சென்னை: சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்ற திராவிட முன்னேற்றக் கழகம், தனது தேர்தல் அறிக்கையில் பல விஷயங்களை குறிப்பிட்டிருந்தது. திமுக ஆட்சிக்கு வந்ததும் தமிழகத்தில் மாதாந்திர மின்கட்டண முறை அமல்படுத்தப்படும் என்பதும் அதில் ஒன்று. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

அதேபோல் திமுக வெற்றி பெற்று ஆட்சிக்கு வந்ததும்,மாதாந்திர மின்கட்டண கணக்கீடு முறையை விரைவில் அறிமுகப்படுத்துவதாக மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி உறுதி கூறினார்.


உண்மையில் மாதாந்திர மின்சார கணக்கீடு அமலுக்கு வந்தால் மின் கட்டணம் குறைய வாய்ப்புகள் உள்ளதா? இதை தெரிந்துக் கொள்ள வேண்டுமென்றால் மின் கட்டணம் எப்படி கணக்கிடப்படுகிறது என்பதை தெரிந்துக் கொள்ள வேண்டும்.


Also Read | 80 கோடிப்பு... 2 மாசமா பூட்டி இருந்த வீட்டுக்கு அனுப்பப்பட்ட மின் கட்டணம்..!


தற்போது தமிழகத்தில் வீட்டு உபயோகத்திற்கான மின்சார கணக்கீடு, இரண்டு மாதங்களுக்கு ஒருமுறை எடுக்கப்படுகிறது. முதல் 100 யூனிட்டுகள் இலவசம் அதற்கு மேல் பயன்படுத்தினால் அதற்கான கட்டணம் டெலஸ்கோபிக் டாரிஃப் (telescopic tariff) என்ற முறையில் கணக்கிடப்படுகிறது.


தமிழகத்தில் வீட்டு உபயோகத்திற்கு பயன்படுத்தப்படும் மின்சாரத்தில் முதல் 100 யூனிட்டுகள் இலவசம். 101 - 200 யூனிட்டுகளுக்கு ஒரு யூனிட்டின் விலை 2 ரூபாய். 201 - 500 யூனிட்களுக்கு கட்டணம் 3 ரூபாயாகும்


உதாரணமாக  ஒரு வீட்டில் 400 யூனிட் மின்சாரம் பயன்படுத்தியிருந்தால், முதல் 100 யூனிட் இலவசம். 101 முதல் 200 யூனிட்கள் வரை யூனிட் ஒன்றுக்கு 2 ரூபாய் கட்டணம். இதன்படி 200 ரூபாய் வசூலிக்கப்படும். 201 - 500 யூனிட்களுக்கு கட்டணம் 3 ரூபாயாகும். 201 - 400 யூனிட்களுக்கு கணக்கிட்டால் 600 ரூபாய் கட்டணம் வருகிறது. மின்சார இணைப்புகான நிலையான கட்டணம் 30 ரூபாயையும் சேர்த்து அந்த வீட்டில் குடியிருப்பவர்கள் பயன்படுத்திய மின்சாரத் தொகை 30+ 200+600 = 830 ரூபாய் ஆகும்.  


Also Read | மின் கட்டணம் செலுத்த ஜூன் 15 வரை கால அவகாசம்: தமிழக மின்வாரியம்


மாதந்திர அடிப்படையில் மின்சார கட்டணம் கணக்கிட்டால் அது வாடிக்கையாளர்களுக்கு லாபமாக இருக்குமா?  
இரண்டு மாதங்களுக்கும் சேர்ந்து 400 யூனிட் பயன்படுத்துபவர்களை உதாரணமாக எடுத்துக் கொள்வோம். அவர்களுக்கு 100 யூனிட் மட்டுமே இலவசமாக கிடைக்கும். மீதம் 300 யூனிட்களுக்கு கட்டணம் செலுத்த வேண்டும். இதே 500 யூனிட் பயன்படுத்துபவர்கள் 400 யூனிட்களுக்கு கட்டணம் செலுத்துகிறார்கள். இந்த முறையில் கட்டணமும் அதிகம்.


இதே மாதம் ஒரு முறை மின்சார கட்டணம் கணக்கிடும்போது என்னவாகும்? தற்போது 520 யூனிட் பயன்படுத்துவோர், மாதம் ஒரு முறை கணக்கிட்டால் சராசரியாக 260 யூனிட் பயன்படுத்துவார்கள். இதில் 100 யூனிட் இலவசம் எனும்போது, 160 யூனிட்டுக்கு மட்டுமே கட்டணம் செலுத்தும் நிலை வரும், கட்டணமும் குறையும். 


இதனால் தான் மாதாந்திர கட்டண கணக்கீடு முறை எப்போது அமலுக்கு வரும் என்று மக்கள் ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கின்றனர். 


Also Read | மின் கட்டணம் முதல் பாஸ்போர்ட் விண்ணப்பிப்பது வரை இனி தபால் நிலையத்தில்


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR