1 ஸ்பூன் ஆளி விதையில் ஓராயிரம் நன்மைகள், இப்படியும் சாப்பிடுங்கள்

Flaxseeds Benefits: ஆளி விதைகள் பல உடல்நலப் பிரச்சனைகளை தடுக்க உதவும். ஆனால் இந்த விதையை எவ்வாறு சாப்பிட வேண்டும் என்பதை அறிந்து கொள்ளுங்கள்.
ஆளி விதையின் அற்பு நன்மைகள் என்ன: ஆளி விதை சூப்பர் உணவுகளில் ஈன்றாக கருதப்படுகிறது. ஏனெனில் இந்த விதையில் பலவித ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளது. ஆளி விதையில் நார்ச்சத்து, உயர்தர அமினோ அமிலங்கள், ஒமேகா -3 கொழுப்பு அமிலங்கள் மற்றும் நல்ல அளவு தாமிரம், மெக்னீசியம், பாஸ்பரஸ் மற்றும் தயாமின் போன்ற சத்துக்கள் நிறைந்துள்ளது. இந்த விதைகளை உட்கொள்வதன் மூலம் உடலுக்கு பல நன்மைகள் ஏற்படுத்தும். இந்நிலையில் இந்த விதைகளை எப்படி உணவின் சேர்த்துக்கொள்ள வேண்டும், மேலும் இந்த விதைகள் என்னென்ன நன்மைகளை தரும் என்பதை இந்த கட்டுரையில் தெரிந்துக்கொள்ளுங்கள்.
ஆளி விதையை சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் | Benefits Of Eating Flaxseeds
* உடல் எடையை குறைக்க ஆளி விதைகளை (Flaxseeds Benefits For Weight Loss) கட்டாயம் சாப்பிடலாம். ஏனெனில் அவற்றில் இருக்கும் நார்ச்சத்து நீண்ட நேரம் வயிற்றை நிரப்பி வைக்க உதவும், அடிக்கடி பசி ஏற்படுவதைத் தடுக்க இந்த விதை உதவும் மற்றும் அதிகப்படியான உணவு உட்கொள்ளலைக் குறைக்க உதவும்.
* ஆளி விதையை சாப்பிடுவதால் இதய ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். ஆளி விதையில் ஒமேகா -3 கொழுப்பு அமிலங்கள் உள்ளன, அவை இதய ஆரோக்கியத்தை சிறப்பாக வைத்திருக்க உதவும். இந்த விதை வீக்கத்தையும் குறைக்கின்றன.
மேலும் படிக்க | அடி வயிற்று தொப்பையை குறைக்க இந்த ஒரு காய்யை உணவில் சேர்த்து கொள்ளுங்கள்!
* ஆளி விதை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் இரத்த கொழுப்பைக் குறையும். இந்த விதையில் எல்டிஎல் கொழுப்பை (LDL Cholesterol) குறைக்க உதவுகிறது. இந்த விதைகள் உடலில் இருந்து நச்சுகளை நீக்க உதவும்.
* ஆளி விதையை சிறந்த செரிமானத்தை பராமரிக்கவும் பயனுள்ளதாக இருக்கும். நார்ச்சத்து வயிற்றுப் பிரச்சனைகளைத் தடுக்கிறது. இதனால் மலச்சிக்கல் பிரச்சனையும் வராது, உணவு நன்றாக ஜீரணமாகும்.
* அண்டவிடுப்பு மற்றும் மாதவிடாய்க்கு இடைப்பட்ட காலத்தை சாதாரணமாக வைத்திருப்பது பெண்களுக்கு முக்கியமான ஒன்று. அதை சீர்படுத்த ஆளிவிதை செய்கின்றன. இது கருத்தரிக்கும் வாய்ப்புகளை அதிகரிப்பதோடு ஹார்மோன் சமநிலையை பராமரிக்கவும் உதவுகிறது.
* ஆளி விதையை உட்கொள்வதால் இதயம் ஆரோக்கியமாக இருக்கும். இதயத்தில் ஏற்படும் பிரச்சனைகள் குறையும். ஆளி விதையை அரைத்து தண்ணீரில் கலந்து காலையில் உட்கொள்வது பல்வேறு நன்மைகளை கொடுக்கும்.
ஆளி விதைகளை உங்கள் டயட்டில் சேர்த்துக் கொள்ளவும்:
* ஆளி விதைகளை வறுத்து சிற்றுண்டியாக சாப்பிடலாம்.
* காலையில் வெறும் வயிற்றில் ஒரு கிளாஸ் வெந்நீருடன் சேர்த்து ஒரு ஸ்பூன் ஆளி விதையை சேர்த்து சாப்பிட்டு வந்தால் தொப்பை கொழுப்பு கரையத் தொடங்கும்.
* ஆளி விதையை பழங்கள் அல்லது சாலட்டில் சேர்த்தும் சாப்பிடலாம்.
* ஆளி விதையை ஓட்ஸூடன் சேர்த்து சாப்பிடலாம்.
(பொறுப்பு துறப்பு: அன்புள்ள வாசகரே, எங்கள் செய்திகளைப் படித்ததற்கு நன்றி. இந்தச் செய்தி உங்களுக்கு பல தகவல்களை வழங்குவதற்காக மட்டுமே எழுதப்பட்டுள்ளது. இதை எழுதுவதில் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களின் உதவியை நாங்கள் பெற்றுள்ளோம். இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)
மேலும் படிக்க | நோயற்ற வாழ்வுக்கு... காலை உணவுக்கான சரியான நேரமும்... சரியான உணவுகளும்..!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ