காற்றில் இருந்து தண்ணீர்: இப்போது காற்றில் இருந்து தண்ணீர் தயாரிக்கும் இயந்திரம் வந்துவிட்டது, இந்த ரயில் நிலையங்களில் நிறுவப்பட்டுள்ளது, அது எவ்வாறு செயல்படுகிறது என்பது தெரியுமா? 5 கியோஸ்க் (MEGHDOOT) CSMT ரயில் நிலையத்தில் அமைக்கப்படுகிறது, தாதரில் ஐந்து, குர்லாவில் ஒன்று, தானேவில் நான்கு, காட்கோபரில் ஒன்று மற்றும் விக்ரோலியில் ஒன்று என ரயில்வே காற்றில் இருந்து நீர் எடுக்கும் இயந்திரங்களை பயணிகளின் பயன்பாட்டிற்காக நிறுவுகிறது. இந்த தண்ணீர் வழக்கமான தண்ணீர் தான். ஆனால் நிதர்சன வடிவத்தை கொடுத்திருக்கிறது ஐஆர்சிடிசி.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

காற்றில் இருந்து நீர் எனபது இதுவரை கேள்விப்படாத ஒன்றாக இருக்கலாம். இதுவரை பல மூலங்களிலிருந்து தண்ணீரைக் குடித்திருந்தாலும் இப்போது காற்றில் தயாரிக்கப்பட்ட தண்ணீரை குடிக்கலாம். நாட்டின் தேர்ந்தெடுக்கப்பட்ட ரயில் நிலையங்களில் இந்த தண்ணீர் கிடைக்கும்.


மேலும் படிக்க | உடல் எடையை சட்டென்று குறைக்க உதவும் இரவு உணவுகள்


மத்திய ரயில்வேயின் மும்பை பிரிவில் உள்ள மைத்ரி அக்வாடெக் பிரைவேட் லிமிடெட், இந்த முயற்சியை மேற்கொண்டுள்ளது. இந்த தண்ணீரை தயாரிக்கும் நிறுவனத்திற்கு 17 ரயில் நிலையங்களில் மேக்தூத் என்ற வளிமண்டல நீர் ஜெனரேட்டர் கியோஸ்க்களை நிறுவ ஒப்பந்தம் கொடுக்கப்பட்டுள்ளது. ஐந்தாண்டு உரிமம் மைத்ரி அக்வாடெக் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்திற்கு வழங்கப்பட்டுள்ளது.


இந்த நிலையங்களில் இயந்திரங்கள் பொருத்தப்பட்டு வருகின்றன


இதற்காக நிறுவனம் ரூ.25,50,000 கட்டணமாக செலுத்தியுள்ளது. அதாவது, ஒரு கியோஸ்க் இயந்திரத்திற்கு, ஆண்டு கட்டணமாக, 1.50 லட்சம் ரூபாய் செலுத்தப்பட்டுள்ளது. மொத்தம் ஆறு ரயில் நிலையங்களில் இந்த 17 கியோஸ்க்குகள் நிறுவப்பட்டுள்ளன.


மேலும் படிக்க | ஆரோக்கியமான நொறுக்குத் தீனிகள்! நீண்ட பயணத்துக்கு அவசியமானது


சிஎஸ்எம்டி நிலையத்தில் 5 கியோஸ்க்களை (MEGHDOOT) அமைப்பதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன, தாதரில் ஐந்து, குர்லாவில் ஒன்று, தானேயில் நான்கு, காட்கோபரில் ஒன்று மற்றும் விக்ரோலியில் ஒன்று.


கியோஸ்கிற்கு நீர் ஆதாரம் தேவையில்லை


வளிமண்டல நீர் ஜெனரேட்டர் (MEGHDOOT) என்பது காற்றில் இருந்து தண்ணீரை பிரித்தெடுக்கும் ஒரு சாதனம். மைத்ரி அக்வாடெக்கின் மேக்தூத் என்ற இந்த கியோஸ்கிற்கு நீர் ஆதாரம் தேவையில்லை. இந்த இயந்திரத்தை இயக்கிய ஒரு மணி நேரத்திற்குள் காற்றில் இருந்து நீர் உருவாகத் தொடங்குகிறது. இந்த இயந்திரமும் (அட்மாஸ்பியரிக் வாட்டர் ஜெனரேட்டர்) பராமரிப்பு பூஜ்ஜியமாக இருப்பதால் சிறப்பு. இது மிகவும் சுற்றுச்சூழலுக்கும் உகந்தது.


நீர் என்பது இயற்கையானது என்றாலும், அதை விஞ்ஞான ரீதியில் வித்தியாசமாக தயாரிக்கும் முன்முயற்சி இது.


மேலும் படிக்க | ஆரோக்கியமான நொறுக்குத் தீனிகள்! நீண்ட பயணத்துக்கு அவசியமானது


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ