உங்கள் வீட்டில் சுப நிகழ்ச்சி நடத்த வேண்டுமா? செப்டம்பர் சுப முகூர்த்த நாட்கள் இதோ

செப்டம்பர் மாத சுப முகூர்த்த நாட்கள் எண்ணென வென்று இங்கே பார்ப்போம்...

Last Updated : Aug 30, 2020, 10:50 AM IST
உங்கள் வீட்டில் சுப நிகழ்ச்சி நடத்த வேண்டுமா? செப்டம்பர் சுப முகூர்த்த நாட்கள் இதோ title=

பஞ்சாங்கங்கள் ஒவ்வொரு வருடமும், இன்ன வருடத்திய சுபமுகூர்த்தங்கள் என்று, சித்திரை முதல் பங்குனி வரையிலான நல்ல நாட்களைப் பட்டியலிடுவதுடன், அடுத்த ஆண்டு, முதல் மூன்று மாதங்களுக்கான, சுப முகூர்த்தங்களையும் பட்டியலிடுகின்றன.

ஒரு முகூர்த்தம் என்பது 3 நாழிகை 45 வினாடி அல்லது 1 மணி 30 நிமிடம் கொண்ட கால இடைவெளியாகும். இந்த நேரம் முழுவதும் ஒரே லக்னத்தில் அடங்கியிருக்க வேண்டும் என்பது எதிர்பார்ப்பு. முகூர்த்தத்தின் ஆரம்பம் ஒரு லக்னமாகவும், முடிவு வேறொரு லக்னமாகவும் இருக்கலாகாது. முகூர்த்தத்தில், முதலிடம் லக்னத்திற்கே தரப்படுகிறது என்பதை மறக்கக்கூடாது. முகூர்த்த ஆரம்பத்தில் சொல்லப்படுகின்ற மந்திரத்தைக் கவனித்தாலே, லக்னத்திற்குத் தரப்படும் முக்கியத்துவம் புரிந்துவிடும்.

 

ALSO READ | ‘காயத்திரி’ மந்திரம் சொல்வதால் நடக்கும் அதிசயம் தெரியுமா?...

சூரியன் உதித்தெழுவதற்கு நாற்பத்தெட்டு நிமிடங்களுக்கு முன் பிரம்ம முஹூர்த்தம் ஆரம்பமாகின்றது. பிரம்ம முஹூர்த்ததில் திருமணம், பிரம்ம முஹூர்த்ததில் வீட்டு கிரஹப்பிரவேசம் என்று கூறுவோம். முஹூர்த்த வேளைக்கு திதி, வார, நட்சத்திர, யோக தோஷங்கள் கிடையாது. எப்போதுமே சுபவேளை தான். இந்நேரத்தில் எழுந்து குளித்து இறைவழிபாட்டைச் செய்து சாலச் சிறந்தது.

எனவே செப்டம்பர் மாத சுப முகூர்த்த நாட்கள் எண்ணென வென்று இங்கே பார்ப்போம்...

செப்டம்பர் சுப முகூர்த்தம் 2020

2020 செப்டம்பர்  4 வெள்ளிக்கிழமை
2020 செப்டம்பர்  14 திங்கட்கிழமை
2020 செப்டம்பர்  16 புதன்கிழமை

குறிப்பு : இந்த சுப முஹூர்த்த திருமண தேதிகள் தமிழ் நாட்காட்டி அடிப்படையில் கணக்கிடப்பட்டுள்ளது. திருமண தேதியை முடிவு செய்யும் முன்பு, உங்கள் ஜோதிடருடன் உங்களது பிறப்பு உள்ளிட்ட தனிப்பட்ட விவரங்களை பொறுத்து கலந்தாலோசித்து முடிவு செய்யுங்கள்.

 

ALSO READ | Best Vastu Tips : திசைகளின் வாஸ்து மந்திரங்களால் வெல்லப்படும், எப்படி தெரியும்?

Trending News