1111 Angel Numbers Meaning : நீங்களும் உங்கள் நன்பரும் நன்றாக பேசிக்கொண்டிருக்கும் போது, திடீரென்று அவர் “ஹே..டைம் 11:11 ஆகுது” என்று கூறி உங்களிடம் டைமை காண்பிப்பார். உங்களுக்கு அப்படியென்றால் என்னவென்றே புரியாமல் இருந்திருக்கலாம், அல்லது ஏற்கனவே இது குறித்து தெரிந்த நபராக இருந்திருக்கலாம். இதை ஏஞ்சல் நம்பர்ஸ் என்று ஆங்கிலத்தில் குறிப்பிடுவர். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ஏஞ்சல் நம்பர்ஸா? அப்படீன்னா? 


ஏஞ்சல் எண்கள் என்பது, ஒரே மாதிரியான எண்களை மீண்டும் மீண்டும் பார்ப்பதுதான். உதாரணத்திற்கு 000, 999, 222, 333 போன்றவை. இதை, எங்கேனும் நாம் அடிக்கடி பார்க்க நேர்ந்தால் அதற்கு இந்த யுனிவர்ஸும் நம்மை பாதுகாக்கும் தேவதைகளும் நமது அருகிலேயே இருப்பதாக அர்த்தமாம். இது போன்ற எண்களும் நாம் அடிக்கடி பார்த்தால் நம் வாழ்வில் ஏதேனும் பெரிய நல்ல மாற்றங்களும் ஏற்படலாம் என சில நம்புகின்றனர். அதே போல, இதை அடிக்கடி பார்த்தால் நமது முன்னோர்களும் நாம் எடுக்கும் முடிவுகளுக்கு துணை நிற்பதாக அர்த்தமாகுமாம். இதில் எத்தனையோ எண்கள் இருந்தாலும் 11.11 எனும் எண்ணை மட்டும் பலர் மேஜிக் நடக்கும் நேரமாக நம்புகின்றனர். 


11.11 எண்:


பல சக்தி வாய்ந்த தேவதை எண்கள் இருப்பினும், நம் மனம் பார்த்தவுடன் உடனே பற்றிக்கொள்ளும் ஒரு நம்பர், 11.11 ஆகும். காரணம், இது பார்ப்பதற்கும் நினைவில் வைத்துக்கொள்வதற்கும் எளிதாக இருப்பதால் இது பலரது மனதில் நின்று விடும் என கூறப்படுகிறது. 11.11ல் இருக்கும் ஸ்பெஷாலிட்டி என்னவென்றால், இதில் இருக்கும் 1 என்ற எண்தான். 1 எண்ணிற்கு அர்த்தம், ஆரம்பம் அல்லது துவக்கத்திற்கான அர்த்தமாக இருப்பதாக கூறப்படுகிறது. அதே போல, இது உங்களின் ஆன்மீக எழுச்சிக்கான (Spiritual awakening) ஆரம்ப கட்டமாகவும் இருக்கலாம் என கூறப்படுகிறது.


மேலும் படிக்க | ஒரு தலை காதலில் வெற்றி பெறுவது எப்படி? க்ரஷை காதலராக மாற்ற டிப்ஸ்!


அடிக்கடி இந்த எண்ணை பார்த்தால் என்ன நடக்கும்? 


கார்டியன் ஏஞ்சல் எனப்படும் நம்மை பாதுகாக்கும் தேவதை, நம்மை சுற்றி நடக்கும் அனைத்து விஷயங்களையும் தெரிந்து கொண்டு இந்த பிரபஞ்சத்தில் நம்மால் நடக்கும் மாற்றங்களை தெரிந்து கொள்ளுமாம். இதை வைத்து, நாம் அடுத்து செய்ய வேண்டும் என்பதை அது கணக்கு போடுமாம். ஆன்மீகத்தை நம்புபவர்கள் கூறுவதன்படி, 11.11 என்பது, நம் வாழ்வில் முன்னேற்றம் வருவதற்கும் ஞானம் தோன்றுவதற்குமான அறிகுறியாம். இது நம்மை ஆன்மீக வளர்ச்சியை தீவிரமாகப் பின்பற்றவும், நம் பயனத்தை நோக்கி நாம் முன்னேறி செல்லவும் ஊக்குவிக்குமாம். இந்த எண்கள் அடிக்கடி தோன்றும் போது பல்வேறு மாற்றங்கள் ஏற்படும் என்றும், இந்த மாற்றங்களின் போது நம்மை காக்கும் தேவதை நம் கூடவே இருக்கும் என்றும் கூறப்படுகிறது. அதே போல, நம்மை பற்றி நாமே நிறைய அறிந்து கொள்ள இந்த தேவதை பாதை அமைத்து கொடுக்குமாம். 


11.11 நேரத்தின் போது என்ன செய்ய வேண்டும்? 


எப்போதும் நம் எண்ண ஓட்டங்கள் நன்றாக இருக்க வேண்டும் என்பது பொதுவான கருத்தாக இருந்தாலும் குறிப்பாக 11.11 நேரம் ஆகும் போது நாம் நம் மனதின் நிலையை ஒருநிலைப்படுத்த வேண்டும் என்றும் அப்போது நமது எண்ணங்கள் தூய்மையானதாக இருக்க வேண்டும் என்றும் கூறப்படுகிறது. 


மேலும் படிக்க | நீங்கள் வசீகரமான நபரா இல்லையா? ‘இந்த’ அறிகுறிகள் இருக்கான்னு பாருங்க!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ