அதிக வியர்வை, மூச்சுத் திணறல் மற்றும் சுவாசிப்பதில் சிரமம் ஆகியவை மாரடைப்புக்கான எச்சரிக்கை அறிகுறிகளாகும்.
மாரடைப்பு என்பது மற்ற நோய்களைப் போல எந்த அறிகுறியும் இல்லாமல் திடீரென வருவது என்று நாம் நினைத்துக் கொண்டிருக்கிறோம். இன்றைய கால கட்டத்தில் பெரும்பாலான மக்கள் இறப்பதற்கு மாரடைப்பு மிக முக்கிய காரணமாக இருக்கிறது. இதற்கு காரணம் இதன் அறிகுறிகளை கண்டு கொள்ளாமல் விடுவது தான். அதிக வியர்வை, மூச்சுத் திணறல் மற்றும் சுவாசிப்பதில் சிரமம் ஆகியவை தென்பட்டால் உடனே அவசர எண்ணை அழைத்து சிகிச்சை பெறுங்கள். எனவே மாரடைப்பும் சில அறிகுறிகளை நம்மிடம் காட்டிவிட்டு தான் வரும். அவை என்னென்ன என்பது குறித்து இங்கே விளக்கமாகப் பார்க்கலாம்.
மாரடைப்பு நோயாளிகளுக்கு பொதுவான ஒன்று
கடந்த சில ஆண்டுகளாக, டெல்லியின் ஜிபி பண்ட் மருத்துவமனையில் உள்ள இதய நோயாளிகளில் 20% பேர் 18 முதல் 45 வயதுக்குட்பட்டவர்கள் என்ற அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. தற்போதைய வாழ்க்கை முறை மாற்றங்களால் மாரடைப்பு என்ற பாதிப்பு நம்மில் பெரும்பாலனவரை பாதித்து வருகிறது. காரணம் உணவுப் பழக்க வழக்கங்கள், உட்கார்ந்தே இடத்திலேயே வேலை செய்வது, பாஸ்ட் புட், பதப்படுத்தப்பட்ட இறைச்சிகள் சாப்பிடுவது, போதிய உடற்பயிற்சியின்மை இவற்றால் 20 வயதிலேயே மாரடைப்பை சந்திக்கிறார்கள்.
மேலும் படிக்க | Heart Health: இதய நோய்களை மருந்து இல்லாமல் குணப்படுத்த செய்ய வேண்டியவை என்ன
* மார்பில் அசெளகரியம் தென்படும். மாரடைப்பு ஏற்படுவதற்கு முன்னால் சில நிமிடங்கள் நடு நெஞ்சில் வலி உண்டாகும். மார்பில் அழுத்தம், கணத்தில், வலி நேரலாம். அதே போல் கை, முதுகு, தாடை மற்றும் வயிற்றிலும் வலி அல்லது அசெளகரியத்தை உணர்வீர்கள்.
* மார்பில் வலி இல்லாமல் கூட மூச்சு விட சிரமம் உண்டாகும். வியர்த்தல், குமட்டல் அல்லது லேசான தலைவலி ஏற்படலாம். பெண்களுக்கும் ஆண்களுக்கும் அறிகுறிகள் வித்தியாசமானது மாரடைப்பில் ஏற்படும் நெஞ்சு வலி ஆண்களுக்கும் பெண்களுக்கும் பொதுவான தாக இருக்கும்.
* மூச்சு விட சிரமம், குமட்டல், வாந்தி, தாடை மற்றும் முதுகு வலி போன்ற அறிகுறிகளை ஆண்களை விட பெண்கள் அதிகமாக காண்கின்றனர்.
* நீங்கள் ஒரு உடற்பயிற்சியில் ஈடுபட்ட பிறகோ அல்லது படிக்கட்டுகளில் ஏறிச் சென்ற பிறகு, உங்களுக்கு அதிகப்படியாக மூச்சு வாங்குகிறது? அப்படி இருந்தால், இது அடைபட்ட தமனிகளின் அறிகுறியாக இருக்கலாம். மேலும் இது, சில நாட்களில் மாரடைப்புக்கு வழிவகுக்கும்.
(பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டது. அதை ஏற்றுக்கொள்வதற்கு முன், கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெறுங்கள். ZEE NEWS இதற்கு பொறுப்பேற்காது.)
மேலும் படிக்க | இதய துடிப்பை சீராக்கும் ‘பொட்டாஷியம்’; இந்த அறிகுறிகளை அலட்சியம் செய்யாதீர்கள்!
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR