ஹைதராபாத்: ‘கூந்தலில் அழகு இருக்கிறது என்று சொன்னது யார்? அது பொய், மிகவும் தவறானது’ என்று நிரூபித்திருக்கிறார் ஹைதராபாத்தைச் சேர்ந்த குச்சிபுடி நடனக் கலைஞர். புற்றுநோய் நோயாளிகளுக்காக தனது நீண்ட தலைமுடியை நன்கொடையாக வழங்கியதற்காக சமூக ஊடகங்களில் பாராட்டுகளைப் பெற்று வருகிறார்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

கதிர்வீச்சு (radiation) மற்றும் கீமோதெரபி (chemotherapy) காரணமாக புற்றுநோய் நோயாளிகள் தலைமுடியை இழக்கிறார்கள். 


ஸ்ரவ்யா மனசா போகிரெட்டி என்ற நடனக் கலைஞர் தனது தலைமுடியை தானம் கொடுத்து ’அழகு என்பது உதிரும் தலைமுடியில் இல்லை’ என்று உணர்த்தியிருக்கிறார். 


Also Read | அன்புள்ள ஹன்விகா என அபியும் நானும் பிரகாஷ் ராஜாக உருகும் கிரிக்கெட்டர் நடராஜன்


பயிற்சி பெற்ற தொழில்முறை நடனக் கலைஞரான ஸ்ரவ்யா, பி.டெக் மற்றும் எம்.டெக் படித்தவர். ஹைதராபாத் பல்கலைக்கழகத்தில் நடனத்தில் பி.எச்.டி பட்டம் பெற்றவர்.


தனது தலைமுடியை தானம் செய்த ஸ்ரவ்யா, பேஸ்புக்கில், தனது மொட்டைத் தலையுடன் இருக்கும் புகைப்படத்தை பதிவிட்டுள்ளார். “எனது தலைமுடியில்லா தோற்றத்துக்கு வணக்கம் சொல்லுங்கள்.  யாராவது ஒருவருக்கு பயனளிக்கும் என்ற எண்ணத்தில் கொடுத்திருக்கிறேன். Hyderabad Hair Donationக்கு நன்கொடை கொடுத்திருக்கிறேன். ‘அழகு கூந்தலில் இருப்பதாக சொல்வதுபொய், யார் அப்படி சொன்னாலும் அது மிகவும் தவறு. இது மிகவும் அழகாக இல்லையா!!! ” என்று கேட்டுள்ளார். 


மொட்டையடித்த தலையுடன் நடனமங்கையின் புகைப்படத்தைப் பார்த்த சமூக ஊடக பயனர்கள் அவரது புதிய தோற்றத்தைக் கண்டு அதிர்ச்சியடைந்தனர், ஆனால் அதே நேரத்தில் அவளுடைய முயற்சிகளையும், அதற்காக அவர் எடுத்துக் கொள்ளும் கடும் முயற்சியையும் பாராட்டினர்கள். 


ஸ்ராவ்யா தனது தலைமுடியை ஹைதராபாத் ஹேர் நன்கொடை என்ற லாப நோக்கற்ற அமைப்புக்கு தனது முடியை நன்கொடையாக அளித்தார்.


Also Read | கடந்த 6 மாதங்களில் உங்கள் Aadhaar card எங்கே, எத்தனை முறை பயன்படுத்தப்பட்டது தெரியுமா? 


ஸ்ரவ்யாவுக்கு நன்றி தெரிவித்த அந்த அமைப்பு, “ஒரு கிளாசிக்கல் டான்சராக இருப்பதால் புற்றுநோய் நோயாளிகளுக்கு முடியை தானமாக வழங்குவதற்காக மொட்டையடித்துக் கொண்டது மிகப் பெரிய விஷயம். கீமோதெரபி செய்யப்படும் புற்றுநோயாளிகளுக்கு உதவுவதற்கான உங்கள் முயற்சிகளை பாராட்டுகிறோம்” என்று புகழாரம் சூட்டியது.


புற்றுநோய் காரணமாக கீமோதெரபிக்கு முடி இழந்தவர்களுக்கு இந்த அமைப்பு விக் மற்றும் இலவச முடியை நன்கொடையாக அளிக்கிறது. நாள்தோறும், 40 முதல் 50 பேர் தங்கள் தலைமுடியை இந்த அமைப்புக்கு தானம் செய்கிறார்கள்.


Also Read | Teddy trailer: ஆர்யா நடிக்கும் ‘டெடி' திரைப்படத்தின் டிரெய்லர் ரிலீசானது


தேசம், சர்வதேசம், கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR