இந்திய கலாசாரம் தொன்மையானது. அதைப் பற்றி எடுத்துச் சொல்ல பல விஷயங்கள் இருந்தாலும், பக்தியும் இயற்கையோடு இணைந்தே இருந்தது என்பதை சிறப்பம்சமாக சொல்லலாம்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இறை வழிபாடு ஒருபுறம் என்றாலும், பக்தி என்பது கர்ப்பகிரகத்தில் இருக்கும் தெய்வத்தை வணங்குவதோடு முடிந்துவிடுவதில்லை. ஆலயங்களில் ஆன்மீகத்தின் நீட்சியை காணமுடியும். இந்திய கலாச்சாரத்தில் மரங்களுக்கு உண்டான பங்கை ஆன்மீகம் வாயிலாக தெரிந்துக் கொள்ளலாம்.


தமிழ்நாட்டில் மரங்கள் தெய்வமாகவே வணங்கப்படுகின்றன. மரங்களின் பயன்பாடுகளை தெரிந்தே அது மனிதர்களின் வாழ்வுக்கும் தாழ்வுக்கும் அடிப்படை என்பதை மக்கள் உணர்ந்திருந்தனர்.


Also Read | வாழ்வும் வளமும் அருளும் தெய்வங்களின் தரிசன உலா


ஆலயத்திற்கு (Temple) செல்வது இறைவழிப்பாட்டிற்க்கு என்பது முக்கியமான காரணியாக இருந்தாலும், இயற்கையையும் மரத்தை மதிப்பதும் இந்து மத கலாசாரத்தில் பாலோடு நீர் போல் கலந்துவிட்டது. அதன் நோக்கம் மரங்களை தனது சுயநலத்திற்காக மனிதன் அழித்துவிடக்கூடாது என்பதே…   


அரச மரத்தடி பிள்ளையார் என்பது போன்ற சொற்றொடர்களில் இருந்தே மரத்திற்கும் இந்திய கலாச்சாரத்திற்கும் (Indian Culture) உள்ள தொடர்பை தெரிந்துக் கொள்ளலாம்.


மருதமரம் தல விருட்சமாக இருக்கும் கோவில் திருவிடைமருதூர் என பெயர் பெற்ற முக்கியமான ஆலயம். இதுபோல் தல விருட்சங்களின் அடிப்படையில் கோயில்களுக்கு பெயர் வைப்பது நமது கலாச்சாரத்தில் இயல்பான நடைமுறை ஆகும். அதேபோல, தலவிருட்சத்தின் அடிப்படையில் மூலவர் அறியப்படுவதும் அனைவரும் அறிந்ததே.
 
கும்பகோணம் அருகில் உள்ள திருவிசைநல்லூர் சிவயோகநாதர் திருக்கோவிலில் 8 தல விருட்சங்கள் உள்ளன. வன்னி, உந்து வில்வம், புன்னை, மகிழம், ஆல், அரசு, நெல்லி, பரசு வில்வம் என இங்கு எட்டு தல விருட்சங்களைக் கொண்டது திருவிசைநல்லூர் சிவயோக நாதன் திருக்கோவில்.


Also Read | ஆலய வழிபாடு செய்வதன் தாத்பர்யம் என்ன தெரியுமா?
 
பொதுவாக சிவாலயங்கள் அனைத்திலும் கோவிலுக்குள் நுழைந்தவுடன் கொடிமரத்தையே முதலில் பார்க்க முடியும். ஆனால் இந்த ஆலயத்திற்குள் நுழையும் போது, நந்தியே முதலில் அருள்பாலிக்கிறார்.  


இந்த புனிதக் கோவிலில் இறைவன் சிவயோகநாதர் ஏழு முனிவர்களுக்கு அடைக்கலம் கொடுத்ததால் கருவறையில் இருக்கும் சிவலிங்கத் திருமேனியின் மேல் பகுதியில் ஏழு சடைகள் காணப்படுவதும் சிறப்பான அம்சம் ஆகும்.  


அதேபோல, சித்திரை மாதம் பிறந்ததும் முதல் மூன்று நாட்களுக்கு சூரிய ஒளியின் கதிர்கள் சிவலிங்கத்தின் மீது விழுகிறது என்பது கூடுதல் தகவல்.



 
ரிஷப ராசிக்குரிய பரிகார தலம் திருவிசைநல்லூர் 
சிவயோகிநாத சுவாமி, வில்வாரண்யேஸ்வரர், யோகானந்தேஸ்வரர் என மூலவருக்கு மூன்று பெயர்கள் உண்டு. ஐயனுடன் அருள்பாலிக்கும் அம்மையின் நாமம் சௌந்தரநாயகி, சாந்தநாயகி என்பதாகும்.  8 தல விருட்சங்களை கொண்ட இந்த புனித ஆலயத்தை வணங்கி மனநிம்மதியுடன் வாழ்வோம்.


Also Read | ஆசிர்வாதம் என்பதன் அடிப்படை என்ன? அது எவ்வாறு செல்வங்களைப் பெற வழி வகுக்கும்


அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, கல்வி, பொழுதுபோக்கு, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR