நவ., 14-யை ரசகுல்லா தினமாக கொண்டாடும் மேற்கு வங்கம்!
நவம்பர் 14 ஆம் தேதியை மேற்கு வங்கம் அரசு ரசகுல்லா தினமாக கொண்டா அனுமதியளித்துள்ளது...!
நவம்பர் 14 ஆம் தேதியை மேற்கு வங்கம் அரசு ரசகுல்லா தினமாக கொண்டா அனுமதியளித்துள்ளது...!
நவம்பர் 14 ஆம் தேதியை நேருவின் பிறந்தநாளாகவும் குழந்தைகள் தினமாகவும் கொண்டாடப்படும் நிலையில், மேற்குவங்க அரசு அதனை ரசகுல்லா நாளாகக் கொண்டாட முடிவு செய்துள்ளது.
மேற்குவங்கத்தின் தனித்துவம் வாய்ந்த இனிப்பு வகையான ரசகுல்லா உலக அளவில் புகழ் பெற்றது. ரசகுல்லாவுக்கு கடந்த ஆண்டு புவிசார் தர குறியீடு கிடைத்தது. தற்போது முதல் ஆண்டு விழா கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. இதனை முன்னிட்டு நவம்பர் 14ம் தேதியை ரசகுல்லா நாளாக கொண்டாடுவதாக மேற்குவங்க அரசு அறிவித்துள்ளது.
மாநிலத்தின் பல முன்னணி இனிப்பு தயாரிப்பு நிறுவனங்களை ஒரே கூரையின் கீழ் இணைத்து பல வகையான ருசியான ரசகுல்லாக்கள் விற்பனை செய்ய கொல்கத்தாவின் eco பூங்காவில் கடந்த ஜூலை மாதம் ஒரு மையம் திறக்கப்பட்டுள்ளது.