இணைய பயன்பாடு அதிகரித்துள்ள இந்த கொரோனா காலத்தில் தொலைத் தொடர்பு நிறுவனங்களிடையே போட்டி வேகமாக அதிகரித்து வருகிறது. ஜியோவின் மலிவான ரீசார்ஜ் திட்டத்திற்குப் பிறகு, கிட்டத்தட்ட அனைத்து நிறுவனங்களும் தங்களது குறைந்த கட்டண ரீசார்ஜ் திட்டங்களை அறிமுகப்படுத்தியுள்ளன. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

சமீபத்தில், அரசு நடத்தும் தொலைத் தொடர்பு நிறுவனமான பிஎஸ்என்எல் (BSNL) தனது மலிவான ப்ரீபெய்ட் ரீசார்ஜ் திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. பி.எஸ்.என்.எல் இன் இந்த திட்டம் ஒரு மாஸ்டர் ஸ்ட்ரோக்காக கருதப்படுகிறது. இது மலிவான திட்டங்களில் ஒன்றாகும்.


 BSNL அறிமுகப்படுத்தியுள்ள இந்த ரீசார்ஜ் திட்டம் காரணமாக, ஏர்டெல் (Airtel), ஜியோ(Jio) மற்றும் வோடபோன்-ஐடியா (Vi) போன்ற நிறுவனங்களிடையே போட்டியை அதிகரித்துள்ளது.


ALSO READ | NPS: கடைசி காலத்தில் நிம்மதியாக இருக்க, மாதம் ₹27,000 தரும் சூப்பர் பென்ஷன் திட்டம்

பிஎஸ்என்எல் ரீசார்ஜ் திட்டம் ₹47


இந்த  ₹47 ரீசார்ஜ் திட்டத்தில், நீங்கள் வரம்பற்ற அழைப்பு, தினசரி 1 ஜிபி தரவு மற்றும் 100 எஸ்எம்எஸ் ஆகியவற்றை பெறலாம். 


ஏர்டெல், ஜியோ மற்றும் வோடபோன்  ஆகியவற்றின் மலிவான திட்டங்கள்


மற்ற நிறுவனங்களின் ரீசார்ஜ் திட்டங்களைப் பார்த்தால், ஏர்டெல்லில் 100 ரூபாய்க்கும் குறைவான இரண்டு ப்ரீபெய்ட் திட்டங்கள் உள்ளன. இதில் 79 ரூபாய் மற்றும் 49 ரூபாய் திட்டம் உள்ளது. இந்த இரண்டு திட்டங்களிலும், பயனர்கள் 200MB தரவை மட்டுமே பெறுகிறார்கள். அதே நேரத்தில், ஜியோ ரூ .51 மற்றும் ரூ .21 திட்டத்தையும் கொண்டுள்ளது. இருப்பினும், இவை இரண்டும் டாப்-அப் திட்டங்கள் என்பது குறிப்பிடத்தக்கது, இதேபோல், வோடபோன்-ஐடியா ரூ 48 மற்றும் ரூ 98  ஆகிய கட்டணங்களில் இரண்டு திட்டங்களையும் வழங்குகிறது. இதில் உங்களுக்கு குறைந்த நன்மைகள் தான் உள்ளன.


ALSO READ | வருடத்திற்கு ஒரு முறை ரீசார்ஜ் செய்தால் போதும், சூப்பர் ரீசார்ஜ் ப்ளான்கள்


தேசம், சர்வதேசம், கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR