புதுடில்லி: ஸ்ட்ரீமிங் நிறுவனமான Netflix வார இறுதி நாட்களான டிசம்பர் 5-6 ஆம் தேதிகளில் தனது தளத்தின் சேவைகளை இலவசமாக அளிக்க முடிவு செய்துள்ளதாக அறிவித்துள்ளது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இந்தியாவில் உள்ள அனைவரும் டிசம்பர் 5 நள்ளிரவு 12 மணி முதல் தொடங்கி இரண்டு நாட்களுக்கு அனைத்து பிளாக்பஸ்டர் படங்களையும், மிகப் பிரபலமான தொடர்களையும், விருது பெற்ற ஆவணப்படங்கள் மற்றும் ரியாலிட்டி ஷோக்களையும் பார்க்கலாம்.


கடந்த மாதம், OTT ஸ்ட்ரீமிங் (OTT Streaming) நிறுவனமான Netflix, இந்தியாவில் உள்ள தனது பயனர்களுக்கு ஒரு வார இறுதியில், இலவச ஸ்ட்ரீமிங்கை அணுகுவதற்கான திட்டங்களை அறிவித்தது. காண்டென்ட் ஸ்ட்ரீமிங் நிறுவனமான நெட்ஃபிக்ஸ் கடந்த மாதம் இந்தியா போன்ற நாடுகளில் தாங்கள் செய்ய வேண்டிய பணிகள் இன்னும் அதிகம் உள்ளன என கூறியது.


Netflix Stream Fest-ன் போது Netflix-ஐ இலவசமாகப் பெறுவது எப்படி:


- Netflix Stream Fest-ஐப் பெற, netflix.com/StreamFest –க்கு செல்லவும்.


-உங்கள் பெயர், மின்னஞ்சல் அல்லது தொலைபேசி எண் மற்றும் கடவுச்சொல் மூலம் பதிவுசெய்து ஸ்ட்ரீமிங்கைத் தொடங்கவும்.


-கிரெடிட் அல்லது டெபிட் கார்டு அல்லது கட்டணம் என எதுவும் தேவையில்லை.


-ஸ்ட்ரீம்ஃபெஸ்ட்டின் போது உள்நுழைந்த எவருக்கும் நிலையான வரையறையில் ஒரு ஸ்ட்ரீம் கிடைக்கிறது.


-ஒரே உள்நுழைவு தகவலை ஸ்ட்ரீம் செய்ய வேறு யாரும் பயன்படுத்த முடியாது.


ALSO READ: PUBG மொபைல் இந்தியாவிற்கு வருவதில் மீண்டும் தாமதமா? உண்மை நிலை என்ன..!!!


"ஒரு நாட்டில் உள்ள அனைவருக்கும் வார இறுதியில் இலவசமாக Netflix அணுகலை வழங்குவதன் மூலம், எங்களிடம் உள்ள அற்புதமான கதைகள், சேவைகள் மற்றும் நாங்கள் எவ்வாறு செயல்படுகிறோம் என்பது பற்றி இன்னும் பலருக்கு தெரிய வரும். இதன் மூலம் பலர் எங்கள் தளத்தில் உள்ள நிகழ்ச்சிகளுக்கு அறிமுகமாவார்கள். இன்னும் பல புதிய வாடிக்கையாளர்களைப் பெற இது ஒரு  சிறந்த வழி என்று நாங்கள் நினைக்கிறோம்" என்று கிரெக் பீட்டர்ஸ், சிஓஓ மற்றும் நெட்ஃபிக்ஸ் நிறுவனத்தின் தலைமை தயாரிப்பு அதிகாரி கூறினார்


."Netflix-இல், உலகெங்கிலும் உள்ள மிக அற்புதமான கதைகளை இந்தியாவில் (India) உள்ள அனைத்து பொழுதுபோக்கு ரசிகர்களிடமும் கொண்டு வர விரும்புகிறோம். அதனால்தான் நாங்கள் Stream Fest-ஐ நடத்துகிறோம்: இது வார இறுதி முழுவதற்கும் இலவசமாக Netflix அனுபவத்தை அளிக்கிறது” என்று நிறுவனம் ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.


ALSO READ: 5GB இலவச தரவை வழங்கும் ஏர்டெல்; இந்த சலுகையை பெறுவது எப்படி?


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR