பணம் சம்பாதிக்க வேண்டும் என்பதற்காக எல்லோரும், ’சதையில் செய்த இயந்திரமாக’ சுழன்று கொண்டிருக்கிறோம். கணவனான நீங்களும் அப்படி சுழன்று கொண்டிருக்கிறீர்கள் என்றால், அதில் தப்பில்லை. ஆனால், கொஞ்சம் குடும்பத்தையும் கவனிக்க வேண்டும். அதில் தவறும்போது, வீட்டில் சண்டை வருவதை தவிர்க்கவே முடியாது. இப்படியான இடியாப்ப சிக்கல் உங்களுக்கு வரக்கூடாது என நினைத்தால், இந்த டிப்ஸை ஃபாலோ பண்ண வேண்டும்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

1. மனம் விட்டு பேசுதல்


உங்களுக்கு இருக்கும் நெருக்கடி, வேலை பளு குறித்து மனைவியிடம் வெளிப்படையாக பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் மனதுக்குள் வைத்துக்கொண்டே இருந்தால், அது மன அழுத்தமாக மாறிவிடும். இதனால், நீங்கள் நிதானத்தை இழந்து, மனைவியிடம் கோபத்தை காட்ட தொடங்குவீர்கள். இதனைத் தவிர்த்து அவர்களுடன் பேசும்போது, உங்களுக்கான ஆறுதல் கிடைக்க வாய்ப்புள்ளது. மேலும், வேலையை எளிதாக முடிப்பதற்கான டிப்ஸ்கூட கிடைக்கலாம்.



2. நேரம் ஒதுக்குங்கள்


வேலை, வேலை என ஒரே பிஸியாக இருக்காதீர்கள். முடிந்தளவிற்கு அவர்களுடன் நேரத்தை செலவிட முயற்சி செய்யுங்கள். வார இறுதி நாட்களை மட்டும் அவர்களுக்கு ஒதுக்காமல், வேலையில் இருந்து மாலை வீடு திரும்பியவுடன் சிறிது நேரம் அவர்களுடன் உரையாடுங்கள். அப்போதும் வேலையைப் பற்றி பேசாமல், பொதுவான சில விஷயங்களை பகிர்ந்துகொள்ளுங்கள். உங்களுக்கும் ரிலாக்ஸ் கிடைக்கும்.


ALSO READ | உங்கள் மனைவியிடம் இந்த 5 விஷயங்களை பேசக்கூடாது -ALERT


3. செல்போன்களுக்கு தடை


காலையில் இருந்து கம்யூட்டர், செல்போன் என பொழுதை கழித்த நீங்கள், வீட்டுக்கு திரும்பியவுடன், அவைகளுக்கு விடை கொடுத்துவிடுங்கள். அப்போதும், அதற்கு முக்கியத்தும் கொடுத்தால், நான் எதற்கு இங்கு? என்ற கேள்வி மனைவியிடம் எழுவதை தவிர்க்க முடியாது. மாறாக, ப்ரெஷ்ஷாக குளித்துவிட்டு, மனைவியுடன் அமர்ந்து சாப்பிடுங்கள், ஒன்றாக சிறிது நேரம் காமெடிகளை பார்த்து ரசியுங்கள்.


4. நண்பர்களுடன் சந்திப்பு


வாரத்தில் ஒருமுறையாவது நண்பர்களுடன் நேரத்தை செலவிடுங்கள். ஏனென்றால், ஆபீஸ் மற்றும் வீட்டில் பிரச்சனையாக இருக்கும் சமயத்தில் நண்பர்களுடன் நேரம் செலவிடும்போது, மனதுக்கு கொஞ்சம் ரிலாக்ஸ் கிடைக்கும். அங்கு கிடைத்த புத்துணர்ச்சியுடன் வீட்டுக்கு திரும்பினால், மனைவியுடனும் சமரசமாகிவிடுவீர்கள். எந்தவொரு விஷயத்தையும் ஈஸியாக அணுக முயற்சிப்பது நல்லது.


ALSO READ | கணவனாக இருந்தாலும் மனைவியின் சம்மதம் இல்லாமால் உறவு கொள்வது பாலியல் குற்றம்


மேற்கூறிய 4 விஷயங்களையும் நீங்கள் கடைபிடிக்கும்போது, உங்கள் வீடு நிச்சயம் மகிழ்ச்சியானதாக இருக்கும்.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, இப்போதே ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.


Android Link: https://bit.ly/3hDyh4G


Apple Link: https://apple.co/3loQYeR