இரயிலில் பயணம் செய்பவர்களுக்கு ஒரு நல்ல செய்தி. விரைவில் 130 கி.மீ வேகத்தில் இயக்கப்படும் ரயில் தயாராக உள்ளது, இந்த வாரத்தில் இந்த ரயில் சோதனை ஓட்டம் செய்யப்படும். ரயில் பெட்டிகள் தயாரிக்கும் சென்னை ஐசிஎப் தொழிற்சாலையில் டெல்லி வாசிகளுக்காக இந்த புதிய ரயிலை தயார் செய்துள்ளது. தற்போது வடக்கு ரயில்வேத்துறைக்கு புதிய அதி நவீன ரயில் வழங்கப்பட்டு உள்ளது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ஏற்கனவே சென்னை ஐசிஎப் தொழிற்சாலை "ரயில் 18" (Train18) எனப்படும் நவீன ரக இரயிலை கடந்த மாதம் 29 ஆம் தேதி இந்திய ரயில்வே துறையிடம் ஒப்படைக்கப்பட்டது. இதன் முதல் சோதனை வெற்றி பெற்றுள்ளது. அநேகமாக இந்த மாதம் "ரயில் 18" பயன்பாட்டுக்கு வர உள்ளது.


இந்த நிலையில், சென்னையில் உள்ள ஐ.சி.எப் ரயில் பெட்டி தொழிற்சாலையில் 130 கி.மீ வேகத்தில் இயக்கப்படும் புதிய ரயில் வடிவமைத்துள்ளது. இது இன்று வடக்கு ரயில்வேத்துறையிடம் ஒப்படைக்கப்பட்டது. இந்த புதிய இரயிலின் பெயர் மல்டி எலக்ட்ரிக்கல் யூனிட் (MEU) ஆகும். இந்திய புதிய எம்.இ.யு. ரயில்கள், பழைய எம்.இ.யு. ரயில்களில் இருந்து முற்றிலும் வேறுப்பட்டு நவீன முறையில் வடிவமைகப்பட்டு உள்ளது. இதன் முதல் சோதனை டெல்லியில் செய்யப்பட உள்ளது.


இதுக்குறித்து சென்னை ஐ.சி.எப் தொழிற்சாலையின் பொது மேலாளரான சுந்தான்சு மணி தெரிவிக்கையில், இன்று (டிசம்பர் 19) சென்னையில் இருந்து புதிய MEU இரயில் டெல்லிக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இந்த ரயில் டிசம்பர் 24 அல்லது 25 தேதிகளில் டெல்லியில் உள்ள சகுர்பஸ்தி இரயில் நிலையத்திற்கு சென்று சேரும். அதன்பின்னர் சோதனைகள் மேற்கொள்ளப்படும். சோதனைக்கு பின்னரே புதிய MEU இரயில் பயன்பாட்டுக்கு வரும் எனக் கூறினார். மேலும் இந்த ரயிலின் பயணம் செய்யும் பயணிகளுக்கு முற்றிலும் வித்தியாசமான அனுபவத்தை தரும் எனவும் கூறினார். 


இந்த MEU ரயிலின் சிறப்பம்சங்கள் பற்றி தெரிந்து கொள்வோம்:-


மணிக்கு 130 கி.மீ. வேகத்தில்:
புதிய MEU ரயிலின் வேகம் 130 கி.மீ. ஆகும். இந்த ரயில்கள் முக்கிய பாதையில் இயக்கப்படும். இதுவரை பழைய MEU ரயில் வேகம் மணிக்கு 110 கிமீ. வேகத்தில் மட்டும் இயங்கி வருகிறது.


அதிக பயணிகள் பயணிக்க முடியும்:
ஒரு MEU புதிய ரயில்கள் பழைய MEU ரயிலை விட 10 சதவீதம் அதிக பயணிகள் பயணிக்க முடியும். பழைய MEU ரயிலில் சுமார் 2600 பயணிகள் செல்லலாம். அதே நேரத்தில் புதிய MEU ரயில்களில் 2,800-க்கும் அதிகமான பயணிகள் பயணம் செய்ய முடியும் என்பது சிறப்பு.


வசதியான இருக்கைகள்:
புதிய MEU ரயிலில் இருக்கைகளும் மாற்றப்பட்டுள்ளன. புதிய ரயில் சுகமாக அமர்வதற்க்கு ஏற்ப இருக்கைகள் நிறுவப்பட்டுள்ளன. இருக்கைகளின் எண்ணிக்கை 10 சதவிகிதம் அதிகரிக்கப்பட்டு உள்ளது.


சி.சி.டிவி கேமராக்கள்:
புதிய MEU ரயிலின் அனைத்துப் பெட்டிகளிலும் சி.சி.டிவி(CCTV) கேமராக்கள் நிறுவப்பட்டுள்ளன. சி.சி.டிவி கேமராக்களின் மூலம் ரயில் ஓட்டுனர் கண்காணிப்பார். இதன்மூலம் அசம்பாவிதம் எதுவும் ஏற்ப்படாமல் பாதுகாக்கப்படும். அனைத்து CCTV கேமராக்களின் காட்சிகளும் எதிர்காலத்திற்காக பாதுகாக்கப்படும்.


ஒரு வகுப்பில் இருந்து மற்றொரு வகுப்புக்கு செல்ல முடியும்:
தற்போதுள்ள MEU ரயிலின் ஒரு வகுப்பில் (AC/SL/2nd Class) இருந்து மற்றொரு வகுப்புக்கு செல்லும் வசதி இல்லை. ஆனால் புதிய MEU ரயிலில் ஒரு வகுப்பில் இருந்து மற்றொரு வகுப்புக்கு செல்ல முடியும். இது பயணிகளுக்கு சிரமத்தை குறைத்துள்ளது.


ஜி.பி.எஸ் இன்போமேஷன் சிஸ்டம்:
ஜி.பி.எஸ் சார்ந்த தகவல் அமைப்பு புதிய MEU ரயிலில் நிறுவப்பட்டுள்ளது. இந்த அமைப்பின் உதவியுடன், எந்த சந்திப்பில் ரயில் நின்று கொண்டிருக்கிறது. அடுத்து எந்த ரயில் நிலையத்திற்கு வரப்போகிறது போன்ற தகவல்களை நீங்கள் அறிந்துகொள்ள முடியும்.


ஓட்டுனரிடம் பேசும் வசதி:
ஒரு புதிய MEU ரயிலில் ஓட்டுனரிடம் பேசும் வசதியும் வழங்கப்பட்டுள்ளது. அவசர நிலையின் போது "முஸாஃபிர் டாக் பேக்" மூலம் ரயிலின் ஓட்டுநரிடம் தங்களுக்கான பிரச்சனை குறித்து பேசலாம்.


பையோ கழிப்பறை:
அனைத்து புதிய MEU ரயில்களில் உயிர் கழிப்பறைகள் நிறுவப்பட்டுள்ளன. இந்த வசதி பழைய MIU ரயிலில் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.