புதுடெல்லி: நாட்டில் கொரோனா நோயால் பாதிக்கப்பட்ட நோயாளிகளின் எண்ணிக்கை 49 லட்சத்தை தாண்டியுள்ளது. 24 மணி நேரத்தில், புதிதாக 83,809 பேர் கொரோனா வைரஸ் (Corona Virus) நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளார்கள்.  இதன் மூலம், மொத்தமாக இந்த தொற்றுக்கு ஆளானவர்களின் எண்னிக்கை 49,30,236 ஆக அதிகரித்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 1054 பேர் இறந்த நிலையில், இந்த தொற்றுநோயால் உயிர் இழந்தவர்களின் எண்ணிக்கை 80,776 ஆக உயர்ந்துள்ளது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

வைரஸைத் தவிர்ப்பதற்கு, அனைவரும் முதன்மையாக முகக்கவாம் அணியவும், தனி மனித இடைவெளியை (Social Distancing) பின்பற்றவும், நோய் எதிர்ப்பு சக்தி அளிக்கும் பொருட்களை உணவில் சேர்க்கவும் அறிவுறுத்தப்படுகிறார்கள்.


இத்தகைய சூழ்நிலையில், முகக்கவசம் அணியும்போது என்ன தவறுகளைத் தவிர்க்க வேண்டும் என்பதைக் காட்டும் வீடியோவை உலக சுகாதார அமைப்பு (WHO) வெளியிட்டுள்ளது. மாஸ்கை அணியும் போது எந்தெந்த தவறுகளை மக்கள் செய்கிறார்கள், இவற்றை எவ்வாறு தவிர்ப்பது என்பது பற்றி இந்த வீடியோவில் கூறப்பட்டுள்ளது.



தளர்வாக அணியப்படும் முகக்கவசம்


மக்கள் தங்கள் பாதுகாப்புக்காக முகக்கவசத்தை (Facemask) அணிந்து கொள்கின்றனர். ஆனால் அவர்கள் மீண்டும் மீண்டும் கையை வைத்து, இழுத்து, அதை தளர்த்தி விடுகின்றனர். இப்படிப்பட்ட நிலையில் தொற்றுநோய்க்கான ஆபத்து பன்மடங்கு அதிகரிக்கிறது. நீங்கள் உண்மையிலேயே கொரோனாவிலிருந்து உங்களைப் பாதுகாத்துக் கொள்ள விரும்பினால், தளர்ந்து விடாமல் சரியான பொருத்தத்தில் இருக்கும் முகக்கவசத்தை வாங்கி அணிய வேண்டும். மூக்கிலிருந்து கன்னம் வரை முகத்தை மறைக்கும் முகக்கவசத்தை பயன்படுத்தவும்.


பலர் மூக்கை மறைப்பதில்லை


பலர் முகக்கவசங்களை மூக்கின் கீழே தள்ளி விடுகிறார்கள், அல்லது அணிவதே அப்படித் தான் அணிகிறார்கள். ஆனால் இந்த வைரஸ் நம் உடலுக்குள் நுழைவதற்கான அதிக வாய்ப்புகள் உள்ள உருப்புகள் மூக்கு மற்றும் வாயாகும். ஆகையால் இப்பகுதிகளை முகக்கவசம் (Facemask)  கொண்டு மூடுவது மிகவும் முக்கியம். எனவே முகக்கவசத்தை நன்கு அணிந்து மூக்கின் மேல் வரை மூடி இருப்பது மிக அவசியம்.


ALSO READ: 2024-க்கு முன்னாடி Covid-19 தடுப்பூசிக்கு வாய்ப்பே இல்ல ராஜா: ஆதார் பூனவல்லா!!


பேசும்போது பலர் முகக்கவசத்தை அணிவதில்லை


மக்கள் பெரும்பாலும் பேசும்போது முகக்கவசத்தை (Facemask) அகற்றுகிறார்கள். ஒருவருக்கொருவர் தொடர்பு கொள்ளும்போது, ​​முகக்கவசத்தை அகற்றுவது தொற்றுநோய்க்கான ஆபத்தை அதிகரிக்கிறது. ஆகையால் யாரிடமாவது பேசும்போதும் முகக்கவசத்தை கழற்றாமல் இருக்க வேண்டும்.


முகக்கவசத்தை அவ்வப்போது தொட வேண்டாம்


பலர் தங்கள் முகக்கவசத்தை மீண்டும் மீண்டும் தொடும் பழக்கத்தைக் கொண்டிருக்கிறார்கள். அப்படி தொட்டால், நம் கையில் ஒருவேளை ஏதாவது வைரஸ் இருந்தால், அது நம் முகக்கவசத்தையும் அடைகிறது. மேலும், யாராவது ஒருவர் தனது முகக்கவசத்தை உங்கள் முன்னால் திரும்பத் திரும்பத் தொட்டால், அதைப் பற்றி அவருக்குத் தெரியப்படுத்தி அவரைத் தடுக்கவும். குறிப்பாக, முகக்கவசத்தை (Facemask)  எவ்வாறு அணிய வேண்டும் மற்றும் கையாள வேண்டும் என்பதை வீட்டு குழந்தைகளுக்கு விளக்குங்கள்.


மற்றவரின் முகக்கவசத்தை அணியக் கூடாது


வீட்டின் உறுப்பினர்களுடன் உங்கள் முகக்கவசத்தை மாற்றிக்கொள்ளும் தவறை செய்யாதீர்கள். அவ்வாறு ஒருவருக்கொருவர் முகக்கவசத்தை பகிர்ந்து கொள்வது தொற்றுநோய்க்கான ஆபத்தை அதிகரிக்கிறது.


ALSO READ: டெல்லி துணை முதல்வர் மணீஷ் சிசோடியாவுக்கு கொரோனா தொற்று உறுதி....