வதந்தி பரவுவதைத் தடுக்க ரேடியோவை பயன்படுத்த WhatsApp திட்டம்....
வாட்ஸ் ஆப் மூலம் பரப்பப்படும் வதந்திகளை முறியடித்து உண்மை நிலையை விளக்க, ஆல் இந்தியா ரேடியோவின் 46 நிலையங்களைப் பயன்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது...!
வாட்ஸ் ஆப் மூலம் பரப்பப்படும் வதந்திகளை முறியடித்து உண்மை நிலையை விளக்க, ஆல் இந்தியா ரேடியோவின் 46 நிலையங்களைப் பயன்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது...!
நாட்டில் வாட்ஸ்ஆப், பேஸ்புக் போன்ற சமூக வலைத்தளங்கள் மூலம் போலி செய்திகள் அதிகமாக பரவுவதை தடுக்க, ஆல் இந்தியா ரேடியோ மூலம் மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த உள்ளதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.
மக்களிடம் தவறான தகவல்களைப் பரப்பி வன்முறையையும் கலவரத்தையும் தூண்டும் சமூக விரோதிகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கும்படி சமூக ஊடகங்களுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. இதனையடுத்து வதந்திகளைத் தடுக்க நடவடிக்கை எடுக்கும்படி வாட்ஸ் ஆப் நிறுவனத்திற்கு மத்திய அரசு அறிவுறுத்தியது.
இந்நிலையில் வதந்திகள் பரவுவதைத் தடுக்க ஆல் இந்தியா ரேடியோவின் உதவியை வாட்ஸ் ஆப் நிறுவனம் நாடியுள்ளது. முதலில் இந்தியிலும் பின்னர் அனைத்து பிராந்திய மொழிகளிலும் உண்மையான தகவல்கள் அறிவிக்கப்பட்டு மக்கள் பொய்ச் செய்திகளை பரப்ப வேண்டாம் என வானொலி மூலம் அறிவிக்கப்படும்.