நமஸ்காரம் செய்வது இந்தியர்களின் உன்னதமான சைகையாகும். பொதுவாக இதை மரியாதை அளிக்கும் சைகையாக பார்க்கிறனர். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இந்து மதக் கலச்சாரத்தில் நமஸ்காரமானது மிகவும் முக்கியமானது. கடவுளை வணங்குவதாகட்டும், அல்லது பெரியவர்களை வணங்குவதாகட்டும், நமஸ்காரம் மிகவும் முக்கியமாகும். நமஸ்காரத்தில் பல்வேறு வகைகள் உள்ளது. அதில் சாஷ்டாங்க நமஸ்காரம் என்பது மிகவும் புனிதமானது. இதில் உடலின் அனைத்து பாகங்களும் அதாவது அங்கங்கள் அனைத்தும் தரையில் படும். 


சாஷ்டங்க நமஸ்காரம் பொதுவாக "தண்டகார நமஸ்காரம்" மற்றும் "உதண்ட நமஸ்காரம்" என்றும் அறியப்படுகிறது. இந்து மத கோட்பாட்டின் படி, "தண்டா" என்கிற வார்த்தைக்கு "குச்சி" என்று பொருள். எனவே, ஒருவர் இந்த வகை நமஸ்காரம் செய்யும் பொழுது அந்த நபர் தரையில் விழுந்த குச்சி போல தெரிவதால் இதற்கு இந்த வகை பெயர் வழங்கப்படுகின்றது.


ஆங்கிலேயர்கள் பிறரைச் சந்திக்கும் போது, ‘குட் மார்னிங், குட்ஆப்டர் நூன், குட் ஈவனிங்” என்று கூறி அவ்வப்பொழுதுகளுக்கு ஏற்ப நமஸ்காரம் தெரிவிக்கிறார்கள். நாமும் ஆங்கிலத்தில் பேசி வரவேற்கும் போது இவ்வாறு கூறினால் தவறில்லை. ஆனால், தமிழில் வரவேற்கும் போது இவற்றை அப்படியே தமிழாக்கம் செய்து, “காலை வணக்கம், மாலை வணக்கம், இரவு வணக்கம்” என்று கூறுகிறோம். தமிழில் இவ்வாறு கிடையாது. எந்தப் பொழுதில் நமஸ்காரம் கூறுகிறோமோ, அது அந்தப் பொழுது நமஸ்காரம் தான். ஆகவே வணக்கத்தை காலை, மாலை, இரவு என்று பாகுபடுத்த வேண்டாம். எப்பொழுதிலும் யாரைச் சந்தித்தாலும் ‘நமஸ்காரம்’ என்று கூறினால் போதும். அதுவே சரியான முறை.


நமஸ்காரம் செய்யும் முறை: 


நெஞ்சுக்கு நேரே இரு கை குவித்து நமஸ்காரம் செய்து வரவேற்கும் போது, உங்களுக்குள் எந்தமாதிரி உணர்வு ஏற்படுகிறது என்பதை கவனியுங்கள். இதையே ஒரு கை மட்டும் பயன்படுத்தியோ அல்லது வேறுமாதிரி கைகளை வைத்தோ வணங்கி அப்போது உங்களுக்குள் ஏற்படும் உணர்வை கவனியுங்கள். இரண்டுக்கும் உள்ள வித்தியாசத்தை அப்போது உங்களால் நன்கு புரிந்து கொள்ள முடியும். கை குவித்து செய்யும் நமஸ்காரத்தையே முகத்திற்கு நேராக அல்லது தலைக்கு மேலே வைத்து என்று செய்யும் போதும் கூட வெவ்வேறு விதமான உணர்வுகள் உங்களுக்குள் ஏற்படுவதைக் காணலாம். 


நமஸ்காரம் வகைகள்: 


> தலை மட்டும் குனிந்து வணங்கும் முறை ஏகாங்க நமஸ்காரம் எனப்படும்.


> இரு கைகளையும் தலைக்கு மேல் குவித்து வணங்குவது த்ரியங்க நமஸ்காரம் ஆகும்.


> இரு கைகள், முழந்தாள் இரண்டு, தலை ஆகிய ஐந்தும் நிலத்தில் பதிய வணங்குவது பஞ்சாங்க நமஸ்காரம் எனப்படும். (பெண்கள் பஞ்சாங்க நமஸ்காரம் மட்டுமே செய்ய வேண்டும்.)


> அஷ்டாங்க நமஸ்காரம் என்பது தலை, இரு கைகள், இரு செவிகள், இரண்டு முழந்தாள், மார்பு என எட்டு அங்கங்களும் நிலத்தில் பதிய வணங்குவது ஆகும்.


> தலை, இரு கரங்கள், இரு முழந்தாள், மார்பு என ஆறு அங்கங்கள் நிலத்தில் படுமாறு வணங்குவது சாஷ்டாங்க நமஸ்காரம் ஆகும்.


நாம் நமஸ்காரம் செய்வதால் ஏற்ப்படும் நன்மை பற்றி உங்களுக்கு தெரியுமா?. தெரியாவிட்டால் பரவாயில்லை நான் சொல்கிறேன் தெரிந்து கொள்ளுங்கள்...! 


நமஸ்காரம் செய்வதால் ஏற்படும் நன்மை: 


நமஸ்காரம் செய்யும் போது, இரண்டு கைகளையும் ஒன்று சேர்க்கும் போது, உங்களின் விரல் நுனிகள் அனைத்தும் ஒன்று சேரும். அவைகள் ஒன்றாக அழுத்தும் போது ப்ரெஷர் புள்ளிகள் செயல்பட தொடங்கும். இது அந்த நபரை நீண்ட நாட்களுக்கு மறக்காமல் இருக்க செய்யும்.