Hot Water In Summer: உடல் ஆரோக்கியமாக இருக்க உணவு கட்டுப்பாடு அவசியம். கண்ட நேரத்தில் கண்ட உணவுகளை சாப்பிடுவது ஆரோக்கியத்தில் கேடு விளைவிக்கும். நல்ல ஆரோக்கியமாக இருக்க தினமும் காலையில் எழுந்தவுடன் சுடு தண்ணீர் குடிப்பது நல்லது. அதே போல இரவும் குடித்து வருவது நல்ல பழக்கம். பலரும் குளிர்காலத்தில் மட்டும் சுடு தண்ணீரை குடிக்கின்றனர். ஆனால் கோடை காலத்திலும் சுடு தண்ணீரை குடிக்க வேண்டும் என்று மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர். ஏனெனில் காலையில் சூடான தண்ணீரை குடிப்பது உடல் எடையை குறைக்க உதவுகிறது. மேலும் தினசரி சூடான நீரை குடித்தால் உடல் எடை குறையுமா என்ற சந்தேகவும் பலருக்கும் இருக்கிறது. காலையில் சூடான நீரை குடித்து வந்தால் உடல் எடை குறையுமா என்பதை தெரிந்து கொள்ள தொடர்ந்து படியுங்கள்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மேலும் படிக்க | பார்லர் செல்ல தேவையில்லை... அழகிய நீண்ட கூந்தலை பெற சில டிப்ஸ்..!!


சூடான நீரின் நன்மைகள்: தினமும் சுடு தண்ணீர் குடிப்பதால் பல ஆரோக்கிய நன்மைகள் உள்ளன, இரவில் குடிப்பதால் நன்றாக தூங்க உதவுகிறது. மேலும் உங்கள் வயிற்றையும் நன்கு சுத்தப்படுத்துகிறது. தினமும் காலை மற்றும் இரவு வெந்நீரை குடிப்பதால் மலச்சிக்கல் பிரச்சனை வராமல் தடுக்கிறது.


உடல் எடையை குறைக்க: தினமும் காலையில் வெறும் வயிற்றில் சூடான நீரை குடிப்பதால் உடலில் உள்ள கொழுப்பை கரைக்க உதவும். மேலும் இரவு தூங்கும் முன்பு சூடான நீரை குடித்து வந்தால் வயிறு நிரம்பியதாக உணரலாம், இதன் மூலம் இரவில் கூடுதல் உணவை சாப்பிடுவதை தடுக்கலாம். இந்த வழியில், உடல் எடையை குறைப்பதில் பயனுள்ளதாக இருக்கும்.


உடல் வலியிலிருந்து நிவாரணம்: தினமும் காலையில் சூடான நீரை குடிப்பதன் மூலம் தசை வலியிலிருந்தும் விடுபடலாம். தவறான உணவுப் பழக்கம் மற்றும் மோசமான வாழ்க்கை முறை மற்றும் சரியான தூக்கம் இன்மை காரணமாக, பெரும்பாலான மக்கள் உடல் வலியை பெறுகின்றனர். எனவே தினமும் காலையில் வெறும் வயிற்றில் சூடான நீரை குடிக்க வேண்டும்.


நச்சுத்தன்மை நீக்கம்: தினமும் காலையில் வெறும் வயிற்றில் சூடான நீரைக் குடித்து வந்தால், உங்கள் உடலில் உள்ள நச்சுத்தன்மையை இயற்கையாகவே நீக்கலாம். சுடு தண்ணீர் குடிக்கும் போது உடலில் அதிக வியர்வையை உண்டாகிறது, இது உடலில் உள்ள தீங்கு விளைவிக்கும் நச்சுகளை எளிதாக நீக்குகிறது.


செரிமானம்: சூடான நீரைக் குடிப்பது உணவுகளை வேகமாக செரிமானத்தைத் தூண்டுகிறது. இதன் மூலம் செரிமானப் பாதை வழியாக உணவை சிறப்பாக நகர்த்த உதவுகிறது. மேலும் இது மலத்தை மென்மையாக்க உதவுகிறது மற்றும் குடல் இயக்கத்திற்கு உதவுகிறது. சூடான நீரை குடிப்பதன் மூலம் மலச்சிக்கலைப் போக்க உதவுகிறது.


சுவாச பிரச்சனை: சூடான நீரை குடிப்பதன் மூலம் நாசி நெரிசலைப் போக்கவும், சளி, சைனசிடிஸ் மற்றும் ஒவ்வாமை அறிகுறிகளைப் போக்கவும் உதவுகிறது. தினசரி சூடான நீரை குடிப்பதால் இரத்த நாளங்களைத் தளர்த்துவதன் மூலம் இரத்த ஓட்டத்தை மேம்படுத்த உதவுகிறது மற்றும் உடலின் பல்வேறு பகுதிகளுக்கு ஆக்ஸிஜன் மற்றும் ஊட்டச்சத்துக்களை வழங்க உதவுகிறது.


(பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டவை. இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ZEE MEDIA இந்த தகவல்களுக்கு பொறுப்பேற்காது.)


மேலும் படிக்க | உதிர்ந்த முடியை மீண்டும் பெற இந்த 4 இயற்கை எண்ணெய்கள் பெரிதும் உதவும்!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ