யார் இந்த சூப்பர் விமன்: விரேந்தர் சேவாக் வீடியோ வெளியீடு!
கிரிக்கெட் வீரர் விரேந்தர் சேவாக், வயதான பெண் டைப்பிஸ்ட் வீடியோ ஒன்றை சமூக வலைதளத்தில் வெளியிட்டு, அவரை ‘சூப்பர் விமன்’ என பாராட்டியுள்ளார்.
கிரிக்கெட் வீரர் விரேந்தர் சேவாக், வயதான பெண் டைப்பிஸ்ட் வீடியோ ஒன்றை சமூக வலைதளத்தில் வெளியிட்டு, அவரை ‘சூப்பர் விமன்’ என பாராட்டியுள்ளார்.
மத்தியப்பிரதேச மாநிலம் செஹோர் மாவட்டத்தை சேர்ந்த லட்சுமி பாய் (72) என்ற மூதாட்டி செஹோர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில், ஆவணங்கள் மனுக்கள் டைப்பிங் செய்து வருகிறார்.
இவர் வேகமாக டைப்பிங் செய்வதை பார்த்த கிரிக்கெட் வீரர் விரேந்தர் சேவாக், லட்சுமி பாயை வீடியோ எடுத்து தனது டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். தற்போது அந்த வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது. கிரிக்கெட் வீரர் விரேந்தர் சேவாக், வெளியிட்ட அந்த வீடியோவில் ‘சூப்பர் விமன்’, கற்பதற்கும், பணிபுரிவதற்கும் வயது ஒரு தடையில்லை. லட்சுமி பாயிடம், இளைஞர்கள் நிறைய கற்றுக் கொள்ள வேண்டும் என பாராட்டி கருத்து பதிவிட்டுள்ளார்.
இது குறித்து லட்சுமி பாய் கூறுகையில்\, “நான் ஒன்றும் பிச்சைக்காரி இல்லை. எனக்கு கிடைத்த வேலை மூலம் குடும்பத்தை காப்பாற்றி வருகிறேன். என் மகள் விபத்திற்குள்ளான பிறகு நான் எடுத்துக் கொண்ட கடன்களை திருப்பிச் செலுத்துவதற்கு இதைச் செய்கிறேன். DC Raghvendra Singh & SDM Bhavana Vilambe ஆகியோரின் உதவியுடன் இந்த வேலை எனக்கு கிடைத்தது. விரேந்தர் சிங் எனது வீடியோவை பகிர்ந்தது எனக்கு மகிழ்ச்சி அளிக்கிறது. வங்கியில் வாங்கிய கடனை கட்ட முடியாமல் தவிக்கும் எனக்கு யாரேனும் உதவி செய்ய வேண்டும்" எனக் கேட்டுக்கொண்டுள்ளார்.