ராகு காலத்தில் சுப காரியங்களை செய்யக்கூடாது ஏன்?
புராணங்களின் படி ஒரு நாளில் உள்ள இருபத்தி நான்கு மணி நேரத்தில் 1 1/2 மணி நேரம் ராகுவும், 1 1/2 மணி நேரம் கேதுவும் அம்பிகையை பூஜிக்கின்றன.
பொதுவாக மற்ற கிரகங்களின் ஆற்றல் அந்த நேரத்தில் குறைந்திருக்கும் என்பதால்தான் ராகு காலத்தில் சுப காரியங்களைத் தவிர்க்க வேண்டும் என கருதப்படுகின்றது. சர்ப்ப கிரகங்களான ராகுவும் கேதுவும், துர்க்கை தேவியை வழிபாடு செய்ததின் பயனாகவே கிரகங்களாகும் வரத்தைப் பெற்றதாக புராணங்கள் கூறுகின்றன. ஒரு நாளில் உள்ள இருபத்தி நான்கு மணி நேரத்தில் 1:30 மணி நேரம் ராகுவும், 1:30 மணி நேரம் கேதுவும் அம்பிகையை பூஜிக்கின்றனர்.
அதில் ராகு வழிபடும் நேரம் ராகு காலம் என்றும், கேது வழிபடும் நேரம் எமகண்டம் என்றும் அழைக்கப்படுகிறது. ராகு காலத்தில் அம்மனை ஆராதிப்பது, குறிப்பாக சண்டிகையாகவும், துர்க்கையாகவும் தேவியை வணங்குவது சிறப்பான பலனைத் தரக் கூடியது. ராகு காலம் என்பது ஒவ்வொரு நாளிலும் குறிப்பிட்ட 1:30 மணி நேரமாகும். ராகு காலத்தில் செய்யப்படும் துர்க்கை பூஜை சிறப்பு மிக்கது. அதிலும் சிறப்பானது செவ்வாய்க்கிழமைகளில் ராகு காலத்தில் செய்யப்படும் பூஜை.
ALSO READ | உங்கள் வீட்டில் சுப நிகழ்ச்சி நடத்த வேண்டுமா? செப்டம்பர் சுப முகூர்த்த நாட்கள் இதோ
செவ்வாய், ராகு ஆகிய கிரகங்களால் தோஷம் இருந்தாலோ அல்லது வாழ்வில் தடைகளும், துன்பங்களும் தொடர்ந்தாலோ ராகு கால வழிபாட்டினை மேற்கொண்டு, துர்க்கையையும் மங்கள சண்டிகையையும் வழிபடுவது நற்பலன்களை தரும். துர்க்கையை நோக்கியவாறு தீபம் ஏற்றுவது நல்லது. கிழக்கு அல்லது மேற்கு திசை நோக்கி தீபம் ஏற்றவேண்டும்.
ஞாயிற்றுக்கிழமை ராகு காலத்தில் செய்யும் வழிபாட்டினால், தீராத நோய்களின் தாக்கம் குறையும். எதிரிகள் பயம் நீங்கும். பெற்றோருடன் ஒற்றுமை அதிகரிக்கும். எனவே அனைவரும் முடிந்த வரை ராகு கால பூஜையை மேற்கொண்டு துர்க்கையின் அருளை பெற்றிடுங்கள்.