பிரசவத்திற்கே `do not disturb` போர்டு போட்ட கர்ப்பிணி மாணவிக்கு hats off!
பிரசவம் என்பது மறுபிறப்பு என்று சொல்வார்கள். கர்ப்பகாலத்தில் பல்வேறு சிக்கல்களை எதிர்கொள்ளும் பெண்கள் அதன் கிளைமேக்சாக வரும் பிரவத்தின் போது அச்சப்படுவார்கள். ஆனால் அமெரிக்காவில் Brianna Hill என்ற நிறைமாத கர்பிணிப் பெண்ணின் மன உறுதி ஆச்சரியப்படுத்துகிறது.
பிரசவம் என்பது மறுபிறப்பு என்று சொல்வார்கள். கர்ப்பகாலத்தில் பல்வேறு சிக்கல்களை எதிர்கொள்ளும் பெண்கள் அதன் கிளைமேக்சாக வரும் பிரவத்தின் போது அச்சப்படுவார்கள். ஆனால் அமெரிக்காவில் Brianna Hill என்ற நிறைமாத கர்பிணிப் பெண்ணின் மன உறுதி ஆச்சரியப்படுத்துகிறது.
பிரசவம் என்பது பெண்கள் அனைவரும் எதிர்கொள்ளும் ஒரு முக்கியமான தருணம். பிரசவ வேதனையைத் தவிர மனைவிக்காகவும், குழந்தைக்காகவும் பல்வேறு சிக்கல்களையும், பிரச்சனைகளையும் புன்சிரிப்புடன் ஏற்றுக் கொள்ளும் தாயுமானாவன் என்று சொல்லக்கூடிய சில ஆண்களும் இருக்கின்றனர்.
இதுவரை நாம் கேள்விப்பட்டிருக்கும் பிரசவங்களுக்கும் Brianna Hill தனது குழந்தையை பிரசவித்த தருணத்திற்கும் நிறைய வித்தியாசங்கள் உள்ளன. அமெரிக்காவில் லயோலா பல்கலைக்கழகத்தில் (Loyola University) பயிலும் Brianna Hill, பரிட்சை எழுதிக் கொண்டிருக்கும் போது இடைவெளியில் பிரசவத்தை முடித்துவிட்டு, மீண்டும் பரிட்சையை தொடர்ந்து எழுதி முடித்துள்ளார்.
மனம் இருந்தால், கல்வியில் நாட்டம் இருந்தால் பிரசவமும் இயல்பானதே என்பதை புரிய வைக்கும் ஊக்கியாக இந்த செய்தி இருக்கிறது. சிகாகோவைச் சேர்ந்த இந்த பெண், தேர்வை எழுதும் போது என்ன நடந்தாலும் சரி தேர்வை தவறவிடக்கூடாது என்ற உறுதியுடன், பிரசவ வலியைக் கூட தாங்கி தேர்வு எழுத முடியும், தேர்ச்சியும் பெறமுடியும் என்பதை நிரூபித்துள்ளார்.
அந்த வித்தியாசமான அனுபவத்தைப் பற்றி ABC News செய்தி நிறுவனத்திடம் தெரிவித்தார் Brianna Hill: "நான் எனது தேர்வை எழுதத் தொடங்கினேன், 15 முதல் 20 நிமிடங்களுக்குள் உடலுக்குள் ஏதோ மாற்றம் நிகழ்வதை உணர்ந்தேன். சுருக் சுருக் என்று வலிக்கத் தொடங்கியது".
கொரோனா தொற்று உலகையே புரட்டிப் போட்டிருக்கும் நிலையில், தேர்வுகள் பெரும்பாலும் ஆன்லைனில் நடத்தப்படுகிறது. தேர்வு எழுதுபவர்கள் மோசடி ஏதும் செய்துவிடக்கூடாது என்பதை உறுதிப் படுத்திக் கொள்வதற்காக பல்வேறு வழிகாட்டு நெறிமுறைகள் உருவாக்கப்பட்டுள்ளன. அதன்படி, தேர்வு எழுதும் தேர்வர்கள், தேர்வு எழுதும் போது கேமராவுடன் கணினிக்கு முன்னால் அமர வேண்டிடும். அப்படித்தான் Brianna Hill கேமராவின் கண்காணிப்பில் இருந்தார்.
"நான் 38 வார கர்ப்பிணியாக இருந்ததால், தேவைப்படும்போது, கழிவறைக்கு செல்ல அனுமதி கேட்டிருந்தேன், நான் மோசடி செய்ததாக கருதப்படலாம் என்ற அபாயமும் இருந்ததால், நான் கேமராவின் கண்காணிப்பில் இருந்து விலகவில்லை," என்று மாணவி கூறினார்.
தேர்வின் முதல் பகுதி முடியும் வரை ப்ரையானா ஹில் (Brianna Hill) தொடர்ந்து பரீட்சை எழுதினார்.
"அதன்பிறகு நான் சற்று ஓய்வு எடுத்துக்கொண்டேன், கழிவறைக்கு சென்றேன். சுத்தம் செய்துக் கொண்டேன். என்ன நடந்துவிடுமோ என்ற பயமும் இருந்தது. வலியும் கொஞ்சம் கொஞ்சமாக அதிகரித்துக் கொண்டிருந்தது. எனவே, என்னுடைய கணவர், மருத்துவச்சி மற்றும் அம்மாவுக்கு தகவல் சொன்னேன். எனக்கு அழுகையும் வந்தது. ஆனால், என்னை தைரியப்படுத்திக் கொண்டு இரண்டாம் கட்ட தேர்வுக்கு அமர்ந்துவிட்டேன். மருத்துவமனைக்கு உடனடியாக செல்ல வேண்டிய அவசியம் இல்லை என்று மருத்துவச்சி (midwife) சொல்லிவிட்டார். உண்மையான பிரசவ வலி எடுப்பதற்கு நேரம் இருக்கிறது என்று அவர் சொன்னதால், நச்சு வலியாக சுருக் சுருக் என தைத்த வலியுடன் அடுத்தக்கட்ட தேர்வை எழுத உட்கார்ந்துவிட்டேன்" என்று அவர் மேலும் கூறினார்.
ஊக்கமூட்டும் செய்தி | “ஏவுகணை நாயகன்” டாக்டர் APJ. அப்துல் கலாமின் 89-வது பிறந்த தினம் இன்று..!
தேர்வு முடிந்த பிறகு, மாலை 5:30 மணியளவில் அவர் மருத்துவமனைக்குச் சென்றார், இரவு 10 மணிக்குப் பிறகு ஆண் குழந்தையை பிரசவித்தார் Brianna Hill.
பார் தேர்வின் இரண்டாம் பாகத்தை (Bar exam) Brianna Hill முடிக்க வேண்டியிருந்தது, எனவே மருத்துவமனை ஊழியர்கள் அவருக்காக ஒரு தனி அறையை ஏற்பாடு செய்துக் கொடுத்தார்கள். கதவுக்கு வெளியே "do not disturb" என்ற போர்டை மாட்டி விட்டார்கள்.
"எஞ்சிய தேர்வை நான் மருத்துமனையின் "do not disturb" என்று எழுதப்பட்ட அறைக்குள்ளே எழுதினேன். தேர்வுகளுக்கு இடையில் குழந்தையை பார்க்கவும், பராமரிக்கவும் கூட வாய்ப்பு கிடைத்தது! நான் தேர்ச்சி பெற்றுவிடுவேனா இல்லையா என்பது ஒருபுறம். ஆனால், நான் பிரசவம் என்ற வாழ்க்கைத் தேர்வில் பாஸ் ஆகிவிட்டேன். ஆன்லைன் தேர்வின்போது, கேமராவின் கண்காணிப்பிலேயே தேர்வும் எழுதினேன், பிரசவ வலி எடுத்து குழந்தையும் பெற்றேன். பிரசவத்திற்காக கல்வியை தள்ளிப்போடவில்லை என்பதில் பெருமிதம் கொள்கிறேன்" என்று ஹில் கூறினார்.
உலகில் இதுபோன்ற சில சம்பவங்கள் அனைவருக்கும் ஊக்கம் ஊட்டி, தன்னம்பிக்கையை வளர்க்கிறது.
Read Also | அதிர்ச்சி சம்பவம்.. மனைவியை 1 ½ வருட காலம் பாத்ரூமில் அடைத்து வைத்திருந்த கணவன்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR