drinking water before tea Tips மழை, குளிர்காலம் வந்துவிட்டாலே மக்கள் அதிகம் டீ, காபி குடிப்பார்கள். சாப்பாட்டைக் கூட மறந்துவிடுவார்கள், ஆனால் அவர்களுக்கு டீ காபி மட்டும் குடிப்பதை மறக்க மாட்டார்கள். பழக்கம் இல்லாதவர்கள் கூட குளிர்காலத்தில் இரண்டு மூன்று தடவை டீ, காபி குடித்துவிடுவார்கள். ஏனென்றால் உடல் சூடு அதிகரிக்கவும், குளிரில் இருந்து தற்காத்துக் கொள்ளவும் இதை செய்வார்கள். அத்துடன் டீ காபி குடித்தால் குளிர்காலத்தில் புத்துணர்ச்சி பிறக்கும். சுறுசுறுப்பாக இருப்பீர்கள். இது ஒருபுறம் இருக்க டீ காபி குடிப்பதற்கு முன்பு தண்ணீர் குடித்தால் நல்லதா? கெட்டதா? என்ற கேள்வி எப்போதாவது உங்களுக்கு எழுந்திருக்கிறதா?. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

உண்மையில், டீ காபி குடிப்பதற்கு 5-10 நிமிடங்களுக்கு முன் ஒரு கிளாஸ் தண்ணீர் குடிப்பது நல்லது. இதனால், டீ, காபி போன்றவற்றால் உடல் நலத்தில் எந்த பாதிப்பும் ஏற்படாது. ஆம், இந்த தகவல் உங்களுக்கு ஆச்சரியமாக இருக்கலாம், ஆனால் இது நிரூபிக்கப்பட்ட உண்மையும் கூட. இதுவரை டீ காபி குடிக்கும் முன் ஏன் தண்ணீர் குடிக்க வேண்டும்? என்பதற்கான காரணம் தெரியவில்லை என்றால் இப்போது தெரிந்து கொள்ளுங்கள்.


மேலும் படிக்க | Fengal Storm: மழை பெய்யும் போது இந்த உணவுகளை கண்டிப்பாக தவிர்க்க வேண்டும்!


டீ, காபி குடிக்கும் முன் ஏன் தண்ணீர் குடிக்க வேண்டும்?


உடல் நீரேற்றமாக இருக்கும் - தேநீர் அல்லது காபி குடிப்பதற்கு முன் எப்போதும் ஒன்று அல்லது இரண்டு கிளாஸ் தண்ணீர் குடிக்கவும். இதன் மூலம் டீ மற்றும் காபி மூலம் உங்களுக்கு குடலில் ஏற்படும் பிரச்சனை குறைய வாய்ப்பு இருக்கிறது. ஏனென்றால் நேரடியாக டீ காபி சாப்பிடும்போது வயிற்றில் அஜீரணம், அசௌகரியம் ஏற்படலாம். தண்ணீர் குடிக்கும்போது இது சரியாகும். 


அசிடிட்டி குறையும் - வெறும் வயிற்றில் டீ அல்லது காபி குடிக்கும் போது அதாவது நீரிழப்பு ஏற்படும் போது வாயு மற்றும் அசிடிட்டி பிரச்சனையை அதிகரிக்கும். ஆனால் டீ, காபிக்கு முன் தண்ணீர் குடித்தால் அமிலத்தன்மை குறைகிறது. உடலில் அமிலத்தன்மை குறைகிறது.


அல்சர் பிரச்சனை நீங்கும் - டீ மற்றும் காபி அதிக அமில உணவுகளாக கருதப்படுகிறது. வெறும் வயிற்றில் டீ அல்லது காபி குடித்தால், அல்சர் ஏற்படும் அபாயம் அதிகம். ஆனால் தண்ணீரை முதலில் குடிப்பதன் மூலம் பல பிரச்சனைகளை தீர்க்க முடியும்.


பற்கள் ஆரோக்கியமாக இருக்கும் - தேநீர் மற்றும் காபிக்கு முன் தண்ணீர் குடிப்பது பற்களைப் பாதுகாக்கும். காஃபின் கொண்ட இந்த பொருட்களில் டானின் என்ற வேதிப்பொருள் உள்ளது, இது பற்களில் ஒரு அடுக்கை உருவாக்கத் தொடங்கி துர்நாற்றத்தை ஏற்படுத்துகிறது. ஆனால் இந்த பிரச்சனையை தண்ணீர் குடிப்பதன் மூலம் குறைக்கலாம்.


மேலும் படிக்க | குளிர்காலத்தில் வீட்டை கதகதப்பாக வைத்துக்கொள்வது எப்படி? ஈசி டிப்ஸ்!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ