கொல்கத்தா: வெங்காயம் விலை உயர்வு, எவ்வளவு காலத்திற்கு மக்களை வேதனை அடைய செய்யும் எனத் தெரியாது. தற்போது நிலையில், எங்காவது நாம் சில பொருட்களை வாங்கும் போது வெங்காயம் இலவசமாக கிடைக்குமா? என்ற என்று மக்கள் எதிர்பார்க்கிறார்கள். இதற்கு காரணம் வெங்காயத்தை வைத்து சலுகைகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன. தற்போது இதுபோன்ற சலுகைகள் நாடு முழுவதும் காணப்படுகின்றன. அதில் நீங்கள் ஒரு மொபைல் வாங்கினால், உங்களுக்கு ஒரு கிலோ வெங்காயம் இலவசமாக வழங்கப்படும். அதேபோல நீங்கள் ஹெல்மெட் அணிந்திருந்தால், பெட்ரோல் பம்பில் எண்ணெய் வாங்கும்போது ஒரு கிலோ வெங்காயம் இலவசமாக கிடைக்கும் போன்ற சலுகைகள் கவனத்தை ஈர்த்துள்ளன.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ஆனால் அசைவ கடைகளிலும் வெங்காயம் இலவசமாக வழங்கப்பட்டு வருகின்றனர். மேற்கு வங்கத்தில் (West Bengal)  மீன் சந்தை வர்த்தகர்கள் இதேபோன்ற சில சலுகைகளை வழங்கி வருகின்றன. அவர்கள் ரூ.1300 விலையில் உள்ள பாடா ஆற்றின் புகழ்பெற்ற ஹில்சா மீன்களை வாங்கும்போது ஒரு கிலோ வெங்காயத்தை இலவசமாக வழங்க முடிவு செய்துள்ளனர். கடைக்கு வெளியே விளம்பரத்தைப் பார்த்ததும், மீன் சந்தையில் மக்கள் கூட்டம் வரத் தொடங்கியது. ஏனெனில் சமைக்க வெங்காயத்தின் தேவை மிக அவசியம். வெங்காயம் இல்லாமல் மீன் சமைப்பது கடினம். அப்படி சமைத்தாலும் சுவையும் வராது.


பெங்காலி மக்கள் மீன்களை மிகவும் விரும்பி சாப்புடுவார்கள். எனவே இந்த சலுகை அவர்களுக்கு மகிழ்ச்சியை அளித்துள்ளது. முதலில் கொல்கத்தாவின் மீன் தொழிலதிபர் பாபு இரண்டு மூன்று மீன்களை மட்டுமே விற்றுக் கொண்டிருந்தார். இப்போது திடீரென்று லாட்டரி அடித்தது போல மக்கள் கூட்டத்தால் மீன்களின் விற்பனை கணிசமாக அதிகரித்துள்ளது.