20 வயதிற்கு முன் திருமணம் செய்தால் தவறா? ஒரு அலசல்...
இக்காலத்தில் பெண்கள் 18-வயதினை கடந்த பின் எப்போது வேண்டுமென்றாலும் திருமணம் செய்துக்கொள்ளும் அனுமதி பெற்றுள்ளனார்... ஆனால் அவர்களது பாட்டிகளுக்கு இந்த வாய்ப்பு கிடைக்கவில்லை.
இக்காலத்தில் பெண்கள் 18-வயதினை கடந்த பின் எப்போது வேண்டுமென்றாலும் திருமணம் செய்துக்கொள்ளும் அனுமதி பெற்றுள்ளனார்... ஆனால் அவர்களது பாட்டிகளுக்கு இந்த வாய்ப்பு கிடைக்கவில்லை.
திருமணம் என்றால் நன் நினைவிற்கு வருவது 'திருமணம் என்பது ஆயிரம் காலத்து பயிர்' என்னும் பழமொழி தான்... காரணம் பயிரிடல் என்பது எளிதான காரியம் இல்லை, அதிகளவில் மெனக்கிடவேண்டிய ஒன்று என திருமணத்தின் வேலைகளை சொல்லாமல் சொல்வதற்கே இந்த பழமொழி பயன்படுகிறது.
இக்கால பெண்கள் எப்போது வேண்டுமென்றாலும் தங்கள் விருப்பத்திற்கேற்றார் போல் வேண்டிய வயதில் திருமணத்தினை செய்துக்கொள்ளலாம். வேண்டாம் என்று விலகி நின்றாலும் நிர்பந்திக்க யாரும் இல்லை. ஆனால் முந்தைய காலத்தில் பெற்றோர்களின் வழிகாட்டல்படி நடந்த திருமணங்கள் இக்காலப் பெண்களின் திருமண வயதினை ஒத்தியிருந்ததில்லை. அக்காலத்தில் 18 - 20 வயதில் திருமணம் நடந்தாகிவிடும். கணவன் வேலைக்கு செல்கின்றாரா இல்லையா என்பது இரண்டாம் பட்சம், பெற்றோர் பார்த்து வைத்த திருமணத்தில் தம்பதியருக்கு பக்க பலமாய் பெற்றோர் இருந்தனர். ஆனால் தற்போது இளைஞர்கள் தங்கள் வாழ்வினை தாங்களே பார்த்துக்கொள்ள வேண்டியுள்ளது.
இந்நிலையில் ஒருவர் தனது 20 வயதிற்கு முன் திருமணம் செய்ய நினைத்தால் என்ன நிகழும்....
கணவன், மனைவியென இருவம் இணைந்து வாழ்வின் பல நல்லது, கெட்டவைகளை இணைந்தே எதிர்கும் வாய்ப்பு கிட்டும். அதே வேலையில் யாருக்கு எந்த பொறுப்பு ஒதுக்கப்படவேண்டும் என்பதில் துவங்கி அனுபவ ரீதியாக பல சிக்கல்களை எதிர்க்கொள்ள வேண்டியிருக்கும்.
உங்கள் லட்சியத்தினை நோக்கி எவ்வாறு பயணிப்பது என்ற கேள்வி மனதில் மறைய நெடுநாள் ஆகலாம். ஆனால் இக்கடும் முயற்சிகளால் வாழ்கையில் வெற்றிப் பாடங்கள் பலவற்றை படிக்க இயலும்.
சரியான பாதையினை தேர்ந்தெடுக்கும் போது ஒவ்வொரு செயல்பாட்டிலும் நல்ல ஊக்குவிப்பாளர்களை பார்ப்பீர்கள். ஆனால் இந்த ஊக்குவிப்பார்கள் வெறும் ஊக்குவிப்பிற்கு மட்டுமே பயன்படுவார்கள், உங்கள் தேவைக்கென ஒருவரை சம்பாதிப்பதே கடனமான விஷயம்.
உங்களின் இளமை காலத்திலேயே பெற்றோர் ஆகும் வாய்ப்பு கிடைக்கும். உங்கள் குழந்தைகள் பெரியவர் ஆகும் நேரத்தில் அவர்களுடன் நீங்களும் இளைஞர்களாய் நின்று அவர்களை வழிநடத்த இயலும்,. ஆனால் ஆரம்பகாலத்தில் ஒரு குழந்தையினை எப்படி கையாளுவது என்று அறியாமல் குழந்தையாய் தவிக்க வேண்டிய காலத்தினை கடந்தே இப்பாடங்களை படிக்க இயலும்.