தீபாவளிக்கு முன்னரே மத்திய ஊழியர்களுக்கு மோடி அரசு பரிசு!
மத்திய ஊழியர்களுக்கான ஜி.பி.எஃப் வட்டி விகிதம் குறித்து மோடி அரசு மகிழ்சியான செய்தியை அறிவித்துள்ளது.
7th Pay Commission GPF interest rates: நாட்டில் கடந்த ஏழு எட்டு மாதங்களாக கொரோனா தொற்றுநோய் தொடர்ந்து பரவிவரும் நிலையில், மத்தியில் உள்ள மோடி அரசு தீபாவளி பண்டிகையை அடுத்து மத்திய ஊழியர்களுக்கு மற்றொரு பெரிய பரிசை வழங்கியுள்ளது.
அடுத்த ஆண்டு 31 ஜூன் 2021 வரை இந்த மத்திய ஊழியர்களின் கொடுப்பனவை அரசாங்கம் நிறுத்தியது. ஆனால் அதற்கு பதிலாக, மத்திய அரசாங்கம் பரிசுகளை அறிவித்துள்ளது. இந்த தீபாவளி பரிசுகள் தொடர்பாக, அக்டோபர்-டிசம்பர் காலாண்டு பொது வருங்கால வைப்பு நிதியை, அதாவது மத்திய ஊழியர்களுக்கான ஜி.பி.எஃப் வட்டி விகிதம் குறித்து மோடி அரசு மகிழ்சியான செய்தியை அறிவித்துள்ளது. அக்டோபர்-டிசம்பர் காலாண்டில் மத்திய ஊழியர்களின் ஜி.பி.எஃப் மீது 7.1 சதவீத வட்டி விகிதம் (GPF interest rates) வழங்கப்படும் என்று மத்திய அரசாங்கம் முடிவு செய்துள்ளது.
மத்திய ஊழியர்களின் ஜி.பி.எஃப் வட்டி விகிதம் குறித்து சமீபத்தில் நிதி அமைச்சின் (Economic Affairs) அறிவிப்புகளை வெளியிட்டுள்ளது. மத்திய அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி, அக்டோபர் முதல் டிசம்பர் வரையிலான காலாண்டில் ஜி.பி.எஃப் இல் நிர்ணயிக்கப்பட்ட வட்டி விகிதங்கள் அக்டோபர் 1 முதல் 2020 டிசம்பர் வரை பயன்படுத்தப்பட்டுள்ளன.
ALSO READ | இந்த மாநில அரசு ஊழியர்களுக்கு Good News: Salary Cut முடிவை திரும்பப் பெற்றது அரசு!!
ஒவ்வொரு மூன்று மாதங்களுக்கு வட்டி விகிதங்களை மதிப்பாய்வு செய்யப்படுகிறது
சிறு சேமிப்புத் திட்டங்களின் வட்டி விகிதத்தை நிதியாண்டின் ஒவ்வொரு காலாண்டின் தொடக்கத்திலும் மத்திய அரசு திருத்தி, பின்னர் ஜி.பி.எஃப் மற்றும் பிற திட்டங்களுக்கான வீதத்தை அறிவிக்கிறது. அதாவது, ஜி.பி.எஃப் மீதான வட்டி விகிதம் ஒவ்வொரு மூன்று மாதங்களுக்கும் மதிப்பாய்வு செய்யப்படுகிறது.
ஜி.பி.எஃப் என்றால் என்ன? யாருக்கு நன்மை கிடைக்கும்
பொது வருங்கால வைப்பு நிதி அல்லது ஜி.பி.எஃப் என்பது ஒரு வகையான வருங்கால வைப்பு நிதி திட்டம் என்பதை கவனத்தில் கொள்ள வேண்டியது அவசியம், ஆனால் இது அனைத்து வகையான ஊழியர்களுக்கும் இல்லை. இந்த நிதியை அரசு ஊழியர்கள் மட்டுமே பயன்படுத்திக் கொள்ள முடியும். ஒரு குறிப்பிட்ட வகுப்பு அரசு ஊழியர்களுக்கு ஜி.பி.எஃப் பங்களிப்பு செய்வது அவசியம். இது வருங்கால வைப்பு நிதியில் (Provident Fund) இருந்து முற்றிலும் வேறுபட்டது.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR