நாம் செய்த பாவங்களுக்கு பிராயச்சித்தம் தேடுகின்ற நிலையில் புண்ணிய தீர்த்தங்களில் நீராடுவதால் செய்த பாவம் தொலையும்..!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

அறிவிற்குத் தெரிந்து, வேண்டுமென்றே செய்கின்ற பாவங்கள் நிச்சயமாகப் போகாது. அறிந்தும், அறியாமலும் செய்கின்ற பாவங்கள் (Sins) மனதை உறுத்துகின்ற காலத்தில், மனம் திருந்திய நிலையில் தவறு செய்து விட்டோம் என்பதை உணர்ந்து அதற்கு பிராயச்சித்தம் தேடுகின்ற நிலையில் புண்ணிய தீர்த்தங்களில் (holy Teertha) நீராடுவதால் செய்த பாவம் தொலையும்.


ALSO READ | சிவனுக்கு செய்யும் அபிஷேகமும் அதனால் கிடைக்கும் பலன்களும்..!


எவனொருவன் தான் செய்தது தவறு என்பதை உணர்ந்து, அந்த தவறுக்காக மனதளவில் வருந்துகின்றானோ, அவனுக்கு மட்டுமே புண்ணிய தீர்த்தங்களில் நீராடுவதால் பாவம் போகும். தனது அடிப்படைக் குணத்தினை மாற்றிக் கொள்ளாது, தொடர்ந்து பாவச்செயலில் ஈடுபடும் ஒருவன் புண்ணிய நதியில் நீராடுவதால் மட்டும் அவனது பாவம் நிச்சயம் போகாது. அதில் எந்தவித சந்தேகமும் இல்லை.​


உலக நிகழ்வுகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள ZEE இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்..


Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR