உடல் எடையை குறைக்க டீ குடிப்பதை நிறுத்த முடியவில்லையா? இதோ சூப்பர் டிப்ஸ்
Weight loss tips Tamil : உடல் எடையை டீ குடித்து குறைக்கலாம். அதற்கு நீங்கள் இந்த விஷயங்களை கட்டாயம் கவனத்தில் கொண்டிருக்க வேண்டும்.
Weight loss tips : டீ குடித்து உடல் எடையை குறைக்கலாம் என்றால் நம்புவீர்களா?. கேட்கும்போது கொஞ்சம் விந்தையாக இருக்கலாம். இருப்பினும் டீ குடித்து உடல் எடையை குறைப்பது எப்படி? அதற்கான சாத்தியகூறுகள் என்ன? என்பதை பார்க்கலாம். காலையில் எழுந்தவுடன் டீ உடன் அன்றைய பொழுதை தொடங்குபவர்கள் தான் ஏராளம். ஏனென்றால் காலை டீயை குடிக்காவிட்டால், அவர்களுக்கு அன்றைய பொழுது ஏதோ ஒரு அசௌகரியத்துடனே இருப்பதுபோல் தோன்றும். தலைவலி, தூக்கம், சோர்வு என எதுவாக இருந்தாலும், டீ தான் பலருக்கும் புத்துணர்ச்சியை கொடுக்கும் பானம்.
ஆனால், பால் மற்றும் சர்க்கரையின் கூட்டில் உருவாகும் டீ உடல் பருமனை அதிகரிக்கும் மற்றும் செரிமானத்திற்கும் நல்லதல்ல. இது அனைவருக்கும் தெரிந்த விஷயம் தான். இருப்பினும் டீயை விட முடியாது, ஆனாலும் உடல் எடையை குறைக்க வேண்டும் என எண்ணுபவர்கள், அதற்கான வழியை தேடுபவர்கள் உள்ளனர். அவர்களுக்கு பிரபல ஊட்டச்சத்து நிபுணர் நிகில் வாட்ஸ் அட்வைஸ் கொடுத்திருக்கிறார்.
மேலும் படிக்க | பெண்கள் ஒரு நாளுக்கு எவ்வளவு மணி நேரம் தூங்க வேண்டும்?
அவரின் ஆலோசனைப்படி டீ குடிப்பவர்கள் கவனத்தில் கொள்ள வேண்டிய விஷயங்களை பார்க்கலாம்.
1. டீயில் அதிக அளவு சர்க்கரை இருப்பதால், அதை குடிப்பவர்களின் எடை அதிகரிக்கிறது. நீங்கள் டீ மூலம் அதிக சர்க்கரையை உட்கொள்வதால், அது கொழுப்பாக மாறி உடல் பருமனை அதிகரிக்கிறது, எனவே நீங்கள் சர்க்கரை இல்லாமல் டீ குடிக்கலாம். இல்லையென்றால் குறைந்த அளவு சர்க்கரை சேர்த்துக் கொள்ளலாம். இது உங்கள் உடல் அமைப்பில் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும்.
2. பொதுவாக, சிலர் முழு கொழுப்புள்ள பாலை தேநீர் தயாரிக்க பயன்படுத்துவதால், ஒரு கப் டீயில் சுமார் 125 கலோரிகள் உள்ளன. நீங்கள் தொப்பை மற்றும் இடுப்பு கொழுப்பை அதிகரிக்க விரும்பவில்லை என்றால், கொழுப்பு நீக்கப்பட்ட பாலை பயன்படுத்துங்கள், ஏனெனில் அதில் மிகக் குறைந்த கொழுப்பு உள்ளது.
3. காலை அல்லது மாலை டீ குடிக்கும் போதெல்லாம், அதனுடன் உப்பு தின்பண்டங்களையும் சாப்பிடுவோம், பொதுவாக இந்த நொறுக்குத் தீனி சேர்க்கை ஆரோக்கியத்திற்கு நல்லதல்ல. ஏனெனில் எண்ணெய் மற்றும் காரம் நிறைந்த உணவுகள் எடையை அதிகரிக்கும்.
4. நீங்கள் நாள் முழுவதும் அதிகமாக டீ குடித்தால், அது உங்கள் ஆரோக்கியத்திற்கு கொஞ்சம் கூட நல்லதல்ல. 24 மணி நேரத்தில் இரண்டு முறை மட்டுமே டீ உட்கொள்வது நல்லது.
5. கிரீன் டீ ஒரு சிறந்த தேர்வாக பார்க்கப்படுகிறது. பால் மற்றும் சர்க்கரையுடன் தயாரிக்கப்படும் டீக்கு பதிலாக கிரீன் டீயை ஒரு நாளைக்கு இரண்டு முறை குடித்து வந்தால், கொழுப்பை எரிப்பது எளிதாகிவிடும்.
மேலும் படிக்க | இந்த ஸ்னாக்ஸ்களை சாப்பிட வேண்டாம்! மூளைக்கு அதிக பாதிப்புகளை ஏற்படுத்தும்!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ